எடப்பாடி பழனிசாமிக்கு 'செக்' வைக்கும் விஜய்! களமிறங்கும் ரகசிய வேட்பாளர்.. அதிர்ச்சியில் அதிமுக
சென்னை: தமிழ்நாட்டில் வாக்குப்பதிவுக்கு சில நாட்களே மட்டும் உள்ள நிலையில், மாநிலத்தின் ஸ்டார் தொகுதிகளில் ஒன்றான எடப்பாடி தொகுதியில் நடக்கும் அதிரடி மாற்றங்கள் அரசியல் வட்டாரத்தைக் கவனத்தை ஈர்த்துள்ளது. தவெகவின் வேட்புமனுக்கள் எடப்பாடியில் நிராகரிக்கப்பட்ட நிலையில், அக்கட்சியின் தலைவர் விஜய் பிளான் Bஐ கையில் எடுத்துள்ளார். இதன் பின்னணி குறித்து நாம் பார்க்கலாம்!
தமிழ்நாட்டில் சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் இரு வாரங்களே உள்ள நிலையில், மாநிலம் முழுக்க பிரச்சாரம் தீவிரமடைந்துள்ளது. இந்த தேர்தலில் திமுக, அதிமுக, நாதக கட்சிகளுடன் விஜய் முதல்முறையாகக் களமிறங்குகிறார். வேறு கட்சிகளுடன் கூட்டணி அமைக்க முடியாத சூழலில், விஜய் கட்சி மாநிலத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டது.

எடப்பாடியில் அதிர்ச்சி
அதன்படி மாநிலத்தில் அனைத்து தொகுதிகளிலும் போட்டியிடும் வேட்பாளர்களும் அறிவிக்கப்பட்டனர். அக்கட்சித் தலைவர் விஜய் பெரம்பூர், திருச்சி கிழக்கு என இரு தொகுதிகளில் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டது. மேலும் மாநிலம் முழுக்க தவெக வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர்.
அதில் எடப்பாடி தொகுதியில் தவெகவுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. வாக்குப்பதிவுக்கு முன்பே தவெக அங்குத் தோல்வியைத் தழுவிவிட்டது என்றே சொல்லலாம். ஏனென்றால் அந்த தொகுதியில் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக தவெக சார்பில் அருண்குமார் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டது. அவர் வேட்புமனு தாக்கல் செய்த நிலையில், மாற்று வேட்பாளராக அவரது மனைவி நித்யா வேட்புமனு தாக்கல் செய்தார்.
தள்ளுபடி
இருப்பினும் இருவரின் மனுக்களும் உரிய முறையில் வேட்புமனுவை நிரப்பவில்லை எனச் சொல்லி தள்ளுபடி செய்யப்பட்டன. இது அக்கட்சித் தொண்டர்களிடையே பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியது. எடப்பாடியில் திமுகவுக்கு எதிரான வாக்குகள் பிரிந்துவிடக்கூடாது என்பதற்காக அதிமுக தலைமையே இதைச் செய்துள்ளதாகக் கொந்தளித்தனர். சரியா வேட்பாளரைத் தலைமை அறிவிக்காததாலேயே இப்படி நடந்துவிட்டதாகப் புலம்பியுள்ளனர். மாநிலத்தின் ஸ்டார் தொகுதியில் தவெக போட்டி இல்லை என்றால் எப்படி என ஆதங்கப்பட்டுள்ளனர்.
பிளான் பி
இது விஜய் காதுக்குப் போய் இருக்கிறது.. எடப்பாடி தொகுதியில் தவெகவின் தாக்கம் இருக்க வேண்டும் என்பதற்காக ஒரு புதிய திட்டத்தைத் தீட்டியுள்ளது தவெக தலைமை! அதாவது எடப்பாடியில் இப்போது 15 பேர் களத்தில் உள்ளனர். அதிமுக சார்பில் எடப்பாடி பழனிசாமி, திமுக சார்பில் காசி, நாம் தமிழர் சார்பில் பிரியதர்ஷினி, தமிழக வாழ்வுரிமை கட்சி சார்பில் கோவிந்தராஜ், சசிகலாவின் அஇபுதமமுக சார்பில் சுரேஷ் போட்டியிடுகிறார்கள். இவர்களைத் தவிர மற்ற 10 பேர் சுயேச்சைகளாகவே போட்டியிடுகிறார்கள்.
