மாஸ் போஸ்டர்.. "பெண்ணின் மனதை திருடிட்டாரு".. "வாலிபர் கைது".. வேற லெவல் சிந்தனை இது!
மேட்டூர் அருகே வைக்கப்பட்டுள்ள திருமண பேனர் வைரலாகிறது
சேலம்: எப்படியெல்லாம் புதுசு புதுசா யோசிக்கறாங்கப்பா.. மேட்டூர் கல்யாணம் ஒன்றிற்காக வைக்கப்பட்ட பேனர் ஒன்றுதான் இணையத்தில் வைரலாகி வருகிறது.
சேலம் மாவட்டம் மேட்டூரை அடுத்த மாசிலாபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ஹெலன் சிந்தியா... இவருக்கும் கன்னியாகுமரி மாவட்டம் மணக்குடி சேர்ந்த ஸ்டீபன் ராஜ் என்பவருக்கும் கல்யாணம் நிச்சயம் செய்துள்ளனர்.

வருகிற 30-ந் தேதி கல்யாணம் நடக்க இருக்கிறது.. அதற்காக இரு தரப்பு வீட்டினலும் மும்முர கல்யாண வேலைகளில் இறங்கி உள்ளனர்... பத்திரிகைககளை அடித்து ஊர் முழுக்க தந்து அனைவரையும் கல்யாணத்துக்கு அழைத்து வருகின்றனர்.

இதில் மணமகன் தரப்புதான் வேற லெவலுக்கு சென்றுள்ளது... கல்யாண திருமண விழாவிற்காக வித்தியாசமான பேனர் ஒன்றை வைத்துள்ளனர். அதில் வழக்கம்போல் மணமக்களின் போட்டோ பெரிசாக உள்ளது.. அதற்கு பக்கத்தில், "வாலிபர் கைது" என்றும், "குற்றம் பெண்ணின் மனதை திருடியது" என்றும், "தீர்ப்பு மனதை திருடிய பெண்ணை திருமணம் செய்வது" என்றும் இடம் பெற்றிருந்தது.

இதற்கு "சாட்சிகள் அத்தான்மார்கள்" என 4 பேரின் புகைப்படங்களும் உள்ளன.. இந்த வித்தியாசமான பேனரை பொதுமக்கள் பார்த்தபடியே செல்கின்றனர்.. அத்துடன் செல்போனிலும் படம் பிடித்து ஷேர் செய்து வருகின்றனர். இது யார் தந்த ஐடியாவாக இருந்தாலும்.. மக்களின் மனசை அப்படியே அள்ளி வருகிறது.. மணமக்களுக்கு வாழ்த்துக்களுடன்!
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications