மச்சினிச்சி கர்ப்பம்.. மனைவியும் கர்ப்பம்.. அதுவும் ஒரே நேரத்தில.. "மாமா" பேர் பாருங்க: ஹய்யயோ சேலம்
சேலம்: விஷயம் தெரியுமா? அக்காவும் கர்ப்பம், தங்கையும் கர்ப்பம்.. இதுக்கு காரணமான கணவர் பெயர் என்ன தெரியுமா? "ஹானஸ்ட்'ராஜ்... ஸாரி ஆனஸ்ட்ராஜ்.
தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டியை சேர்ந்தவர் இந்த ஆனஸ்ட்ராஜ்.. 27 வயதாகிறது.. தனியார் வங்கி ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கும் சேலம் மாவட்டம் ஓமலூர் பகுதியைச் சேர்ந்த பெண்ணுக்கும், கடந்த 6 மாதங்களுக்கு முன்புதான் கல்யாணம் நடைபெற்றது.

பரிதாப மனைவி: இப்போது, ஆனஸ்ட்ராஜின் மனைவி 4 மாத கர்ப்பமாக இருக்கிறார்.. ஆனஸ்ட்ராஜ்ஜின் மனைவிக்கு, ஒரு தங்கை இருக்கிறார்.. அவர் ஒரு சிறுமி. இவருக்கு சில நாட்களாகவே உடம்பு சரியில்லாமல் இருந்துள்ளது.. வீட்டிலேயே முடங்கியும் சோர்ந்தும் படுத்துள்ளார். நாளுக்கு நாள் உடல்நிலை மோசமாகவும், அவரது பெற்றோர் மருத்துவமனைக்கு அழைத்து சென்றிருக்கிறார்கள்
அப்போதுதான் டாக்டர்கள் அவரை பரிசோதித்தபோது, சிறுமி 2 மாத கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது.. இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் சிறுமியிடம் இதுகுறித்து விசாரித்துள்ளனர்.
பாலியல் அத்துமீறல்: அப்போது அக்கா கணவரான, ஆனஸ்ட்ராஜ், தன்னிடம் பாலியல் ரீதியாக அத்துமீறிவிட்டதாக அழுதுகொண்டே சொன்னார்.. இதைக்கேட்டு அதற்கு மேல் அதிர்ச்சி அடைந்த சிறுமியின் பெற்றோர், சேலம் ஓமலூர் மகளிர் போலீசுக்கே சென்றுவிட்டனர்.. சிறுமியின் கர்ப்பத்துக்கு காரணமான ஆனஸ்ட்ராஜ் மீது புகார் தந்தனர்.
இந்த புகாரின் பேரில் விசாரணை மேற்கொண்டனர்.. அப்போது, சிறுமியிடம் நெருக்கமாகி பழகியுள்ளதும், தனியாக அழைத்து சென்று, சிறுமிக்கு பாலியல் தொல்லை தந்ததும், இதனால் சிறுமி கர்ப்பமடைந்ததும் தெரியவந்துள்ளது.. ஆனால், இந்த விஷயத்தை சிறுமி தன்னுடைய வீட்டிற்கு தெரியாமல் மறைத்து வைத்த நிலையில், உடல்நலக்குறைவால், விவகாரம் வெளியே தெரியவந்துள்ளது.
விசாரணை: அதுமட்டுமல்ல, சிறுமியை பைக்கில் ஸ்கூலுக்கு அழைத்துச் செல்லும்போது, ஓமலூர் அருகே உள்ள தீவட்டிப்பட்டி லோக்கூர் காட்டுப்பகுதியில், பாலியல் வன்கொடுமை செய்துள்ளதும் விசாரணையில் உறுதியானது.
இதையடுத்து, பெற்றோர் தந்த புகாரின் பேரில், போக்சோ சட்டத்தின் கீழ், வழக்குப்பதிவு செய்த போலீஸார், ஆனஸ்ட்ராஜ் கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.. கல்யாணமாகி, ஜஸ்ட் 6 மாதத்தில் மனைவியை கர்ப்பமாக்கியதோடு, மச்சினிச்சியையும் சேர்த்து கர்ப்பமாக்கிய "மாமா" ஆனஸ்ட்ராஜ் மாமியார் வீட்டிற்கு சென்றுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை தந்து வருகிறது.












Click it and Unblock the Notifications