செம குஷி.. மாநாட்டுக்காக உழைத்த நிர்வாகிகளை அழைத்து ‘தங்க மோதிரம்’ அணிவித்த உதயநிதி ஸ்டாலின்!
சேலம்: சேலத்தில் நேற்று திமுக இளைஞரணி மாநாடு பிரமாண்டமாக நடைபெற்று முடிந்த நிலையில், மாநாட்டுக்காக பணியாற்றிய நிர்வாகிகளுக்கு தங்க மோதிரம் அணிவித்து பாராட்டினார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.
சேலம் பெத்தநாயக்கன் பாளையத்தில், திமுக இளைஞரணி செயலாளரும், அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் தலைமையில் பிரமாண்டமாக, 2ஆவது மாநில இளைஞரணி மாநாட்டை நடத்தி முடித்துள்ளது திமுக. இன்னும் சில மாதங்களில் மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், பாஜகவுக்கு எதிரான தீர்மானங்கள் இந்த மாநாட்டில் நிறைவேற்றப்பட்டன.

சுமார் 1.5 லட்சம் பேருக்கு இருக்கை, 2 லட்சம் தொண்டர்களுக்கு அசைவ விருந்து, ஸ்நாக்ஸ் என சிறப்பான ஏற்பாடுகளுடன் நடைபெற்றது இந்த மாநாடு. பெரியார், அண்ணா, கருணாநிதி, ஸ்டாலின் மற்றும் உதயநிதி ஸ்டாலின் ஆகியோரின் பிரமாண்ட கட் அவுட்கள், பேனர்கள், ட்ரோன் ஷோ என மிக பிரம்மாண்டமான ஏற்பாட்டில் நடந்தது இளைஞரணி மாநாடு.
இளைஞரணி மாநாட்டில் பேசிய தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலினை புகழ்ந்து பேசினர். இந்த மாநாடு திமுகவுக்கு ஒரு புத்துணர்ச்சியை கொடுத்துள்ளது. அவ்வளவு சிறப்பாக மாநாட்டை நடத்தி காட்டியிருக்கிறீர்கள். உங்கள் உழைப்புக்கு உரிய பலன் வந்து சேரும் என்று தெரிவித்தார் ஸ்டாலின்.
இந்த மாநாடு குறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், “ 'இப்படை தோற்கின் எப்படை வெல்லும்' என்பது போல் இந்திய ஒன்றியமே உற்று நோக்கி வியக்கும் அளவுக்கு வெற்றி மாநாடாக நடந்து முடிந்திருக்கிறது நமது இளைஞர் அணியின் 2- வது மாநில மாநாடு. நாம் பெற்றிருக்கின்ற இந்த வெற்றியைத் தேர்தல் வெற்றிக்கு முன்னோட்டமாக எடுத்துக் கொண்டு 'நாற்பதும் நமதே நாடும் நமதே' என்ற கழகத் தலைவர் அவர்களின் லட்சியத்தை நிறைவேற்றிட அயராது உழைப்போம்!” எனத் தெரிவித்தார்.
இந்நிலையில், இன்று சேலத்தில் தனியார் ஹோட்டல் ஒன்றில், திமுக நிர்வாகிகளுக்கு பாராட்டு தெரிவித்தார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின். சேலத்தில் மாநாடு முடிந்து, முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்டோர் சென்னைக்குச் சென்ற நிலையில், உதயநிதி ஸ்டாலின் சேலத்தில் தங்கி இருந்து இன்று, மாநாட்டிற்காக உழைத்த கட்சி நிர்வாகிகளை பாராட்டி அவர்களுக்கு கணையாழி அணிவித்துள்ளார்.
