உதயநிதிக்கு அமைச்சர் பதவியா? என்னவாகும் தெரியுமா.. டிரேட் மார்க் சிரிப்பில் பாஜகவையும் சீண்டிய சீமான்

Subscribe to Oneindia Tamil

சேலம்: சேப்பாக்கம் தொகுதி எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக ஆனால் என்ன நடக்கும் என்பது குறித்து நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கிண்டலாக தெரிவித்துள்ளார்.

சேலம் மாவட்டம் அஸ்தம்பட்டி பகுதியில் கடந்த 2017ஆம் ஆண்டு நாம் தமிழர் கட்சி சார்பில் பொதுக் கூட்டம் நடந்தது. இந்த பொதுக் கூட்டத்தில் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், வன்முறையை தூண்டும் வகையில் பேசியதாக அஸ்தம்பட்டி போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.

இந்த வழக்கு விசாரணைக்கு சேலம் ஒருங்கிணைந்த 3ஆவது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் சீமான் ஆஜராகவில்லை. இதனால் அவருக்கு பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டது. இதையடுத்து நேற்றைய தினம் சீமான் சேலம் 3ஆவது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜரானார்.

வழக்கு விசாரணை

வழக்கு விசாரணை

இந்த வழக்கு விசாரணையை முடித்துக் கொண்டு வெளியே வந்த சீமான் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில் ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசு மசோதாவை தாக்கல் செய்தது. அதில் ஆளுநர் கையெழுத்து போடாமல் தாமதித்து இன்று காலாவதியானது. இது எந்த வகையில் நியாயம்?

மசோதா

மசோதா

மக்களால் தேர்வு செய்யப்பட்ட ஒரு அரசின் மசோதாவை மக்களால் தேர்வு செய்யப்படாத நியமன பதவியில் உள்ள ஆளுநர் தடை செய்கிறார். எனவே முன்னாள் முதல்வர் அறிஞர் அண்ணா சொன்னது போல் ஆட்டுக்கு எதற்கு தாடி, நாட்டுக்கு எதற்கு ஆளுநர் என்பதுதான் எங்களுடைய நிலைப்பாடு என்றார். சீமானிடம் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

சட்டம் ஒழுங்கு

சட்டம் ஒழுங்கு

அதற்கு அவர் கூறுகையில் சட்டம் ஒழுங்கு எப்படி இருக்கிறது என்று கேட்க வேண்டிய நிலையில் இருக்கிறது என்றார். உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சர் பதவி கொடுப்பது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் கூறுகையில் உதயநிதி அமைச்சரானால் நாடே தலைகீழாக மாறிவிடும். சிங்கப்பூர் போல் தமிழகம் மாறிவிடும் என கிண்டலாக சீமான் பதில் அளித்தார்.

பாஜகவிடம் அடிமையாக இருக்கிறதா

பாஜகவிடம் அடிமையாக இருக்கிறதா

அதிமுக பாஜகவிடம் அடிமையாக இருக்கிறதா என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் கூறுகையில், அப்படி ஒரு நிலையில் அதிமுக இல்லை என்றுதான் நான் நினைக்கிறேன். பாஜகதான் தமிழகத்தில் யார் காலடியிலாவது இருக்க வேண்டிய நிலை உள்ளது. பெரிய கட்சி பாஜக என சொல்கிறார்கள். ஆனால் தனித்து போட்டியிட பயப்படுகிறார்களே!

தனித்து போட்டி

தனித்து போட்டி

இப்போது சொல்கிறேன், வரும் 2024 ஆம் ஆண்டு நடக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிடும். பாஜகவும் தனித்து போட்டியிடட்டும். அப்போது தெரியும், யார் பெரிய கட்சி என்பது! நான் வேலை எடுத்தால் பாஜகவும் எடுக்கிறார்கள். நான் முருகா என அழைத்தால் அவர்களும் அழைக்கிறார்கள். நான் ஈழம் குறித்து பேசினால் அவர்களும் பேசுவார்கள்.

கச்சத்தீவுக்கு கப்சிப்

கச்சத்தீவுக்கு கப்சிப்

ஆனால் நான் கச்சத்தீவை மீட்கணும் என சொன்னால் அவர்கள் எதையும் பேசாமல் கப்சிப் என இருப்பார்கள். காவிரி நதிநீர் உரிமையை பெற்றுத் தர வேண்டும் என சொன்னால் அதற்கும் பாஜக எதையும் பேசாமல் அமைதியாக இருப்பார்கள். தமிழகத்தில் தமிழ் மொழி ஆட்சி மொழியாக அங்கீகரிக்கப்படவில்லை. நாடாளுமன்றத்தில் கூட தமிழில் பேசுவதற்கு உரிமை இல்லை. இப்படியிருக்கும் போது காசியில் தமிழ் சங்கமம் மூலம் தமிழை வளர்க்கிறேன் என சொன்னால் எப்படி ஏற்க முடியும் என சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.

வேல் யாத்திரை

வேல் யாத்திரை

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும் வயநாடு தொகுதியின் எம்பியுமான ராகுல் காந்தி இந்திய ஒற்றுமை யாத்திரையை தொடங்கியுள்ளார். எப்போதுமே யாத்திரைகள், பேரணிகள், நடைபயணம் உள்ளிட்டவைகளுக்கு மவுசு உள்ளது. அந்த வகையில் தமிழகத்தில் சில கோரிக்கைகளை வலியுறுத்தி பாமக தலைவர் அன்புமணி ராமதாஸும் டெல்டா மாவட்டங்களில் நடைபயணம் மேற்கொண்டிருந்தார். தமிழக பாஜக தலைவராக எல் முருகன் இருந்த போது அவர் தலைமையில் நடத்திய வேல் யாத்திரை பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. இந்த முறையும் அது போன்றதொரு யாத்திரையை தொடங்கலாமா என்ற யோசனையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையும் இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.

 அமைச்சராகிறாரா உதயநிதி

அமைச்சராகிறாரா உதயநிதி

உதயநிதி ஸ்டாலினை அமைச்சராக்க வேண்டும் என அமைச்சர்கள் அன்பில் மகேஷ், கே என் நேரு, மூர்த்தி, மா சுப்பிரமணியன் உள்ளிட்டோர் கோரிக்கை விடுத்துவருகிறார்கள். ஆனால் உதயநிதியோ தலைவர் ஸ்டாலினுக்கு யாரும் எந்த வித நெருக்கடியையும் நிர்பந்தத்தையும் கொடுக்க வேண்டாம் என கடந்த சில மாதங்களுக்கு முன்பு கடிதம் மூலம் கேட்டிருந்தார். கடந்த இரு தினங்களுக்கு முன் உதயநிதியின் பிறந்தநாளையொட்டியும் இது போன்றதொரு கோரிக்கை முன்வைக்கப்பட்டது. உதயநிதியை பொருத்தவரையில் அமைச்சர் பதவியை தலைமையே கொடுத்தால் ஏற்பது, இல்லாவிட்டால் எந்த பிரச்சினையும் இல்லை என்பதுதான்!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+