அந்த சுயேச்சை வேட்பாளர்களில் ஒருவரான பிரேம்குமார் என்பவரை விஜய் தரப்பு அடையாளம் கண்டுள்ளது. தவெக ஆதரவு பெற்ற வேட்பாளராக பிரேம்குமாரை களமிறக்கத் திட்டமிட்டுள்ளனர். தவெக வேட்பாளர் வேட்புமனு நிராகரிக்கப்பட்ட நிலையில், இந்த திட்டத்தை தவெக தலைமை போட்டுள்ளது. எடப்பாடியில் உள்ள தவெக தொண்டர்கள் இவருக்காக வேலை செய்ய வேண்டும் என அறிவுறுத்தியுள்ளனர்..
எல்லாம் ஓகே
விஜய் தரப்பின் இந்த திட்டம் அதிமுக தரப்பிற்குப் போயுள்ளது. உடனடியாக அதிமுக தரப்பு பிரேம்குமாரை தொடர்பு கொண்டு தவெக ஆதரவு வேட்பாளராகக் களமிறங்க வேண்டாம் எனச் சொன்னதாகத் தெரிகிறது. இருப்பினும், அதற்குள் முந்திக்கொண்ட தவெக தரப்பு நேரடியாக விஜய்யிடம் போனில் பேச வைத்துள்ளனர். அதன் பிறகே இது இறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று இரவு அல்லது நாளை இது தொடர்பான அறிவிப்பு வெளியாகும் எனத் தெரிகிறது.
-
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
பாத்து பண்ணி விடுங்க.. ராஜ்யசபா சீட்டுக்கு அடி போடும் காங்.,? விஜய்யிடம் நேரில் பேசிய ப.சிதம்பரம்! -
கையை மீறி போகும் டாஸ்மாக் விவகாரம்.. நேரடியாக இறங்கிய விஜய்.. ஒரே நேரத்தில் 2 பிரச்சனைகளுக்குத் தீர்வு! -
உங்க வயசு என் அனுபவம்.. சீனியருக்கு மரியாதையில்லை! ஆனந்த் - ஆதவ் - அருணுக்கு அடுத்து செங்கோட்டையன்! -
எடப்பாடி பழனிசாமியை விஜய் சந்திக்காதது ஏன் தெரியுமா? இதென்ன ட்விஸ்ட் ? மொத்த அதிமுகவை அள்ளுதே தவெக -
விஜய் சொன்ன ஒரு வரி... கமல் எழுதிய கடிதம்... ஸ்டாலின் நினைவுபடுத்திய கலைஞர்! இளையராஜா நெகிழ்ச்சி -
எடப்பாடி பழனிசாமிக்கு நிம்மதி.. IT விசாரணை கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம் -
கேள்வியே கேட்க கூடாதா.. 6 மாசத்துல என்ன நடக்குதுனு பாருங்க.. விஜயை சாடிய அனிதா ராதாகிருஷ்ணன் -
மகள் கல்யாணத்திற்காக முதல்வர் விஜய்யை சந்தித்த குஷ்பு குடும்பம்.. வெளியே வந்ததும் உருக்கமான பதிவு -
ரீல்ஸ் போட்டு ஆட்சிக்கு வந்து.. ரீல் விட்டு ஆட்சியை தொடரலாமா? விஜய் கனவு பலிக்காது! டிடிவி அட்டாக்!












Click it and Unblock the Notifications