சேலம் அருகே கடனை வசூலிக்க தனியார் வங்கி ஊழியர்கள் செய்த வேலை.. வடிவேலுவின் வாழ்க்கையே முடிந்தது

Subscribe to Oneindia Tamil

சேலம்: சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே துக்கியாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த விவசாயி வடிவேல், தனியார் வங்கியில் நிலத்தை அடமானம் வைத்து ரூ.4.80 லட்சம் கடன் பெற்றார். 4 ஆண்டுகளுக்கு முன்பு பெற்ற கடனுக்கான தவணையை சரியாக செலுத்தி வந்த நிலையில், இந்த மாதம் 20 நாட்கள் தாமதமானதாக கூறப்படுகிறது. இதனால் நேற்று மாலை விவசாயி வடிவேலு வீட்டிற்கு சென்ற தனியார் வங்கி ஊழியர்கள் தவணையை செலுத்துமாறு தரக்குறைவாக பேசினார்களாம். இதனால் விவசாயி எடுத்த முடிவு ஊர் மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

வங்கிகள் மற்றும் தனியார் நிதி நிறுவனங்கள், கடன் வாங்கியவர்களிடம் கடன் தொகையை திரும்ப வசூலிக்க ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதல்களை தான் பின்பற்ற வேண்டும். வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் கடன் வாங்கியவரிடம் அடாவடியான முறையில் நடந்து கொள்வதோ, மிரட்டுவதோ, அவமானப்படுத்துவதோ, இழிச்சொற்களால் பேசுவதோ கூடாது. கடன் வாங்கியவரகளுக்கு உரிய சட்ட முறைகளின் படி நோட்டீஸ் கொடுத்து, அவர்களுக்கு கால அவகாசம் கொடுக்க வேண்டும். அதன்பின்னர் நீதிமன்ற வழிகாட்டுதல்களின் படி தான் நடந்து கொள்ள வேண்டும்.ஆனால் கந்து வட்டிக்காரர்களை போலவே வங்கிகளும், நிதி நிறுவனங்களும் நடந்து கொள்வது அதிகரித்துவிட்டது.

What did private bank employees do to collect the loan near Salem What did Vadivel do

கடனை திரும்பப் பெற, கடன் கொடுத்தவர் முதலில் தவணை தவறிய நபரைத் தொடர்புகொண்டு, தவணை தவறிய காரணத்தை அறிய வேண்டும். அதன்பின்னரும் தவணை தவறினால், கடனைத் திரும்பப் பெற சில வழிகள் உள்ளன. முதலில் கடன் வழங்கும் நிதி நிறுவனங்கங்ள, கடனைத் திரும்பப் பெறுவதற்கான சட்டபூர்வ வழிகளைப் பின்பற்ற வேண்டும். அதன்படி, நீதிமன்றத்தில் வழக்கு தொடரலாம் அல்லது கடன் வசூலிக்கும் நிறுவனங்களை நியமிக்கலாம்.

கடன் வசூலிக்கும் நிறுவனங்கள், கடன் தவறிய நபரை சட்டவிரோதமாக மிரட்டக்கூடாது அல்லது துன்புறுத்தக்கூடாது. கடன் வசூலிக்கும் நிறுவனங்கள், கடன் தவறிய நபரின் தனிப்பட்ட தகவல்களைப் பகிர்ந்துகொள்ளக்கூடாது. இப்படி பல்வேறு விஷயங்கள் உள்ளன. ஆனாலும் மிரட்டி அசிங்கப்படுத்துவது பல இடங்களில் நடக்கிறது.

அப்படி ஒரு சம்பவம் சேலம் மாவட்டத்தில் நடந்துள்ளது. சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே துக்கியாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த விவசாயி வடிவேல், தனியார் வங்கியில் நிலத்தை அடமானம் வைத்து ரூ.4.80 லட்சம் கடன் பெற்றார். 4 ஆண்டுகளுக்கு முன்பு பெற்ற கடனுக்கான தவணையை சரியாக செலுத்தி வந்த நிலையில், இந்த மாதம் 20 நாட்கள் தாமதமானதாக கூறப்படுகிறது.

இதனால் நேற்று மாலை விவசாயி வடிவேலு வீட்டிற்கு சென்ற தனியார் வங்கி ஊழியர்கள் தவணையை செலுத்துமாறு தரக்குறைவாக பேசினார்கள் என கூறப்படுகிறது. தனியார் வங்கி ஊழியர்களின் நெருக்கடியால் விரக்தி அடைந்த விவசாயி வடிவேல் மருந்து குடித்து வாழ்க்கையை முடித்துக் கொண்டார். இந்த சம்பவம் சேலம் வாழப்பாடி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதனிடையே கடனை வலுக்கட்டாயமாக வசூலித்தால் 5 ஆண்டு சிறை தண்டனை மற்றும் ரூ.5 லட்சம் அபராதம் விதிக்க வகை செய்யும் மசோதா தமிழ்நாட்டில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கடன் வழங்கிய நிறுவனமோ, அதன் முகவரோ, கடன் வாங்கியவர் மற்றும் அவரது குடும்பத்தினரை வலுக்கட்டாய நடவடிக்கைக்கு உட்படுத்த கூடாது. அந்த வகையில், அவர்களுக்கு இடையூறு ஏற்படுத்துவது, வன்முறையை பயன்படுத்துவது, அவமதிப்பது, மிரட்டுவது, அவர்கள் செல்லும் இடங்களில் பின்தொடர்வது, அவர்களுக்கு சொந்தமான அல்லது பயன்படுத்தும் சொத்துகளில் தலையிடுவது, அதை பயன்படுத்த முடியாமல் இடையூறு செய்வது, அந்த சொத்துகளை பறித்துக் கொள்வது ஆகிய செயல்களில் ஈடுபட கூடாது.

கடன் பெற்றவர் அல்லது அவரது குடும்ப உறுப்பினர் யாராவது தற்கொலை செய்து, அதற்கு கடன் வழங்கிய நிறுவனம் அல்லது முகவரின் வலுக்கட்டாய நடவடிக்கை காரணமாக இருந்தால், அது பாரதிய நியாய சன்ஹிதா சட்டத்தின் 108-வது பிரிவின்கீழ் குற்றமாக கருதப்படும். மேலும், கடன் வழங்கும் நிறுவனம் பதிவு சான்றிதழ் பெறாமல் கடன் வழங்கினால், 3 ஆண்டு சிறை தண்டனை மற்றும் ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்படும்.

தற்கொலை எந்த பிரச்சனைக்கும் தீர்வு அல்ல.. உங்களுக்கு மன அழுத்தம் உண்டானாலோ அல்லது தற்கொலை எண்ணம் எழுந்தாலோ, கீழ்கண்ட எண்களை தொடர்பு கொள்ளலாம்:

சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -2464000 (24 மணி நேரம்)

மாநில தற்கொலை தடுப்பு உதவி மையம் - 104 (24 மணி நேரம்)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+