என்ன விஜய் இதெல்லாம்? சேலத்தில் மானத்தை வாங்கிய தவெகவினர்.. அப்பட்டமான விதிமீறல்!

Subscribe to Oneindia Tamil

சேலம்: தவெக கட்சியின் சின்னம் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு, விநியோகிக்க இருந்த சில்வர் டப்பாக்கள் சமீபத்தில் பறிமுதல் செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில், இன்று சேலத்தில், இதேபோல தவெக சின்னம் ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட தண்ணீர் பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டிருக்கின்றன.

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட அடுத்த நொடியிலிருந்து மாதிரி நடத்தை விதிகள் அமலுக்கு வந்துவிடும். எனவே, கட்சியினர் தங்கள் கட்சியின் சின்னம், கொடி, வேட்பாளரின் புகைப்படம் பொறிக்கப்பட்ட பொருட்களை விநியோகிப்பதை நிறுத்த வேண்டும். மீறி செய்தால் அது வாக்காளர்களுக்கு கொடுக்கப்படும் லஞ்சமாக கணக்கில் கொள்ளப்படும்.

TVK

இப்படியான லஞ்ச வழக்கில்தான் தவெக தொடர்ந்து சிக்கியிருக்கிறது. சில நாட்களுக்கு முன்னர், நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு பகுதியில், தவெக நிர்வாகி அருண்ராஜ் புகைப்படம் மற்றும் தவெக கொடி அச்சிடப்பட்ட சில்வர் டப்பாக்கள், பொதுமக்களிடம் விநியோகிக்க வைக்கப்பட்டிருந்தது. இதனை பறக்கும் படையினர் அதிரடியாக பறிமுதல் செய்திருந்தனர். இப்படி இருக்கையில், தற்போது தவெக ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட தண்ணீர் பாட்டில்களும் பறிமுதல் செய்யப்பட்டிருக்கின்றன.

சேலம் மாவட்டம் சூரமங்கலம் பகுதியில், மசூதி முன்பு சுமார் ஆயிரக்கணக்கான தவகெ ஸ்டிகர் ஒட்டப்பட்டிருந்த தண்ணீர் பாட்டில்கள் வைக்கப்பட்டு, தொழுகைக்கு வரும் மக்களிடையே விநியோகம் செய்யப்பட்டிருந்தன. இது தேர்தல் விதிமீறலாகும். எனவே பொதுமக்கள் புகார் அளித்திருந்தனர். புகாரின் அடிப்படையில், பறக்கும் படையினர் தண்ணீர் பாட்டில்களை பறிமுதல் செய்யப்பட்டிருக்கின்றன.

இதேபோல பொதுமக்களுக்கு விநியோகம் செய்ய பூஸ்ட் பாட்டில்கள் வைக்கப்பட்டிருந்ததாக வீடியோ வெளியாகி சலசலப்பை ஏற்படுத்தியிருந்தது. ஆனால், அதெல்லாம் போன மாதம் எடுத்த வீடியோ என்று கட்சியினர் சமாளித்திருந்தனர்.

எது எப்படி இருந்தாலும், இலவசங்களுக்கு எதிராக பேசும் தவெகவினர் எதற்காக மக்களுக்கு இலவசமாக டப்பாக்களையும் மற்ற பொருட்களையும் கொடுக்க வேண்டும். உண்மையில் தொழுகைக்கு வரும் இஸ்லாமிய மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்று எண்ணம் இருந்தால், ஸ்டிகர் ஒட்டப்படாத தண்ணீர் பாட்டில்களை விநியோகித்திருக்கலாமே என்று பல்வேறு தரப்பினரும் கேள்வி எழுப்பியிருக்கின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+