Vijay Salem Meet: சேலத்தில் விஜய் கூட்டம்.. கியூஆர் கோடு இல்லாதவங்க வராதீங்க! ஸ்ட்ரிக்ட் ஆக சொன்ன புஸ்ஸி ஆனந்த்
சென்னை: சேலத்தில் நாளை தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம் நடக்கிறது. இதில் விஜய் பங்கேற்று பேசுகிறார். இந்த நிலையில் இக்கூட்டத்திற்கு அனுமதி சீட்டு பெற்றவர்கள் மட்டுமே வர வேண்டும் என்றும், அனுமதி சீட்டு இல்லாதவர்கள், பொதுமக்கள் யாரும் வரவேண்டாம் என்றும் அக்கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் தெரிவித்துள்ளார்.
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜயின் கூட்டம் நாளை சேலத்தில் உள்ள கேவிஎன் கார்டன் பகுதியில் நடைபெறுகிறது. கடைசியாக கடந்த டிசம்பர் 13 ஆம் தேதி ஈரோட்டில் மக்கள் சந்திப்பு பிரசாரத்தை நடத்திய விஜய், அதன்பிறகு மாமல்லபுரத்தில் கட்சியின் செயல்வீரர்கள் கூட்டத்திலும், தமிழக வெற்றிக்கழகத்தின் மூன்றாவது ஆண்டு தொடக்க விழா நிகழ்ச்சியில் மட்டுமே பங்கேற்றார்.

இரண்டு மாதங்கள் கழித்து
ஈரோடு மக்கள் சந்திப்புக்கு பிறகு இரண்டு மாதங்கள் கழித்து சேலத்தில் மக்கள் சந்திப்புக்கு தவெகவினர் அனுமதி கேட்டனர். ஆனால் வழிகாட்டு நெறிமுறை விதிகளை சுட்டிக்காடி போலீசார் அனுமதி தரவில்லை. இதையடுத்து, மக்கள் சந்திப்பு கூட்டத்தை நிர்வாகிகள் சந்திப்பு கூட்டமாக மாற்றிய தவெகவினர், 5 ஆயிரம் பேர் மட்டுமே கலந்து கொள்ள வேண்டும் என்ற நிபந்தனையுடன் அனுமதி பெற்றனர்.
இதையடுத்து விஜய் பங்கேற்கும் நிகழ்ச்சிக்காக ஏற்பாடுகள் முழு வீச்சில் தயாராகி வருகின்றன. ஈரோடு மக்கள் சந்திப்பு கூட்டத்தை போலவே விஜய் தனது பிரசார பேருந்தில் நின்றபடி பேச உள்ளார். ஜனநாயகன் பட பிரச்சினை, கரூர் தொடர்பான சிபிஐ விசாரணை என அடுத்தடுத்த பல நெருக்கடிகளை சந்தித்து வரும் விஜய், நாளைய நிர்வாகிகள் சந்திப்பு கூட்டத்தில் தன் மீதான விமர்சனங்களுக்கு பதிலடி கொடுப்பார் என்று தெரிகிறது.
4,998 பேருக்கு மட்டுமே அனுமதி
இந்த நிலையில் கரூர் கூட்டநெரிசல் சம்பவத்தை போல் ஆகிவிடக்கூடாது என்பதற்காக புஸ்சி ஆனந்த், சேலம் மாவட்ட செயலாளர், நிர்வாகிகள் கூட்டம் நடக்கும் இடத்தில் நடந்து வரும் ஏற்பாடுகளை ஆய்வு செய்தனர். இந்த நிலையில் நாளை நடக்கும் கூட்டத்திற்கு அனுமதி சீட்டு கொடுத்த 4998 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்றும், பொதுமக்கள், அனுமதி சீட்டு இல்லாதவர்கள் வரக்கூடாது என தவெக அறிவுறுத்தியுள்ளது.
இது தொடர்பாக தவெக தலைமை நிலையச் செயலகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:- மக்கள் விரும்பும் முதல்வர் வேட்பாளர், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் பங்குபெறும் கழக நிர்வாகிகள் சந்திப்பு மற்றும் தேர்தல் பரப்புரை நிகழ்ச்சி, நாளை (பிப்ரவரி 13ஆம் தேதி) வெள்ளிக்கிழமை அன்று, சேலம் சீலநாயக்கன்பட்டி, KVP கார்டன் உள்வளாகத்தில், மதியம் 12.00 மணி முதல் 3.00 மணிக்குள் நடைபெற உள்ளது.
பொதுமக்கள் யாரும் வரவேண்டாம்
காவல் துறை அனுமதிக்கான வழிகாட்டு நெறிமுறைகளின்படி இந்த நிகழ்ச்சியானது முழுக்க முழுக்க அனுமதி பெற்றவர்களுக்கான சந்திப்பு நிகழ்ச்சியாக மாவட்ட நிர்வாகிகளால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. QR குறியீட்டுடன் கூடிய நுழைவுச் சீட்டு அளிக்கப்பட்டுள்ள 4998 பேர் மட்டுமே இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள அனுமதிக்கப்படுவார்கள். வேறு யாருக்கும் கண்டிப்பாக அனுமதி கிடையாது.
அனுமதிச் சீட்டு பெறாத கழகத் தோழர்களும் பொதுமக்களும் நேரில் வருவதைக் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டுகிறோம். இந்த நிகழ்ச்சியைத் தொலைக்காட்சி நேரலைகளில் கண்டு, அனுமதிச் சீட்டு பெற்றிருப்பவர்கள் மட்டுமே பங்கேற்க முழு ஒத்துழைப்பு தருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். என்று கூறப்பட்டுள்ளது.
-
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன் -
சென்னையில் வெடிக்கும் பிரியா vs விஜய் மோதல்.. மேயர் - முதல்வர் இடையே மறைமுக யுத்தம்.. என்ன காரணம்? -
Hey Everybody! ‘முதல்வன்’ அர்ஜுனான தவெக சமஉக்கள்! கேமராவைக் கண்டு அலறும் ஆபீசர்ஸ்! தவெகவுக்கு தலைவலி -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
நாளை திருச்சி வரும் விஜய்.. நேரில் சந்திக்கிறாரா விஜயபாஸ்கர்? அதிமுகவில் விழப்போகும் அடுத்த விக்கெட் -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
சென்னை புதிய ஆட்சியர் எஸ். மாலதி ஹெலன் IAS.. விஜய் களமிறக்கிய மாஸ்டர்மைண்ட்.. யார் இவர்? -
தவெகவில் இணைவது உறுதி போலயே.. அமைச்சருடன் கோயிலுக்கு வந்த விஜயபாஸ்கர்.. அடுத்தது என்ன? -
எடப்பாடி பழனிசாமி இந்த அதிர்ச்சியை தாங்குவாரா? மேலும் 3 அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா? -
விஜய் இஸ் இஞ்சூரியஸ் டூ இரட்டை இலை.. அதிமுகவின் ஒவ்வொரு செங்கலையும் பிரிக்கும் தவெக! எடப்பாடி ஷாக்! -
தவெக குதிரை பேரம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தவேண்டும்.. ஆளுநரை சந்தித்து அதிமுக நிர்வாகிகள் புகார்












Click it and Unblock the Notifications