மண்ணெண்ணையை உடலில் ஊற்றி கொண்டு ஓடிய தேன்மொழி.. பின்னாடியே ஓடிய போலீஸ்.. சேலத்தில் பரபரப்பு!
சேலம் கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டது
சேலம்: மண்ணெண்ணையை உடலில் ஊற்றியபடியே தேன்மொழி ஓடவும், அவர்களை போலீசார் பின்னாடியே துரத்தி கொண்டு ஓடிப்போய் மீட்டனர். இந்த சம்பவம் சேலம் கலெக்டர் ஆபீசில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி விட்டது.
சேலம் மாவட்டம் சித்தனூர் மல்லமூப்பம்பட்டி அருகே உள்ள கக்கன்காலனியை சேர்ந்த தம்பதி மணிகண்டன் - தேன்மொழி. இவர்கள் கூலித்தொழிலாளர்கள். 11 மாத ஆண் குழந்தை இவர்களுக்கு உள்ளது.

இந்த நிலையில் தேன்மொழி நேற்று குடும்பத்துடன் சேலம் கலெக்டர் ஆபீஸ் வந்தார். பிறகு திடீரென பாட்டிலில் மறைத்து வைத்திருந்த மண்ணெண்ணையை எடுத்து தன் உடம்பில் ஊற்றினார். இதை பார்த்ததும் அங்கிருந்த பாதுகாப்பு போலீசார் பதறி கொண்டு, தடுக்க முயன்றனர்.
ஆனால், தேன்மொழி, போலீசாரிடம் சிக்காமல் இருக்க ஓடி கொண்டே இருந்தார்.. ஓடும்போது மண்ணெண்ணையை ஊற்றி கொண்டே கலெக்டர் ஆபீசில் ஓடினார். அப்படியே, தீக்குளிக்கவும் முயன்றார். ஆனால், அதற்குள் போலீசார் ஓடிச்சென்று பாட்டிலை பிடுங்கிவிட்டனர். இதையடுத்து, தேன்மொழி, குடும்பத்துடன் சாலையில் உட்கார்ந்து மறியலில் ஈடுபட்டார். அங்கு விரைந்து சென்ற போலீசார் தேன்மொழியிடம் விசாரித்தனர்.

அப்போது அவர் சொன்னதாவது: "போன 5-ந்தேதி என் கணவர் அரியானூரில் பைக்கில் போகும்போது, ஒரு பெண் டாக்டர், காரை போதையில் ஓட்டி வந்து என் கணவரின் பைக் மீது மோதிவிட்டார். இதில் என் கணவர் படுகாயமடைந்தார். அந்த டாக்டர் மீது நடவடிக்கை எடுக்க சொல்லி புகார் தந்தும் இதுவரை போலீசார் விசாரிக்கவில்லை.
அதனால், துணை கமிஷனரிடம் புகார் தந்தேன்.. அவர் கொண்டலாம்பட்டி ஸ்டேஷன் போய் புகார் தருமாறு சொன்னார்.. அங்கும் சென்று புகார் தந்தேன்.. ஆனால் இதுவரை விசாரணை இல்லை.. என் கணவருக்கு சிகிச்சை வேண்டும், விபத்து ஏற்படுத்திய பெண் டாக்டர் மீது நடவடிக்கை வேண்டும்.." என்றார். இதையடுத்து போலீசார், உரிய நடவடிக்கை எடுப்பதாக தேன்மொழியை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications