"மச்சினன்" அசிங்கமா பேசறாரு.. கேஸ் சிலிண்டரை திறந்து.. போலீசுக்கு ஓடிய அண்ணி.. அலறிய சேலம்.. பரிதாபம்
சேலம்: குடும்பத்தகராறு விவகாரம் போலீஸ்வரை சென்றுள்ள நிலையில், அதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.. என்ன நடந்தது சேலத்தில்?
சேலத்தில் செங்கல் அணை ரோட்டை சேர்ந்தவர் ராமசாமி... மனைவி பெயர் பாக்கியம். இவர்களுக்கு செல்வம் மற்றும் ராஜ கணபதி என்று இரண்டு மகன்களும், மாலா என்று ஒரு மகளும் இருக்கிறார்கள்.

காதல் திருமணம்: செல்வம், ராஜகணபதி 2 பேருமே கூலி தொழில் செய்து வந்திருக்கிறார்கள். 2 பேருக்குமே திருமணமாகிவிட்டது.. செல்வத்துக்கு ஸ்ரீதேவி என்கிற மனைவியும், 2 மகள்களும் உள்ளனர்... ராஜகணபதி, காதல் திருமணம் செய்துள்ளார்.. அவர் மனைவி மும்பையை சேர்ந்தவராம்.. இவர்களுக்கும் இரண்டு மகள்கள் இருக்கிறார்கள். ஆனால், இந்த தம்பதிக்கு இடையே அடிக்கடி தகராறு வந்துள்ளது.. ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, கடந்த 20 வருடங்களுக்கு முன்பே, ராஜகணபதியை பிரிந்து குழந்தைகளுடன் சென்றுவிட்டார் மனைவி.
கோபித்து கொண்டு மனைவி சென்றுவிட்டதால், தன் அம்மாவுடன் வசித்து வந்திருக்கிறார் ராஜகணபதி... இதனிடையே, தன்னுடைய அப்பாவின் பெயரில் உள்ள நிலத்தில், கடந்த சில வருடங்களுக்கு முன்பு, செல்வம் வீடு கட்டி இருக்கிறார்.. அந்த வீட்டில் முதல் மாடியில் மனைவி மகள்களுடன் வசித்து வந்திருக்கிறார் செல்வம்... கீழ் தளத்தில் அம்மாவுடன் வசித்து வந்திருக்கிறார் ராஜகணபதி .
தகராறு: சமீபகாலமாகவே, சொத்தில் தனக்கு பங்கு வேண்டும் என்று செல்வத்திடம் அடிக்கடி கேட்டு தகராறு செய்து வந்திருக்கிறார் ராஜ கணபதி.. இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பாக செல்வம் - ராஜ கணபதி இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டிருக்கிறது . அப்போது செல்வத்தின் மனைவி, அதாவது அண்ணியை ஸ்ரீதேவியை, ஆபாச வார்த்தையால் திட்டி இருக்கிறார் ராஜகணபதி. உடனே ஸ்ரீதேவி போலீசுக்கு சென்றுவிட்டார்..
மச்சினன் தன்னை தகாத வார்த்தைகளால் திட்டி விட்டதாகவும், கேஸ் சிலிண்டரை திறந்து விட்டு கொலை செய்து விடுவதாக மிரட்டுகிறார் என்றும் புகார் தந்துள்ளார்.. இந்த புகாரின்பேரில், போலீசார் ராஜகணபதியை அழைத்து வார்னிங் தந்து அனுப்பி வைத்திருக்கிறார்கள். ஆனாலும், சொத்து விவகாரம் முற்றுப்பெறாமல் இருந்துள்ளது.. போலீஸ் ஸ்டேஷனில் இருந்து சமாதானமாகி வீட்டிற்கு வந்தபிறகும்கூட, மறுபடியும் நைட் நேரத்தில் தகராறு ஏற்பட்டுள்ளது..
கைது: அண்ணன் தம்பி 2 பேர் என்றால், தனக்கும் பங்கு வேண்டுமே என்பதே ராஜ கணபதியின் வாதமாக இருந்துள்ளது.. ஆனால், தன்னுடைய மாமியார் தந்த பணத்தில்தான், மாடி வீடு கட்டியுள்ளார் செல்வம்.. இந்த தகராறில், ஒருகட்டத்தில் ஆத்திரமடைந்த ராஜகணபதி, செங்கல், உருட்டு கட்டையை எடுத்து ராஜ கணபதியின் தலையிலும் முகத்திலும் அடித்திருக்கிறார்... இதில், படுகாயம் அடைந்த ராஜ கணபதி சம்பவ இடத்திலேயே சுருண்டு விழுந்து உயிரிழந்திருக்கிறார்..
இதுகுறித்து தகவலறிந்த அம்மாபேட்டை போலீசார் விரைந்து வந்து, ராஜகணபதி உடலை போஸ்ட் மார்ட்டும் செய்வதற்காக அனுப்பி வைத்திருக்கின்றனர்.. செல்வத்தையும் கைது செய்துள்ளனர்.. சம்பவத்தன்று முதல்நாள், போலீசார் ஸ்டேஷனுக்கு அழைத்து சமாதானம் செய்தபோது, இனிமேல் எந்த பிரச்சனையும் செய்ய மாட்டேன் என்று எழுதிக் கொடுத்தாராம் ராஜகணபதி.
உருட்டுக்கட்டை : மேலும், அண்ணன், தம்பி இருவரும் சமாதானமாகப் போனதற்கு அடையாளமாக சம்பவத்தன்று இரவு ஒன்றாக உட்கார்ந்து தண்ணி அடித்துள்ளனர்.. அவர்களின் அம்மா பாக்கியம், உறவினர் இல்லத் திருமண விழாவிற்காக டெல்லி சென்றுவிட்டதால் அன்று இரவு ரூமில் ராஜகணபதி மட்டும் வீட்டில் தனியாக தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது நேரம் நள்ளிரவு 1.30.
தூங்கி கொண்டிருந்த ராஜகணபதியை எழுப்பி, மறுபடியும் சொத்து பிரச்சனையை ஆரம்பித்துள்ளார் அண்ணன் செல்வம்.. அப்போது ராஜகணபதி, "இது என் அம்மா வீடு.. இந்த வீட்டை வாடகைக்கு விட்டு அதில் வரும் பணத்தை வைத்து பிழைத்துக் கொள்வேன். இது சிவில் வழக்கு என்பதால் போலீசாரும் விசாரிக்க மாட்டார்கள். அதனால் இந்த வீட்டை விட்டு நீயே வெளியே சென்று விடு" என்று சொன்னாராம்..
நசுங்கிய தலை: இதனால் ஆத்திரமடைந்த செல்வம், சொந்த தம்பி என்றும் பார்க்காமல் உருட்டுக்கட்டையாலும், செங்கல்லாலும் ராஜகணபதியின் தலையில் தாக்கி படுகொலை செய்துள்ளார்.. கொலைக்கு பயன்படுத்திய செங்கல், உருட்டுக்கட்டை உள்ளிட்ட சில முக்கியத் தடயங்களையும் போலீசார் சேகரித்துள்ளனர்... செங்கல், உருட்டுக்கட்டையால் அடித்தே, ராஜகணபதியின் தலை நசுங்கிவிட்டதாம்.. இப்போது செல்வம் ஜெயிலில் உள்ளார்..!!












Click it and Unblock the Notifications