நான்தான் லோக்கல்னு சொல்றேன்ல.. ஹெல்மெட் போடாததுதான் இப்ப பிரச்சினையா.. போலீஸாருடன் வாக்குவாதம்!
ஹெல்மட் விவகாரம் குறித்து போலீசாருடன் நபர் ஒருவர் வாக்குவாதம் செய்கிறார்
Recommended Video
சேலம்: "ஏங்க.. நான் லோக்கல்னு சொல்றேன் இல்லை.. இப்ப நான் ஹெல்மட் போடாததுதான் உங்களக்கு பிரச்சனையா? மீதி கேஸ் எல்லாம் கண்டுபிடிச்சிட்டீங்களா" என்று நபர் ஒருவர் போலீசாரிடம் கேள்வி எழுப்புகிறார்.
ஹெல்மட் பஞ்சாயத்து பெரும் பஞ்சாயத்தாக மாறி வருகிறது. சேலம் மாவட்டம் தாரமங்கலத்தில் இது சம்பந்தமாக ஓரு சம்பவம் நடந்துள்ளது.

அது ஒரு தெரு போல காணப்படுகிறது. அக்கம்பக்கம் வீடுகள், வீட்டு வாசற்படியில் மக்கள் உட்கார்ந்துள்ளனர். ஒருசிலர் வீட்டுக்கு வெளியே லுங்கி, பனியனுடன் நடமாடுகிறார்கள். அப்போது, ராயல் என்பீல்டு பைக்கில் வந்த ஒரு நபரை அங்கிருந்த போலீசார் தடுத்து நிறுத்தி ஹெல்மட் ஏன் போடலை என்று கேட்கிறார்.
அதற்கு அந்த நபர் "நான் உள்ளுர்க்காரர் சார். லோக்கல்ல போறதுக்கு எதுக்கு ஹெல்மட்? எங்க வேணும்னாலும் அனுப்புங்க.. நான் பார்த்துக்கறேன். எதுக்கு சார் என்னை பிடிக்கறீங்க? நான் லோக்கல்-ன்னு சொல்றேன் இல்லை? திருடு போயி, ஒரு கம்ப்ளைன்ட் கொடுத்தா, அது கண்டுபிடிக்கிறது இல்லை.
அங்கே ஊருக்குள்ள ஆடு திருடு போச்சுன்னு சொன்னாங்க இல்லே.. கோயில்ல திருடு போச்சுன்னு சொன்னாங்க இல்லை.. அதெல்லாம் கண்டுபிடிச்சிட்டீங்களா? இப்ப நான் ஊருக்குள்ள ஹெல்மட் போடாததுதான் உங்களுக்கு பிரச்சனையா?
எடுங்க இதை வீடியோ எடுத்து போடுங்க பார்க்கலாம். எப்ஐஆர் போடுங்க, அதை அனுப்புங்க.. எனக்கு எதை பத்தியும் கவலை கிடையாது" என்றார். உடனே போலீஸ்காரர், "நீ தண்ணி அடிச்சிருக்கியா" என கேட்க, "ஐயோ.. தண்ணி அடிக்கிற பழக்கம் எனக்கு இல்லை. நாங்க லோக்கல் ரோட்டுக்குள்ள போறோம், எங்களை தடுக்காம அனுப்பி விட்டுருங்க.
பொதுமக்களுக்கு நீங்க எல்லாம் மரியாதை தரணும். எப்ப பார்த்தாலும் போற வர்ற வண்டியை பிடிச்சிட்டு இருக்கங்களே.. நாங்க எந்த வேலைக்குமே அப்ப போககூடாதா" என்று கேட்கிறார். "வண்டி எல்லா ரிக்கார்ட்ஸையும் எடுத்துட்டு வா" என்று போலீஸ்காரர் அங்கிருந்து நகர்கிறார்.
ஊருக்குள்ள.. லோக்கல்ல போறதுக்குகூட ஹெல்மட் தேவையா என்பது குறித்து நபர் ஒருவர் போலீசாருடன் வாக்குவாதம் செய்யும் இந்த வீடியோதான் வைரலாகி வருகிறது.
-
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்! -
ஐடி துறையை கதறவிட்ட எலான் மஸ்க்! ஒரே ஆண்டில் கோடிங் எழுதும் வேலையை மொத்தமாக AI காலி செய்யுமாம்! -
“ஆண் உறுப்பின் சைஸை பார்ப்போம்..” பெண் டாக்டர் பேச்சால் சர்ச்சை! சவக்கிடங்கில் இதுதான் நடக்குதா? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது












Click it and Unblock the Notifications