கருமுட்டை விற்பனை.. வெளிமாநில மருத்துவமனைகளுக்கு தொடர்பு? தோண்ட தோண்ட வரும் திடுக் தகவல்கள்
சேலம்: 16 வயது சிறுமியிடம் இருந்து கருமுட்டை எடுத்து விற்பனை செய்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், இது குறித்து சுகாதாரத்துறை இணை இயக்குநர் விஸ்வநாதன் சில முக்கிய தகவல்களைத் தெரிவித்துள்ளார்.
Recommended Video
ஈரோட்டைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது கணவரைப் பிரிந்து மகளுடன் வாழ்ந்து வந்துள்ளார். அப்போது பெயிண்டர் ஆக வேலை பார்த்துவரும் சையத் அலி என்பவருடன் நெருங்கிப் பழகி வந்துள்ளார்.
அந்த பெண் கருமுட்டை விற்பனை செய்யும் தொழிலில் இறங்கியிருக்கிறார். இந்த சூழலில் அந்தப் பெண்ணின் மகள் 12- வயதில் பூப்படைந்து உள்ளார்.

பாலியல் சீண்டல்
அப்போது அந்த பெண்ணின் கள்ளக்காதலன் அந்த சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபடுவதும், பாலியல் வன்கொடுமை செய்வதும் என இருந்துள்ளார். இதற்கு அவருடைய தாயும் உடந்தையாக இருந்ததாகத் தெரிகிறது. அதோடு மருத்துவமனைக்கு அந்த சிறுமியை அழைத்துச் சென்று கருமுட்டை தானம் செய்ததாகத் தெரிகிறது. இதன் மூலம் அந்த பெண்ணிற்கு சுமார் 20 முதல் 30 ஆயிரம் வரையில் பணம் கிடைத்ததாகவும் இதற்கு புரோக்கராக செயல்பட்ட பெண்ணிற்கு ரூ.5 ஆயிரம் வழங்கியதாகக் கூறப்படுகிறது.

விசாரணை
இந்த விவகாரம் அவர்களின் உறவினர்கள் மூலம் வெளியே தெரியவே சிறுமியின் தாய் அவருடைய கள்ளக்காதலன் சையத் அலி மற்றும் புரோக்கராக செயல்பட்ட பெண் ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சிறுமி அளித்த தகவலின் பேரில் ஈரோடு,சேலம்,பெருந்துறை உள்ளிட்ட பகுதிகளில் சுகாதாரத்துறை இணை இயக்குநர் விஸ்வநாதன் தலைமையிலான குழுவினர் சோதனை நடத்தினர்.

இணை இயக்குநர்
அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சுகாதாரத்துறை இணை இயக்குநர் விஸ்வநாதன் கூறுகையில், "16 வயது சிறுமியிடம் கருமுட்டையைப் பெற்று விற்பனை செய்ததாகத் தகவல் வெளியானது. இதனடிப்படையில் சிறுமியிடம் நாங்கள் வாக்குமூலம் பெற்ற அந்த வாக்குமூலத்தில் பல்வேறு மருத்துவமனைகளுக்கு அழைத்துச் சென்று கருமுட்டைகளை எடுத்ததாகத் தெரிவித்தார். அதன் அடிப்படையில் அவர் கூறிய அந்த மருத்துவமனைகளுக்குச் சென்று ஆய்வு மேற்கொண்டு வருகிறோம்.

கடும் நடவடிக்கை
ஈரோட்டிலும் பெருந்துறையிலும் ஆய்வு செய்தோம். சேலத்திலும் ஆய்வு செய்தோம். மருத்துவமனையில் உள்ள மருத்துவமனையில் உள்ள பதிவேடுகளைச் சரிபார்த்து வருகிறோம். இதில் தவறு செய்திருந்தால் அந்த மருத்துவமனை மீது நடவடிக்கை எடுக்கப்படும். கருமுட்டை விற்பனை விவகாரத்தில் விதி மீறலில் ஈடுபட்ட மருத்துவமனைகள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்.

வெளிமாநில மருத்துவமனை
ஆவணங்கள் அடிப்படையிலேயே கருமுட்டை எடுக்கப்பட்டதாக விசாரணையின் போது மருத்துவமனை தரப்பில் விளக்கம் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதனைத் தொடர்ந்து ஓசூர் சென்று விசாரிக்க உள்ளோம்" என்றார். மேலும், வெளிமாநிலங்களில் விசாரணை நடத்தப்படுமா என்ற கேள்விக்குப் பதில் அளித்த அவர், "அந்த சிறுமி ஆந்திரா மற்றும் கேரளாவிற்கும் தன்னை அழைத்துச் சென்றதாகக் கூறி இருக்கிறார் . மேலும் மருத்துவமனைகளிலும் சிறுமியிடம் இருந்து பெறப்பட்ட முட்டைகள் ஆந்திரா, கேரளா மாநிலங்களுக்கு விற்கப்பட்டதாகவும் தெரிய வந்துள்ளது.

குறைந்தபட்ச வயது
கருமுட்டை எடுக்கப்படும் வயது 18இல் தற்போது 21 வயதாக அதிகரிக்கப்பட்டுள்ளது. எனவே 21 ஒரு வயதுக்கு மேல் உள்ளவர்களிடம் மட்டும் தான் கருமுட்டையை அவர்களது அனுமதியோடு எடுக்க வேண்டும். ஆனால் இந்த சிறுமியிடம் 14 வயது முதலே கரு முட்டை எடுக்கப்பட்டது. இதுவரை 2 ஆண்டுகளாகக் கருமுட்டை எடுத்து விற்றுள்ளனர். எனவே இதில் தொடர்புடைய மருத்துவமனை மீது மருத்துவ சட்டங்களுக்கு உட்பட்டு கடும் நடவடிக்கை எடுக்கப்படும்" என்று அவர் தெரிவித்தார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ரஷ்யா வச்ச ஆப்பு.. தள்ளுபடிலாம் தர முடியாது.. பிரீமியம் கட்டணம்! கச்சா எண்ணெய்க்கு 425% கூடுதல் தொகை -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
"அண்ணாமலை வந்ததால் பாஜக ஒன்னும் பலமாகவில்லை".. ஒரு இதழை கூட அசைக்க முடியாது.. தமிழிசை ‘அட்டாக்' -
நாங்க தோத்துட்டோம்.. ஆனா சாகலை! விஜய்க்கு ஏதாவது ஆச்சுனா கம்பெனி பொறுப்பில்லை! மாஜி கொடுத்த வார்னிங் -
ஒரு மேயர் பதவியையாவது ஜெயிச்சு பாருங்க..நான் என் ஒரு பக்க மீசையை எடுத்துக்குறேன்! ஆர்எஸ் பாரதி சவால்












Click it and Unblock the Notifications