'ஒருபுறம் சோகம்,மறுபுறம் ஹாப்பி..' சொந்த நாடு வெளியேறினாலும்.. கணவரின் ஆட்டத்தை கண்டு ரசித்த சானியா!
ஷார்ஜா: உலக கோப்பையில் நேற்றைய போட்டியில் ஸ்காட்லாந்து அணியை புரட்டி எடுத்த பாகிஸ்தான், 72 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஷோயப் மாலிக்கை அவரது மனைவி சானியா மிர்சா நேரில் உற்சாகப்படுத்தினர்.
டி20 உலகக் கோப்பை தொடர் ஐக்கிய அமீரகத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. உலகக் கோப்பையின் சூப்பர் 12 போட்டிகள் இன்றுடன் முடிவடைகிறது.
பெரும் எதிர்பார்ப்புடன் களமிறங்கிய இந்தியாவால் அரையிறுதிக்குத் தகுதி பெற முடியவில்லை. சூப்பர் 12 சுற்றில் இன்று நடைபெறும் கடைசி போட்டியில் நபிபியாவை இந்தியா எதிர்கொள்கிறது

பாகிஸ்தான் அணி
இந்த உலகக் கோப்பை தொடரில் அனைவரும் ஷாக் தந்த அணி என்றால் அது பாகிஸ்தான் தான். யாருமே பாகிஸ்தான் இந்தளவுக்கு வலுவாக இருப்பார்கள் என நினைக்கவில்லை. பாபர் அசாமின் சூப்பரான கேப்டன்சியில் அந்த அணி தொடர்ச்சியான வெற்றிகளைக் குவித்தது. க்ரூப் 2இல் ஒரு தோல்வியைக் கூடப் பெறாமல் முதல் அணியாக அரையிறுதிக்குத் தகுதி பெற்றது பாகிஸ்தான். உலகக் கோப்பையில் முதல் போட்டியில் இந்தியாவை எதிர்கொண்டது பாகிஸ்தான்.

சூப்பர் தொடக்கம்
அதில் முதலில் பேட் செய்த இந்தியா பேட்ஸ்மேன்கள் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். கேப்டன் கோலி மற்றும் ரிஷப் பந்த் தவிர வேறு யாரும் பெரியளவில் சோபிக்கவில்லை. இந்திய அணி 7 விக்கெட் இழந்து 151 ரன்களை எடுத்தது. அதன் பின்னர் பேட் செய்த பாகிஸ்தானுக்கு மிகச் சிறப்பான தொடக்க விக்கெட் பார்டன்ஷிப் கிடைத்தது. இதில் பாகிஸ்தான் அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. உலகக் கோப்பை தொடர் ஒன்றில் இந்தியாவைப் பாகிஸ்தான் தோற்கடிப்பது இதுவே முதல்முறையாகும்.

அடுத்தடுத்து வெற்றி
அதைத் தொடர்ந்து 2ஆவது போட்டியில் நியூசிலாந்து அணியை எதிர்கொண்டது. அதில் முதலில் பேட் செய்த நியூசிலாந்து 20 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்து 134 ரன்களை மட்டுமே எடுத்தது. பாக். அணியின் ஹரிஸ் ரவூப் அட்டகாசமாகப் பந்து வீசி 4 விக்கெட்களை சாய்த்தார். அதன் பிறகு பேட் செய்த பாகிஸ்தான், 19.4 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து 135 ரன்களை குவித்தது. அடுத்து ஆப்கனை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய பாகிஸ்தான், நபியா அணியை 45 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது.

ஸ்காட்லாந்து போட்டி
இந்தச் சூழலில் ஸ்காட்லாந்து அணியைப் பாகிஸ்தான் நேற்று எதிர்கொண்டது. முதலில் களமிறங்கிய பாகிஸ்தான் அணிக்கு வழக்கம் போல பாபர் அசாம் சிறப்பான தொடக்கத்தை அமைத்துக் கொடுத்தார். அவர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய போதிலும் மறுமுனையில் ஹபீஸ் தவிர மற்ற வீரர்கள் பெரியளவில் ரன்களை குவிக்கவில்லை. ஹபீஸும் 15ஆவது ஓவரில் வெளியேறிய நிலையில் அவருக்குப் பின் ஷோயப் மாலிக் களமிறங்கினார்.

அதிரடி காட்டிய ஷோயப் மாலிக்
முதல் பந்தில் இருந்தே தனது அதிரடியைத் தொடங்கிய ஷோயப் மாலிக், ஸ்காட்லாந்து பந்துவீச்சை நாலாபுறமும் சிதறவிட்டார். அவரது அதிரடியால் பாகிஸ்தான் ஸ்கோர் மளமளவென அதிகரித்தது. தொடர்ச்சியாக சிக்ஸர்களை பறக்கவிட்ட மாலிக் வெறும் 18 பந்துகளில் அரைசதம் கடந்தார். இதில் 1 பவுண்டரியும் 6 சிக்சர்களும் அடக்கம். அடுத்துக் களமிறங்கிய ஸ்காட்லாந்து அணியால் பாகிஸ்தான் பந்துவீச்சுக்கு எதிராகப் பெரியளவில் ரன்களை எடுக்க முடியவில்லை. 20 ஓவர்கள் முடிவில் பாகிஸ்தான் அணியால் 54 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது. இதன் மூலம் பாகிஸ்தான் 72 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

சானியா மிர்சா
இந்த போட்டியை ஷோயப் மாலிக்கின் மனைவியும் இந்தியாவின் முக்கிய டென்னிஸ் வீராங்கனையுமான சானியா மிர்சா நேரில் கண்டுகளித்தார். அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஷோயப் மாலிக்கை அவர் உற்சாகப்படுத்தினர். இது தொடர்பான படங்களை ட்விட்டரில், பகிர்ந்துள்ள நெட்டிசன்கள் இந்திய அணி தோற்ற போதிலும் கணவரை ஊக்குவிக்கும் வகையில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் சானியா மிர்சா கலந்து கொண்டுள்ளது பாராட்டும் வகையில் உள்ளதாகப் பதிவிட்டு வருகின்றனர்,

அடுத்த போட்டி
பாகிஸ்தான் அணி க்ரூப் 2இல் ஒரு தோல்வியைக் கூடப் பெறாமல் முதல் அணியாக அரையிறுதிக்குத் தகுதி பெற்றதுள்ளது. பாகிஸ்தான் அணி தனது அடுத்த அரையிறுதி போட்டியில் ஆஸ்திரேலியா அணியை வரும் நவ.11ஆம் தேதி எதிர்கொள்கிறது.
-
சீனாவின் உதவியுடன்.. விண்வெளியில் இருந்தபடி இந்தியாவை உளவு பார்க்கும் பாகிஸ்தான்.. பகீர் -
நடுக்கடலில் தத்தளித்த இந்தியர்கள்.. அடுத்த நொடி அமெரிக்க செய்த காரியம்.. மீண்டும் மீண்டுமா.! -
இந்தியரின் நிறுவனத்தை பறிக்கும் பிரான்ஸ்? நிறைவேறிய சட்ட மசோதா.. அதிர்ச்சி -
டென்ஷனான இந்தியா.. அமெரிக்க தூதரக பொறுப்பாளரை நேரில் அழைத்து சம்மன்.. பரபரப்பு சம்பவத்தின் பின்னணி -
"அப்பா நான் நல்லா இருக்கேன்!" மெசேஜ் அனுப்பி கொஞ்ச நேரம் கூட ஆகல! அமெரிக்கா தாக்குதலில் இந்தியர் பலி -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு












Click it and Unblock the Notifications