பாட்டியிடம்.. முத்தம் கேட்டு டார்ச்சர் செய்த இளைஞர்.. நடுரோட்டில் அக்கிரமம்.. இப்போ பாட்டி அட்மிட்
பாட்டியிடம் முத்தம் கேட்ட இளைஞரை சேலம் போலீசார் கைது செய்துள்ளனர்
சேலம்: பாட்டியை வழிமறித்து முத்தம் கேட்டு, தகராறு செய்ததுடன், இரும்புக்கம்பியால் தாக்கிய இளைஞரை போலீசார் தூக்கி உள்ளே வைத்தனர்.
பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.. போலீசாரும், கோர்ட்டும், இது தொடர்பான வழக்குகளில் எவ்வளவோ அறிவுரைகளை சொல்லி, கடிவாளங்களை போட்டாலும், தண்டனை வழங்கினாலும், குற்றங்கள் குறைவதில்லை.
பெண்கள் மீதான வன்முறை தாக்குதல்கள் அதிகரித்தபடியே உள்ளன.. போக்சோ சட்டங்கள் இருந்தும், போதுமான பலனை அது பெற்று தரவில்லை என்றே தெரிகிறது.. கல்வி அனைத்தையும் மாற்றிவிடும் என்ற நம்பிக்கை பிறந்து வரும் நிலையில், படிப்பு சொல்லி தரும் இடங்களிலேயே, பாலியல் வக்கிரங்கள் நடந்து வருவது ஜீரணிக்க முடியாததாக உள்ளது..

காமுகர்கள்
பெண் குழந்தைகள் மட்டுமின்றி, சில இடங்களில் வயதான பாட்டிகளும் இதுபோன்ற காமுகர்களின் தொல்லைகளுக்கு ஆளாவது அதிகரித்து வருகிறது.. சேலம் மாவட்டத்தில் சில மாதங்களுக்கு முன்பு ஒரு அதிர்ச்சி சம்பவம் நடந்தது.. அந்த பாட்டிக்கு 80 வயதிருக்கும்.. சொந்த பந்தம் யாருமே இல்லாத ஆதரவற்றவர்.. அரசு வழங்கும் ஆயிரம் ரூபாய் உதவித்தொகையை வைத்துக் கொண்டு, அந்த பகுதியில் கிடைக்கும் சிறுசிறு கூலி வேலையை செய்து வாழ்க்கையை நடத்தி வந்தார்... ரேசன் கடையில் வழங்கப்பட்டும் அரிசி வாங்கி தனியே உணவு சமைத்து சாப்பிட்டு வந்துள்ளார்.

வயலில் பாட்டி
ஒருநாள் வயலில் பாட்டி வேலை செய்து கொண்டிருந்தபோது, அதே ஏரியாவை சேர்ந்த 22 வயதான விக்னேஷ், 19 வயதான சீனிவாசன் ஆகியோர் வயலுக்கு பக்கத்தில் உட்கார்ந்து தண்ணி அடித்து கொண்டிருந்தனர்.. போதை தலைக்கேறியதையடுத்து, வயலில் வேலை செய்து பாட்டியை பாலியல் வன்கொடுமை செய்து உள்ளனர்.. பாட்டி அலறி துடிக்கவும் அதற்குள் சத்தம் கேட்டு அங்கிருந்த பொதுமக்கள் ஓடிவந்தனர்.. அந்த 2 பேரையும் பிடித்து ஓமலூர் மகளிர் ஸ்டேஷனில் ஒப்படைத்தனர்.. பிறகு இவர்கள் மீது குண்டர் சட்டமும் பாய்ந்தது.. இந்த சம்பவம் மிகுந்த பரபரப்பை அப்போது ஏற்படுத்தியிருந்தது.

டார்ச்சர்
இந்நிலையில், இதே சேலம் மாவட்டத்தில் இன்னொரு டார்ச்சர் நடந்துள்ளது.. ஓமலூர் அருகே, கே.மோரூர் பகுதியை சேர்ந்தவர் மாதையன்.. இவர் ஒரு போதைப்பேர்வழி.. எந்நேரமும் தண்ணி அடித்துவிட்டு, ஊரை சுற்றி வந்து கலாட்டா செய்வதே இவரது வழக்கம்.. இதே பகுதியை சேர்ந்தவர்தான் சாந்தா பாட்டி.. நேற்று தெருவில் பாட்டி நடந்து வந்து கொண்டிருந்தபோது, போதையில் எதிரே தள்ளாடி கொண்டே வந்துள்ளார் மாதையன்..பாட்டியை வழிமறித்து முத்தம் தருமாறு கேட்டுள்ளார்.. இதைக் கேட்டு அதிர்ந்து போன பாட்டி, மாதையனை சரமாரியாக திட்டிவிட்டு, அங்கிருந்து நகர முயற்சித்துள்ளார்.. ஆனால், மாதையன் விடவில்லை.. பாட்டியை தடுத்து நிறுத்தி, தகராறு செய்தார்..

முத்தம்
முத்தம் தராமல் அந்த இடத்தை விட்டு நகர கூடாது என்று அடம்பிடித்தார்.. ஆனால், பாட்டி தொடர்ந்து மறுக்கவும், ஆத்திரமடைந்த மாதையன், கீழே கிடந்த இரும்பு கம்பியால் பாட்டியை சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் ரத்தக்காயத்துடன் படுகாயமடைந்தவரை, அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்து, பாப்பிரெட்டிப்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.. இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த தீவட்டிப்பட்டி போலீசார், மாதையனை கைது செய்தனர்... பாட்டிக்கு சிகிச்சை நடந்து கொண்டிருக்கிறது.
-
பூட்டிய வீட்டில்.. பேராசிரியர் இருந்த கோலம்! 1400 கி.மீ டிராவல் செய்து வந்து சம்பவம் செய்த தம்பதி! -
சிதம்பரத்தில் ஷாக்! உல்லாசத்திற்கு வர மறுத்த இளம்பெண்ணை கொன்ற முதியவர் கைது! -
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்!












Click it and Unblock the Notifications