திமுக முதன்மைச் செயலாளரும், அமைச்சருமான கே.என்.நேரு, இந்த இளைஞரணி மாநாட்டின் ஒருங்கிணைப்பாளராகச் செயல்பட்டார். நாள்தோறும், மாநாட்டு ஏற்பாடுகளை பார்வையிட்டு, கட்சி நிர்வாகிகளை பணிகளில் ஈடுபடுத்தி, சிறப்பான முறையில் இந்த மாநாடு நடைபெற உழைத்தார். அவரை மனம் திறந்து பாராட்டிய உதயநிதி ஸ்டாலின், அவருடன் துணை நின்று உழைத்த கட்சி நிர்வாகிகளுக்கும் பாராட்டு தெரிவித்து முத்திரை மோதிரம் அணிவித்தார்.
இதுதொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள உதயநிதி ஸ்டாலின், “கழக இளைஞர் அணி மாநாட்டை வரலாற்றில் என்றும் நிலைத்திருக்கும் வகையில் மாபெரும் வெற்றி மாநாடாக நடத்தியுள்ளோம். நம் இளைஞர் அணி மாநாட்டின் வெற்றிக்காக இரவு - பகல் பாராது அயராது உழைத்த சேலம் மாவட்ட கழகங்களைச் சேர்ந்த மாவட்ட - ஒன்றிய - நகர - பகுதி - பேரூர் - கிளை நிர்வாகிகளுக்கு அவர்களின் பணிகளை போற்றி அங்கீகரிக்கும் விதமாக கணையாழி அணிவித்து மகிழ்ந்தோம். கழக வெற்றிக்காக தொடர்ந்து கரம் கோர்த்து உழைப்போம். இந்தியா கூட்டணியை வெல்லச் செய்வோம்.” எனத் தெரிவித்துள்ளார்.
-
Delimitation: பொருளாதாரம், நிதி ஆதாரத்தில் பெரிய ஓட்டை விழும்.. தென்னிந்திய மாநிலங்களுக்கு 'இரட்டை தண்டனையா'? -
தொகுதி மறுவரையறை.. திமுக எம்பிக்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை -
தலைமை செயலகம் வந்த ஜோஸ் சார்லஸ் மார்ட்டின்.. உதயநிதி ஸ்டாலின் மீது புகார் -
நானும் டெல்டா காரன் தான்.. ஸ்டாலின் சொன்னதில் இதுதான் பெரிய காமெடி! அட்டாக் மோடில் அன்புமணி ராமதாஸ் -
8,000 ரூபாய் கூப்பன்.. என்ன வாங்கலாம்? இப்போது இந்த 'டிஸ்கஷன்'தான் ஓடுகிறது! ஸ்டாலின் சொன்ன மெசேஜ்! -
Delimitation! தமிழகத்திற்கு மாபெரும் அநீதி! நாளை வீடுகளில் கருப்புக் கொடி போராட்டம்- ஸ்டாலின் -
மாப்ள சிவசங்கர் தான்.. ஆனால் சட்டை செந்தில் பாலாஜியோடது! திமுகவின் போலி கூப்பன்! அன்புமணி அட்டாக்! -
கடுகடு ராகுல்.. கண்டு கொள்ளாத ஸ்டாலின்! கரையேறுமா காங்கிரஸ்? தனி ரூட் எடுத்துப் பாயும் அறிவாலயம்! -
உதயநிதி ஸ்டாலின் சொத்து விவரங்களில் முரண்பாடு..? வருமான வரித்துறைக்கு ஐகோர்ட் நோட்டீஸ்! -
முதல் நாளே அமெரிக்காவுக்கு வெற்றி.. ஹார்முஸ் வழியாக 34 கப்பல்கள் சென்றன - டிரம்ப் பதிவு -
கைப்புள்ள, நாய் சேகர்னு எனக்கும் பட்ட பெயர் வைக்க தெரியும்! பிடிஆருக்கு சுந்தர் சி பதிலடி -
வார்த்தையை விட்ட எடப்பாடி பழனிசாமி.. வரிந்து கட்டிய பிரேமலதா.. செல்போனில் காரசார உரையாடல்












Click it and Unblock the Notifications