உதயநிதி கேட்ட கேள்வி.. படக்குன்னு உண்மையை சொன்ன மாணவன்.. ஆக்சன் எடுப்பதாக ஆன்ஸ்பாட்டில் உறுதி
சேலத்தில் உள்ள துவக்கப்பள்ளியில் உதயநிதி ஸ்டாலின், மாணவர்களுடன் அமர்ந்து காலை உணவு சாப்பிட்டது இணையதளங்களில் பேசுபொருளாகி உள்ளது.
சேலம்: சேலத்தில் உள்ள துவக்கப்பள்ளியில் இன்று காலை சிற்றுண்டியை ஆய்வு செய்தேன். இதில் குழந்தைகள் ஒரு சில குறைகளை கூறினார்கள். அவர்களிடம் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தேன் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 2-வது நாளாக இன்றும் சேலம் மண்டலத்திற்கு உட்பட்ட பகுதிகளுக்கான கள ஆய்வு கூட்டம் நடந்தது. இந்த கள ஆய்வில் பங்கேற்பதற்காக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சேலத்திற்கு இன்று வருகை புரிந்தார்.
இதனிடையே சேலம் மாநகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் இன்று காலை திடீரென அரசு பள்ளிகளில் காலை சிற்றுண்டி திட்டத்தை ஆய்வு மேற்கொண்டார். சேலம் மணியனூர் மற்றும் நெத்திமேடு பகுதியில் உள்ள மாநகராட்சி தொடக்க பள்ளியில் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார்.

அடிக்கடி உணவு
இது தொடர்பாக உதயநிதி வெளியிட்ட ட்வீட் பதிவில், சேலம் மாநகராட்சிக்கு உள்பட்ட திருவாக்கவுண்டனூர் துவக்கப் பள்ளிக்கு சென்று மாணவர்களுடன் சிற்றுண்டி உண்ட உதயநிதி, முதலமைச்சரின் காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை ஆய்வு செய்தோம். உணவின் தரம், சுவை, உணவு வரும் நேரம், மாணவர்கள் வரவர அவர்களுக்கு உணவு வழங்கப்படுகிறதா என்பதை உறுதி செய்தோம் என்று கூறினார்.

காலை சிற்றுண்டி
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று செய்தியாளர்களிடம் பேசுகையில், "தமிழக அரசின் மிக உன்னதமான காலை சிற்றுண்டி திட்டத்தின் கீழ் குழந்தைகளுக்கு சிற்றுண்டிகள் எவ்வாறு வழங்கப்படுகின்றன என்பது குறித்து ஆய்வு செய்தேன். இதில் குழந்தைகள் ஒரு சில குறைகளை கூறினார்கள். அவர்களிடம் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தேன்.

பள்ளிக்கு வருகை
தமிழ்நாட்டில் காலை சிற்றுண்டி திட்டம் தொடங்கியதற்கு காரணமே குழந்தைகள் பள்ளிக்கு வர வேண்டும் என்ற நோக்கத்தில் தொடங்கி உள்ளோம். தற்போது குழந்தைகள் அதிக அளவில் பள்ளிக்கு வருகின்றனர். காலை சிற்றுண்டி உணவு தரமானதாக உள்ளது. குழந்தைகள் விரும்பி சாப்பிடுகின்றனர். காலை சிற்றுண்டியில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு உணவு வகை வழங்கப்படுகிறது.

உணவு தாருங்கள்
இதனால் மாணவர்கள் பள்ளிக்கு சீக்கிரம் வருகிறார்கள். பள்ளியில் நன்கு படிக்கிறார்கள், அனைத்து மாணவர்களுக்கும் பாரபட்சம் இன்றி உணவு வழங்கப்படுகிறது. உணவு வழங்குவது தொடர்பான கையேடுகளை முறையாக பராமரிக்க உத்தரவிட்டுள்ளோம். கழிவறைகளை தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்துள்ளேன். இது தொடர்பாக ஆசிரியர்களுக்கும், பணியாளர்களுக்கும் அறிவுறுத்தியுள்ளேன்" இவ்வாறு உதயநிதி ஸ்டாலின் கூறினார்.

உதயநிதியின் அக்கறை
இதனிடையே மாணவர்களுடன் சேர்ந்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சாப்பிட்ட வீடியோ ட்விட்டரில் வெளியாகி உள்ளது. அந்த வீடியோவில் உதயநிதி ஸ்டாலின், மாணவர்களிடம் சாப்பாடு நல்லா இருக்கிறதா என்று அக்கறையுடன் கேட்கிறார். இதேபோல் சமையல் அறைக்கு சென்று எப்படி உணவு சமைக்கப்படுகிறது என்பதை கேட்டு அறிகிறார். இதேபோல் உதயநிதி ஸ்டாலின் வகுப்பறைகளுக்கு சென்று மாணவர்களின் கல்வி குறித்தும் விசாரித்தார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications