விஜய் அலையிலும் அசையாத எடப்பாடியின் சேலம் கோட்டை.. அதிமுகவின் ரியல் வாக்கு வங்கி!

Subscribe to Oneindia Tamil

சேலம்: தமிழ்நாட்டில் வீசிய விஜய் அலையிலும் சேலம் மாவட்டத்தை எடப்பாடி பழனிசாமி தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்திருக்கிறார். சேலம் மாவட்டத்தில் உள்ள 11 தொகுதிகளில் 7ல் அதிமுகவும், 4ல் தவெகவும் வெற்றி பெற்றுள்ளன.

தமிழ்நாடு சட்டசபைத் தேர்தலில் தவெக 108 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. திமுக 73 தொகுதிகளிலும், அதிமுக 53 தொகுதிகளிலும் வெற்றிபெற்றுள்ளன. நடிகர் விஜய் தலைமையிலான தவெக முதல் தேர்தலிலேயே அதிக சீட்டுகளை பெற்று ஆட்சியமைக்க இருக்கிறது. இது இரு திராவிட கட்சிகளின் ஆதரவாளர்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

Vijay Edappadi Palaniswami tvk tamil nadu election 2026

தமிழ்நாடு முழுவதும் விஜய் அலை வீசியதாகவே பார்க்கப்படுகிறது. கட்சித் தொடங்கி 2 ஆண்டுகளில் விஜய் அரியணை ஏறி இருக்கிறார். இளைஞர்கள் மற்றும் பெண்கள் பெருவாரியாக தவெகவுக்கு வாக்களித்திருக்கின்றனர். சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், மதுரை, கோவை, காஞ்சிபுரம், நெல்லை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் தவெக அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது.

இருப்பினும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சொந்த மாவட்டமான சேலத்தை தனது கண்ட்ரோலில் வைத்திருந்திருக்கிறார். பாமக கூட்டணியும் வலுசேர்த்திருக்கிறது. சேலம் மாவட்டத்தில் உள்ள 11 தொகுதிகளில் 7ல் அதிமுகவும், 4ல் தவெகவும் வெற்றி பெற்றுள்ளன. மேட்டூர் தொகுதியில் அதிமுக வேட்பாளர் வெங்கடாச்சலம் சுமார் 18 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வென்றுள்ளார்.

இங்கு திமுக வேட்பாளர் மிதுன் சக்ரவர்த்தி 2வது இடம் பிடித்துள்ளார். எடப்பாடி தொகுதியில் அதிமுக வேட்பாளர் பழனிசாமி வென்றுள்ளார். 2வது இடத்தை சுயேட்சை வேட்பாளர் பிரேம்குமர் வென்றுள்ளார். சங்ககிரி தொகுதியில் அதிமுக வேட்பாளர் வெற்றிவேல் சுமார் 10 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வென்றிருக்கிறார்.

சேலம் மேற்கு தொகுதியில் தவெக வேட்பாளர் லட்சுமணன் சுமார் 75 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வென்றுள்ளார். சேலம் தெற்கு தொகுதியில் தவெக வேட்பாளர் பார்த்திபன் சுமார் 40 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். இங்கு திமுக வேட்பாளர் லோகநாதன் 58 ஆயிரம் வாக்குகள் பெற்று 2வது இடத்தை பிடித்திருக்கிறார்.

சேலம் வடக்கு தொகுதியில் தவெக வேட்பாளர் சிவக்குமார் சுமார் 14 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் அமைச்சர் ராஜேந்திரனை வீழ்த்தி இருக்கிறார். வீரபாண்டி தொகுதியில் தவெக வேட்பாளர் பழனிவேல் 79,907 வாக்குகள் பெற்று சுமார் 4,071 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றுள்ளார். இங்கு அதிமுக வேட்பாளர் பாலாஜி சுகுமர் 2வது இடத்தை பிடித்திருக்கிறார்.

ஓமலூர் தொகுதியில் அதிமுக வேட்பாளர் ஆர்.மணி 14,539 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றுள்ளார். தவெக வேட்பாளர் அதியமான் 97,707 வாக்குகள் பெற்று 2வது இடத்தை பிடித்திருக்கிறார். ஏற்காடு தொகுதியில் அதிமுக வேட்பாளர் உஷாராணி 2,225 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். இங்கு தவெக வேட்பாளர் லட்சுமி 85,583 வாக்குகள் பெற்று 2வது இடம் பிடித்துள்ளார்.

ஆத்தூர் தொகுதியில் அதிமுக வேட்பாளர் ஜெயசங்கரன் 15,318 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றுள்ளார். இங்கும் தவெக வேட்பாளர் செல்வபாரதி 65,525 வாக்குகள் பெற்று 2வது இடம் பிடித்துள்ளார். கெங்கவல்லி தொகுதியில் அதிமுக வேட்பாளர் நல்லதம்பி 73,167 வாக்குகள் பெற்று வென்றுள்ளார். இங்கு திமுக வேட்பாளர் சின்னதுரை 58,763 வாக்குகளையும், தவெக வேட்பாளர் சுஜாதா 55,291 வாக்குகளையும் பெற்றுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+