பல நாள் வேட்டையாடிய 2 பேர்.. இன்னோவா காரில் வலம் வந்த போது மாறுவேடத்தில் பிடித்தது போலீஸ்
சேலம் அருகே மான் இறைச்சி விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்
சேலம்: வெறும் 2 பேர்தான்.. வேட்டையாடப்பட்டதோ 500-க்கும் மேல்.. அதனால்தான் மாறுவேடத்தில் போலீசார் சென்று இவர்களை அள்ளி கொண்டு வந்து சிறையிலும் அடைத்துவிட்டனர்.
சேலம் மாவட்டத்தில் உள்ள வனப்பகுதிகளில் சுமார் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மான்கள் வசித்து வருகின்றன. ஆனால் சில சமூகவிரோதிகள் மான் வேட்டையில் அதிகமாக ஈடுபட்டு வருவதாக தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் இருந்தன. குறிப்பாக கடந்த ஒரு வருஷமாகவே 500க்கும் மேற்பட்ட மான்கள் வேட்டையாடப்பட்டுள்ளதாக சொல்லப்பட்டது.

அதனால் இதனை தடுக்க சேலம் மாநகர காவல் உதவி ஆணையர் தங்கதுரை, தனது நேரடி பார்வையில் 5 பேர் கொண்ட தனிப்படையை அமைத்தார். இந்த குழுவினர் வேட்டையாடப்படும் மான்கள் விற்பனை செய்யப்படும் இடங்களை அறிந்து, அங்கு மாறு வேடத்தில் விசாரணையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது இன்னோவா காரில் வந்த கும்பலை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். காருக்குள் 14 பொட்டலங்கள் இருந்தன. ஒவ்வொரு பொட்டலத்திலும் ஒரு ஒரு கிலோ மான் கறி சுற்றப்பட்டு இருந்தது.

அவற்றை பறிமுதல் செய்த போலீசார் காரில் இருந்த லோகநாதன், லட்சுமணன் ஆகியோரை ரகசிய இடத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள தங்களது நண்பர்களுக்கு இறைச்சியை விற்பனை செய்ய செல்வதாக கூறினர். இதையடுத்து, அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்திய போலீசார், சிறையில் அடைத்தனர்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications