தோட்டத்தில் புகுந்த ஜோடி.. அந்த பொண்ணு மைனர் வேற.. ப்ளூ கலரில் மாறிய உடல்கள்.. அதுக்குன்னு இப்படியா
காதல் ஜோடி ஒன்று விஷமாத்திரையை சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளது
சேலம்: 15 வயது பெண்ணை விரட்டி விரட்டி 2 வருடம் காதலித்துள்ளார் அந்த இளைஞர்.. கடைசியில் படிப்பை இழந்து, வாழ்க்கையையே இருவரும் நாசம் செய்து கொண்டுள்ளனர்
சேலம் மாவட்டம் மேட்டூர் அடுத்த நங்கவள்ளி அருகே செம்மண் காட்டுவளவு என்ற இடம் உள்ளது. இங்கு வசித்து வருபவர் கோபி.. 26 வயதாகிறது.. இவர் அதே பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணை காதலித்துள்ளார்.
அந்த பெண்ணுக்கு 15 வயதுதான் ஆகிறது.. படிக்கிற பெண் என்றும் பாராமல் பின்னாடியே சென்று, தன்னுடைய காதலில் மாணவியையும் விழ வைத்துள்ளார்..

17 வயசு
இருவரும் 2 வருடமாகவே காதலித்து வந்துள்ளனர்.. மாணவி அதேபகுதியில் உள்ள பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வந்தாள்... தற்போது 17 வயதாகிறது.. எனினும், சிறுமியின் வீட்டிற்கு துணிந்து சென்று பெண் கேட்டுள்ளார் கோபி. இதை கொஞ்சமும் மாணவியின் பெற்றோர் எதிர்பார்க்கவில்லை.. எனினும், எதிர்ப்பு காட்டினால், ஏதாவது ஏடாகூடமாக நடந்துவிடும் என்று பயந்துள்ளனர்.. அதனால், கோபியிடம் கடுமையான எதிர்ப்பு எதையும் காட்டிக்கொள்ளாமல், தங்கள் மகளுக்கு இப்போதுதான் 17 வயதாகிறது, 18 வயது ஆகட்டும்.. 18 வயது முடிந்தவுடன் பெண் கொடுக்கிறோம் என்று சமாதானம் செய்து அனுப்பி வைத்துள்ளனர்..

விஷ மாத்திரை
அதேசமயம், சிறுமியை பெற்றோர் மூன்று மாதங்களாக பள்ளிக்கும் அனுப்பவில்லை. இந்நிலையில், நேற்று சாயங்காலம் 5 மணிக்கு, சிறுமியும், கோபியும் தற்கொலை செய்து கொள்ள முடிவெடுத்தனர்.. அதற்காக 2 பேரும் தென்னை மரத்துக்கு வைக்கும் அலுமினியம் பாஸ்பேட் மாத்திரைகளை சாப்பிட்டு விட்டார்கள்.. விஷமாத்திரை சாப்பிட்டதுமே இருவரும் அங்கேயே நுரை தள்ளி விழுந்துள்ளனர்.. இதையடுத்து, சேலம் தனியார் மருத்துவமனையில் உடனடியாக சிகிச்சைக்காக அனுமதித்த நிலையில் 2 பேருமே பரிதாபமாக உயிரிழந்தனர்..

அலுமினியம் பாஸ்பேட்
இதுகுறித்து நங்கவள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். ஆனால், இந்த விவகாரம் குறித்து வேறு மாதிரியாக கூறப்படுகிறது.. கோபி பெண் கேட்டு வந்தபோது, சிறுமியின் பெற்றோர் அவரை கண்டித்தார்களாம்.. தங்களது மகள் பிளஸ் 2 முடித்துவிட்டு, காலேஜ் படிப்பு படிக்க வேண்டும்.. டிகிரி வாங்க வேண்டும்.. அதனால் காதலை கைவிடும்படி கோபியிடம் கேட்டுக்காண்டார்களாம்.. அப்படி இருந்தும், இருவரும் தங்களது காதலை தொடர்ந்துள்ளனர்.. அதுமட்டுமல்ல, இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால், 2 வீட்டிலுமே பெற்றோர்கள் தரப்பில் இருந்தும் காதலுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியிருக்கிறது.

ப்ளூ கலர்
இதனால் திருமணம் செய்து கொள்ள முடியாமல் போய்விடுமோ? தங்களை பிரித்துவிடுவார்களோ என்று பயந்துகொண்டு, இருவரும் தற்கொலை முடிவை எப்போதோ எடுத்துள்ளனர்.. இதற்காக முன்கூட்டியே, முருகேசனின் விவசாய தோட்டத்தில் விஷ மாத்திரையை தயாராக வாங்கி வைத்துவிட்டார்களாம்.. அதை சாப்பிட்டதுமே, உடல் முழுவதும் விஷம் பரவி, நீல நிறத்துக்கு மாற துவங்கி உள்ளது.. அதற்கு பிறகுதான் ஐசியூவில் சேர்த்தும், காப்பாற்ற முடியாமல் போயுள்ளது.. இது குறித்து நங்கவள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து, 2 பேருடைய உடலையும் மீட்டு போஸ்ட் மார்ட்டம் செய்வதற்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும், காதல் ஜோடி தற்கொலை குறித்து தீவிரமாக விசாரணையும் நடந்து வருகிறது.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக்












Click it and Unblock the Notifications