இந்த நேரம்.. நல்ல நேரம்... விறுவிறுனு உயர்கிறது மேட்டூர் அணை!
Recommended Video

மேட்டூர்: காவிரி நீர்பிடிப்புப் பகுதிகளில் தொடர் மழைபெய்து வருவதன் எதிரொலியாக, மேட்டூர் அணைக்கான நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்துவரும் கனமழை காரணமாக, கர்நாடக மாநிலத்தில் உள்ள கிருஷ்ணராஜ சாகர், கபினி அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் மேட்டூர் அணைக்கான நீர்வரத்து அதிகரித்து வருவதால், அணையின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது.
கர்நாடகா அணைகளில் இருந்து திறந்து விடப்பட்டுள்ள தண்ணீர் நாளுக்கு , நாள் அதிகரித்து வருவதால், 120 அடி கொண்ட மேட்டூர் அணையின் கடந்த 5 நாட்களில் 5.09 அடி உயர்ந்து, தற்போதைய நீர்மட்டம் 44.22 அடியாக உள்ளது. மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 8 ஆயிரத்து 291 கன அடியாக அதிகரித்துள்ளதால், குடிநீர் தேவைக்காக வினாடிக்கு ஆயிரம் கனஅடி நீர் திறக்கப்பட்டு வருகிறது.

சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்
இதற்கிடையே குற்றாலத்தில் நீர்வரத்து குறைந்துள்ளதால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். தென்மேற்கு பருவமழை தாமதமாக தொடங்கிய நிலையில் கடந்த சில வாரங்களாக குற்றால அருவிகளில் நீர்வரத்து அதிகரித்து காணப்பட்டது.

நீண்ட வரிசை
தற்போது, மழைப்பொழிவு குறைந்ததால், குற்றால அருவிகளிலும் நீர்வரத்து குறைந்துள்ளது. எனினும், விடுமுறை நாள் என்பதால் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளதால் அனைத்து அருவிகளிலும்
வரிசையில் நின்று குளிக்க சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்பட்டனர்.

கனமழை பெய்ய வாய்ப்பு
இதேபோல் தமிழக-கேரள எல்லைப் பகுதிகளில் கனமழை எச்சரிக்கை எதிரொலி காரணமாக, தேக்கடி ஏரி சுற்றுலா பயணிகள் இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது. இடுக்கி மாவட்டத்தில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது.

வெறிச்சோடியது
தேக்கடிக்கு வரும் சுற்றுலா பயணிகளின் வருகை வெகுவாக குறைந்ததால் தேக்கடி ஏரி வெறிச்சோடி காணப்பட்டது. மேலும் படகுகள் கரைப் பகுதியிலேயே நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications