தன்னை தானே கடவுள் என்று கூறி விளம்பரம் எடுத்தவர்தானே முதல்வர்.. பிரச்சாரத்தில் ஸ்டாலின் கிண்டல்!
தன்னை தானே கடவுள் என்று கூறி விளம்பரம் செய்தவர்தான் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி என்று திமுக தலைவர் ஸ்டாலின் சேலத்தில் பிரச்சாரத்தில் பேசியுள்ளார்.
Recommended Video

சேலம்: தன்னை தானே கடவுள் என்று கூறி விளம்பரம் செய்தவர்தான் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி என்று திமுக தலைவர் ஸ்டாலின் சேலத்தில் பிரச்சாரத்தில் பேசியுள்ளார்.
திமுக தலைவர் ஸ்டாலின் தற்போது தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகிறார். லோக்சபா தேர்தல் மற்றும் தமிழக சட்டமன்ற இடைத்தேர்தல் இரண்டிற்கும் சேர்த்து அவர் தீவிரமாக பிரச்சாரம் செய்கிறார்.
சேலத்தில் கோட்டை மைதானத்தில் திமுக சார்பில் இன்று பிரச்சார கூட்டம் நடைபெற்றது. திமுக தலைவர் ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரம் செய்தார். சேலம் திமுக வேட்பாளர் எஸ்.ஆர்.பார்த்திபனை ஆதரித்து ஸ்டாலின் பிரச்சாரம் செய்தார்.

என்ன திட்டங்கள்
திமுக தலைவர் ஸ்டாலின் தனது பேச்சில், திமுக ஆட்சியில் மக்களுக்கு பல நலத்திட்டங்கள் கொண்டு செல்லப்பட்டு இருக்கிறது . விவசாய கடன் ரத்து, சமத்துவபுரம், தமிழ்நாடு பெயர் சூட்டல், அனைத்து ஜாதியினர் அர்ச்சகர், மகளிர் சுய உதவி குழு, அரசு ஊழியர் சம்பள உயர்வு, தமிழுக்கு செம்மொழி, அருந்ததியர் உள் ஒதுக்கீடு, திருநங்கைகள் நலன், சேலம் உருட்டாலை, சேலம் ரயில்வே கோட்டம், சேலம் சூப்பர் ஸ்பெசாலிட்டி மருத்துவமனை என பல விஷயங்களை கொண்டு வந்தோம்.

அதிமுக முடியுமா
அதிமுக இது போன்று சொல்லமுடியுமா, அவர்கள் சாதனைகள் எல்லாம் வேதனைகள். கொடநாடு கொலை, தூத்துக்குடி துப்பாக்கி சூடு, தெர்மாகோல் சாதனை, அரசு ஊழியர்கள் டிஸ்மிஸ், முதல்வர் மீது கொலை குற்றச்சாட்டு என்று எல்லாமே அதிமுக மீதான குற்றச்சாட்டுகள்.
[தமிழக லோக்சபா தொகுதிகள் முழு விவரமும் தெரியனுமா? இங்கே வாங்க!]

ஊழல் ஊழல்
முட்டை, மின் விளக்கு, குட்கா உள்ளிட்ட பல்வேறு ஊழல்கள் இந்த ஆட்சியில் நடைபெற்று வருகிறது. லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரி, டி.ஜி.பி மீது ஊழல் புகார், கவர்னர் மீது நிர்மலா தேவி வழக்கு புகார், மோடி மீது ரபேல் ஊழல் புகார் என பல புகார்கள்.. அவர்கள்தான் ஆட்சியாளர்கள் என்பதால் அவர்களிடம் புகார் கொடுக்க முடியாது. பொதுமக்களாகிய உங்களிடம் புகார் கொடுக்க வந்துள்ளோம்.

தோல்வி அடைய செய்யுங்கள்
மோடி, எடப்பாடியை தோற்கடியுங்கள். இவர்களோடு மூன்றாவதாக மதிப்பிற்குரிய ராமதாஸ் அய்யா இணைந்துள்ளார். கடவுள் இல்லை என்றும், கடவுள் உண்டு என்றும் சொல்லும் முதல்வர்களை பார்த்திருக்கிறோம் நான்தான் கடவுள் என்பவர் எடப்பாடி. அவரை விமர்சனம் செய்தவர்தான் ராமதாஸ். இப்போது வெட்கமே இல்லாமல் இவர்கள் கூட்டணி வைத்துள்ளனர், என்று ஸ்டாலின் விமர்சனம் செய்துள்ளார்.
-
‘வாட்ச்' கொடுத்த திமுக.. அண்ணா அறிவாலய மகளிரணி ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றோருக்கு ‘ஜாக்பாட்' -
"தூக்க முடியல.. டிராலியில் வந்த புகார்கள்!" ஸ்டாலினிடம் அறிக்கையை ஒப்படைத்த திமுக கள ஆய்வுக்குழு! -
திமுக மகளிரணி கூட்டத்திற்கு வந்து! வரவேற்க யாரும் இல்லாததால் திரும்பிச் சென்ற துரைமுருகன் -
115 ஆக உயரும் திமுக மா.செ-க்கள் எண்ணிக்கை.. கட்சிக்குள் ‘இளம் ரத்தம்’ பாய்ச்ச ஸ்டாலின் விதித்த கெடு! -
திமுகவில் 30+ மாவட்ட செயலாளர்கள் மாற்றம்? கனிமொழிக்கு ‘செயல் தலைவர்’ பதவி? ஸ்டாலின் மாஸ்டர் பிளான்! -
"சிங்கப்பெண் ரீல்ஸ் ஒருபக்கம்.. சீரழிக்கும் தவெக கட்சியினர் மறுபக்கம்”.. திமுக சரமாரி அட்டாக்! -
"தவெகவுக்கு ஏன் வாக்களித்தோம் என மக்கள் வேதனை".. விஜய் ஆட்சியை கடுமையாக விமர்சித்த ஸ்டாலின்! -
விஜய்யை கணிக்கல.. முதுகில் குத்திருக்காங்க.. திமுக தோல்விக்கு காரணம்.. ஸ்டாலின் மேஜையில் ரிப்போர்ட் -
தீர்ந்து போன சக்தியிடம் திருடிய காஞ்சு போன சக்தி.. விமர்சித்த ஸ்டாலின்.. தவெக கொடுத்த பதிலடி -
முரசொலி நிலம் வழக்கு: “புகார் அளித்தவர் பட்டியலினத்தவர் இல்லை”- ஐகோர்ட்டில் திமுக தரப்பு வைத்த வாதம் -
வைத்திலிங்கத்துக்கு மீண்டும் சிக்கல்.. லஞ்ச ஒழிப்புத்துறை முடித்து வைத்த வழக்கை ஓபன் செய்த தவெக அரசு -
முதல்வர் விஜய் டெல்லி போக காரணமே இதுதானே.. உடைத்து பேசிய ஸ்டாலின்! ஸ்டன் ஆன தவெகவினர்!











Click it and Unblock the Notifications