பெரியார் பல்கலைக்கழகத்தில் மட்டும் ஏன் இப்படி? 75,000 மாணவர்கள் நிலை என்னாவது? ராமதாஸ் கேள்வி!
சேலம்: தமிழகத்தின் எல்லா பல்கலைக்கழகங்களிலும் பருவத்தேர்வுகள் சரியாக நடைபெறும் போது, பெரியார் பல்கலைக்கழகத்தில் மட்டும் மே 25ஆம் தேதிக்கு தேர்வு ஒத்தி வைக்கப்பட்டிருப்பது ஏன் என பாமக நிறுவனர் ராமதாஸ் வினவியுள்ளார்.
தேர்வுகளை காலதாமதமாக நடத்துவதன் மூலம் 75,000 மாணவர்கள் பட்ட மேற்படிப்பில் சேர விண்ணப்பிக்க முடியாத நிலை உருவாகும் என அவர் எச்சரித்துள்ளார்.
பெரியார் பல்கலைக்கழக நிர்வாகத்தின் தவறு மற்றும் அலட்சியத்தால் மாணவர்கள் பாதிக்கப்படுவதை அனுமதிக்கக் கூடாது எனக் கூறியுள்ள ராமதாஸ், தவறு செய்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.

தமிழகத்தின் மற்ற பல்கலைக்கழகங்களை காட்டிலும் சேலம் பெரியார் பல்கலைக்கழகம் தொடர்ந்து சர்ச்சைகளில் சிக்கி வருவது கவனிக்கத்தக்கது.
இதனிடையே இது தொடர்பாக ராமதாஸ் விடுத்துள்ள பதிவு வருமாறு;
''பெரியார் பல்கலைக்கழகம் மற்றும் அதனுடன் இணைந்த 115 கல்லூரிகளில் வரும் 17-ஆம் தேதி தொடங்குவதாக இருந்த பருவத் தேர்வுகள் 25-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளன. ஜூன் 16-ஆம் தேதி நிறைவடையவுள்ள இத்தேர்வுகளின் முடிவுகள் ஜூலை மாத இறுதியில் தான் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பெரியார் பல்கலைக்கழகத் தேர்வுகள் மே 17-ஆம் தேதி நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்ததே மிகவும் தாமதம் ஆகும். அத்தேர்வுகள் மேலும் ஒரு வாரம் ஒத்திவைக்கப்பட்டிருப்பது மாணவர்களுக்கு சரி செய்ய முடியாத பாதிப்புகளை ஏற்படுத்தி விடும்.
சென்னை பல்கலைக்கழகம் உள்ளிட்ட பெரும்பான்மையான பல்கலைக்கழகங்களில் பட்டப்படிப்புக்கான பருவத் தேர்வுகள் கடந்த மாதமே நிறைவடைந்து விட்டன. அவற்றின் முடிவுகள் இந்த மாத இறுதியில் வெளியிடப்பட்டு, அடுத்த மாதத் தொடக்கத்தில் பட்ட மேற்படிப்புக்கான மாணவர் சேர்க்கை தொடங்கவுள்ளது.

அதற்குள்ளாக பெரியார் பல்கலைக்கழகத் தேர்வு முடிவுகள் வெளியாவதற்கு வாய்ப்புகள் இல்லை. அதனால், அந்த பல்கலைக்கழகத்திற்குட்பட்ட கல்லூரிகளில் பயிலும் சுமார் 75,000 மாணவர்கள் பட்ட மேற்படிப்பில் சேருவதற்கு விண்ணப்பிக்க முடியாத நிலை ஏற்படும்.
பெரியார் பல்கலைக்கழகத் தேர்வுகள் தாமதம் ஆவதற்கு பல்கலைக்கழக நிர்வாகத்தின் அலட்சியம் தான் காரணம் ஆகும். தேர்வுக்கான விடைத்தாள்கள் அச்சடிக்கும் பணிகள் இன்னும் நிறைவடையாதது தான் தேர்வுகள் தொடங்கப்படாததற்கு காரணம் ஆகும்.
தமிழகத்தின் பிற பல்கலைக்கழகங்கள் அரசு அச்சகங்களில் விடைத்தாள்களை அச்சிடுவது வழக்கம். ஜனவரி மாதத்திலேயே அதற்கான ஆணைகள் வழங்கபட்டு பிப்ரவரி மாத இறுதிக்குள் விடைத்தாள்கள் பல்கலைக்கழகங்களுக்கு வந்து விடும்.
ஆனால், பெரியார் பல்கலைக்கழகம் தனியார் அச்சகத்தில் விடைத்தாள்களை அச்சிடுவதும், அதற்கான ஆணைகள் மிகவும் தாமதமாக வழங்கப்பட்டதும் தான் தேர்வுகள் தாமதமாவதற்கு காரணம்.
பெரியார் பல்கலைக்கழக நிர்வாகத்தின் தவறு மற்றும் அலட்சியத்தால் மாணவர்கள் பாதிக்கப்படுவதை அனுமதிக்கக் கூடாது. விடைத்தாள்கள் அச்சடிப்பதற்காக ஆணைகள் தாமதமாக வழங்கப்பட்டது ஏன்? அதன் பின்னணியில் ஏதேனும் முறைகேடுகள் உள்ளனவா? என்பது குறித்து விசாரணை நடத்த தமிழக அரசு ஆணையிட வேண்டும்.
தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். பெரியார் பல்கலைக்கழக மாணவர்கள் பட்ட மேற்படிப்பில் சேருவதற்கு வசதியாக மாணவர் சேர்க்கைக்கான காலக்கெடுவை நீட்டிக்க வேண்டும்.''
-
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம்












Click it and Unblock the Notifications