சேலத்தில் ஷோரூம் கண்ணாடியை உடைத்து கொண்டு வெளியே வந்த கார்,.. டெமோ காட்ட போனவர் என்ன ஆனார் தெரியுமா?
சேலம்: சேலத்தில் ஒருவர் கார் வாங்க ஆசைப்பட்டுள்ளார்.. பெரும்பாலானோருக்கு கார் வாங்குவது வாழ்வின் லட்சியங்களில் ஒன்றாக இருக்கும்.. அதுபோலத்தான் இந்த நபரும் ஆசை ஆசையாக கார் வாங்க ஷோ ரூம் சென்றுள்ளார்.. அப்போதுதான் இந்த பரபரப்பான சம்பவம் நடந்துள்ளது.. சேலம் மாவட்டம் முழுவதும் இச்சம்பவம் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது.. அத்துடன் சாலை பாதுகாப்பு குறித்த கவலையையும் இந்த சம்பவம் முன்வைத்துள்ளது.
சேலம் மாவட்டம், சங்ககிரியிலிருந்து திருச்செங்கோடு செல்லும் பிரதான சாலையில் மாருதி சுஸுகி அரேனா கார் ஷோரூம் ஒன்று செயல்பட்டு வருகிறது.. இங்குதான் புதிய கார் வாங்குவதற்காக கஸ்டமர் ஒருவர் சென்றுள்ளார்..

கஸ்டமருக்கு டேமோ காட்டிய ஊழியர்
இந்த கஸ்டமருக்காக, கடை ஊழியர்கள் காரில் டெமோ காட்டி உள்ளார்கள்.. வழக்கமாக ஷோரூம் ஊழியர் டெமோ காரின் டிரைவர் சீட்டில் உட்கார்ந்துதான், கஸ்டமர்களுக்கு காரின் ஸ்பெஷாலிட்டிகள் குறித்து விளக்குவார்கள்.. அப்படித்தான் இந்த கடை ஊழியரும் காரில் அமர்ந்து விளக்கி கொண்டிருந்தார்..
அப்போது எதிர்பாராத விதமாக, கார் ஏற்கனவே ஆன் நிலையில் இருந்த நிலையில், ஊழியர் தவறுதலாக ஆக்ஸலரேட்டர் பெடலை அழுத்திவிட்டார்.. இதனால் அடுத்த நொடியிலேயே, கார் திடீரென சீறிப்பாய்ந்து, ஷோரூமின் முன்புற கண்ணாடிகளை உடைத்துக்கொண்டு வெளியே போய் வந்தது.
கரண்ட் கம்பத்தில் மோதியது
அதுமட்டுமல்ல, கட்டுப்பாட்டை இழந்த கார், ஷோரூம் கண்ணாடியை உடைத்து பரபரப்பான பிரதான சாலையில் தாறுமாறாக ஓடி, சாலையோரம் இருந்த கரண்ட் கம்பத்தில் மோதி, அந்த மின் கம்பத்தை உடைத்துக்கொண்டு, சுமார் 20 அடி தூரம் சென்று சாலையை கடந்து எதிர்புறத்தில் போய் கார் நின்றது.
கண்ணிமைக்கும் நேரத்தில் இவ்வளவும் நடந்து முடிந்துவிட்டது.. ஆனால், விபத்து நடந்த நேரத்தில் சாலையில் லாரி உள்ளிட்ட கனரக வாகனங்கள் எதுவும் வராததால், காருக்குள் இருந்த ஷோரூம் ஊழியர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்... இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
நொறுங்கிய ஷோரும் கண்ணாடிகள்
ஆனால், உடைந்த மின் கம்பம் உயர் மின்னழுத்தம் கொண்டதாக இருந்ததால், தகவல் அறிந்த மின் வாரிய ஊழியர்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மின்சாரத்தை துண்டித்து சீரமைப்பு பணிகளில் ஈடுபட்டனர்.
இந்த சம்பவத்தில் கார் விபத்தை ஏற்படுத்தியவர் வாடிக்கையாளர் அல்ல, ஷோரூம் ஊழியரே என்பதால் கூடுதல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக ஷோரூம் நிர்வாகத்திடம் விசாரணை நடந்து வருவதாக தெரிகிறது..
இதனிடையே, ஷோரூம் கண்ணாடிகளை உடைத்துக்கொண்டு பரபரப்பான சாலையில் கார் சீறிச்செல்லும் இந்த சிசிடிவி காட்சிகள் சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
கார் ஓட்ட தெரியாதா? எழும் சந்தேகங்கள்
சேலம் மாவட்டம் முழுவதும் இது பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது.. காரணம், இந்த விபத்து, கார் ஷோரூம்களில் பின்பற்றப்படும் பாதுகாப்பு நடைமுறைகள் குறித்தும், டெமோ வாகனங்களை இயக்கும் போது கடைபிடிக்க வேண்டிய கட்டுப்பாடுகள் குறித்தும் பல கேள்விகளை எழுப்பியுள்ளது..
குறிப்பாக, ஷோரூம் ஊழியருக்கு கார் ஓட்ட தெரியாதா? அல்லது அவசர நிலையில் கட்டுப்படுத்த முடியவில்லையா? ஷோரூமுக்குள் வைக்கப்பட்டிருக்கும் வாகனங்கள் முழுமையாக ஆஃப் நிலையில் இருக்க வேண்டுமா? என்பன போன்ற கேள்விகள் எழுந்துள்ளன. அத்துடன் டெமோ காட்டும் முன்பு இரட்டை பாதுகாப்பு சரிபார்ப்பு அவசியமா என்பதையும் கவனிக்க வேண்டி உள்ளது..!!












Click it and Unblock the Notifications