"போன்ல யாரு".. நடுராத்திரி சிரித்து சிரித்து பேசிய மனைவி.. அதிர்ந்த கணவன்.. கத்தியால் ஒரே குத்து
கணவனை கத்தியால் குத்திய மனைவி கைது செய்யப்பட்டார்
சேலம்: கணவனை கத்தியால் குத்திய இளம்பெண்ணை போலீசார் கைது செய்துள்ளனர்.. இந்த சம்பவம் சேலத்தில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
சேலம் மாவட்டம் எடப்பாடி அடுத்துள்ளது மசையன் தெரு காட்டூர் பகுதி... இங்கு வசித்து வருபவர் பாலமுருகன்.. 32 வயதாகிறது.. இவர் ஒரு விசைத்தறி தொழிலாளி.
இவரது மனைவி இலக்கியா.. 26 வயதாகிறது.. கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்தவர்.. நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வந்தார்.. காலேஜுக்கு தினமும் பஸ்ஸில் சென்று வரும்போது, அப்போது அந்த தனியார் பஸ்ஸில் கண்டக்டராக வேலை பார்த்த பாலமுருகனுடன் பழக்கம் ஏற்பட்டு, பிறகு அதுவே காதலாக மாறியுள்ளது .

தகராறு
இவர்களின் காதலை இரு வீட்டிலுமே ஏற்று கொள்ளவில்லை.. அதனால், பெற்றோர் எதிர்ப்பையும் மீறி கடந்த 2020-ல் திருமணம் செய்து கொண்டுள்ளனர்... இப்போது 7 மாதத்தில் பெண் குழந்தை உள்ளது.. ஆனால், திருமணம் ஆனதில் இருந்தே தம்பதி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.. இதனால் இலக்கியா கடந்த சில மாதங்களுக்கு முன்பு கணவரை பிரிந்துவிட்டார்.. குழந்தையை தூக்கி கொண்டு, தன்னுடைய அம்மா வீட்டுக்கும் சென்றுவிட்டார்...

புகார்
அத்துடன் கணவர் தன்னை அடித்து கொடுமைப்படுத்துவதாக மகளிர் போலீசிலும் புகார் தந்தார்.. இந்தபுகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பாலமுருகனை கைது செய்தனர்... ஆனால், கடந்த சில வாரங்களுக்கு முன் ஜாமீனில் பாலமுருகன் வெளியே வந்தார். இதனிடையே, 2 நாளைக்கு முன்பு நாம் மறுபடியும் ஒன்றாக வாழலாம், வழக்கையும் வாபஸ் வாங்கி கொள்ளலாம் என்று சொல்லி குழந்தையுடன் இலக்கியா வந்துள்ளார்..

சிரிப்பு
பாலமுருகனும் மனைவி சொன்னதை ஏற்றுக் கொண்டார்.. இந்நிலையில் நேற்று முன்தினம் நடுராத்திரி இலக்கியா செல்போனில் யாரிடமோ ரொம்ப நேரமாக சிரித்து பேசி கொண்டிருந்திருக்கிறார்.. இதனால் பாலமுருகன், இந்த நேரத்தில் யாரிடம் பேசுகிறாய் என்று கண்டித்துள்ளார். இதனால் மறுபடியும் 2 பேருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது.. இதனால் ஒருகட்டத்தில் ஆத்திரம் அடைந்த இலக்கியா, கிச்சனுக்கு போய் கத்தியை எடுத்து வந்து பாலமுருகனின் மார்பில் குத்திவிட்டார்..

கைது
இதில் வலி பொறுக்க முடியாமல் பாலமுருகன் அலறியுள்ளார்...அந்த சத்தத்தை கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து, காயமடைந்த பாலமுருகனை மீட்டு எடப்பாடி மருத்துவமனையில் அனுமதித்தனர்.. அங்கு அவருக்கு தீவிரமான சிகிச்சை தரப்பட்டு வருகிறது.. அவரது நிலைமை கவலைக்கிடமான நிலையில் உள்ளதாக கூறப்படுகிறது.. இது தொடர்பாக போலீசார் இலக்கியாவை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications