Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சிங்கப்பூருக்குப் போறீங்களா? இனி ஏர்போர்ட்ல செக் பண்ண மாட்டாங்க.. ஏறும்போதே திருப்பி அனுப்பிடுவாங்க

Subscribe to Oneindia Tamil

சிங்கப்பூர்: தமிழ்நாட்டை சேர்ந்த பலர் சிங்கப்பூரில் வேலை செய்கிறார்கள். பலர் சிங்கப்பூருக்கு அடிக்கடி போய் வருகிறார்கள். அப்படி சிங்கப்பூருக்கு போக திட்டமிடுபவர்களுக்கு மிக முக்கியமான அறிவிப்பினை சிங்கப்பூர் அரசு வெளியிட்டுள்ளது. இனிமேல், நீங்கள் விமான நிலையத்தில் போய் இறங்கிய பிறகு, இமிகிரேஷன் அதிகாரிகள் உங்களை திருப்பி அனுப்புவார்கள் என்று நினைக்காதீங்க.. உங்கள் ரெக்கார்டு சரியில்லை என்றால், 2026 ஜனவரி 30க்குப் பிறகு, விமானத்தில் ஏறுவதற்கு முன்பே உங்களை தடுத்துவிடுவார்கள். இந்தியாவிற்கு மட்டுமல்ல எந்த நாட்டில் இருந்து வந்தாலும் இது பொருந்தும்.

சிங்கப்பூரை பொறுத்தவரை உலகின் மிகச்சிறந்த நாடு. உலகின் பல்வேறு நாடுகளுக்கும் வழித்தடமாக சிங்கப்பூர் இருக்கிறது. சிங்கப்பூரில் தமிழ் அதிகாரப்பூர்வ மொழியாகவே இருக்கிறது. அந்த அளவிற்கு தமிழர்களுக்கு நெருக்கமான நாடாக சிங்கப்பூர் இருக்கிறது. திருச்சி, டெல்டா மாவட்டங்களில் இருந்தும், சென்னையில் இருந்தும் பலர் தினமும் சென்று வருகிறார்கள். இந்நிலையில் சிங்கப்பூர் உலகம் முழுவதிற்கும் ஒரு புதிய விதியை கொண்டு வந்தள்ளது.

Are you going to Singapore From 2026 on they will send you back as soon as you board the plane

டிக்கெட் கன்ஃபார்ம் ஆனாலும் போக முடியாது

சிங்கப்பூரின் குடிவரவு ஆணையம் கொண்டு வந்துள்ள புது விதி என்னவென்றால், 'விமானத்தில் ஏற்ற தடை விதிக்கும் உத்தரவு' தான். இந்த விதியின்படி, விமான நிறுவனம், பாஸ்போர்ட், விசா, மற்றும் நீங்கள் பூர்த்தி செய்த SG Arrival Card தகவல்களை கண்டிப்பாக பரிசோதிக்கும். யாரேனும் "தேவையற்றவர்கள்" என்று அடையாளம் கண்டால் அல்லது விசா, பாஸ்போர்ட் காலாவதி போன்ற அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்யவில்லை என்று தெரியவந்தால், அந்தப் பயணிகளை விமானத்தில் ஏற சிங்கப்பூர் அரசு அனுமதிக்காது.

இப்படிச் செய்வதற்காகவே அனைத்து விமான நிறுவனங்களுக்கும் சிங்கப்பூர் குடிவரவு ஆணையம் முக்கிய உத்தரவை அனுப்பிவிடும். எனவே அந்த உத்தரவை மீறி எந்த நிறுவனமாவது விமானத்தில் ஏற்றினால், அந்த நிறுவனத்துக்கு ₹6 லட்சம் ரூபாய் வரை அபராதம் (SGD 10,000) விதிக்கும். இதில் உடந்தையாக இருந்த விமான நிறுவன ஊழியர்கள் சிறைக்கு போவார்கள்.

கவனமாக பயணத்தை திட்டமிட வேண்டும்

'விமானத்தில் ஏற்ற தடை விதிக்கும் உத்தரவு' என்ற இந்த புதிய விதி என்ன சொல்கிறது என்றால், இனிமேல் சிங்கப்பூருக்குப் போக, உங்கள் ஆவணங்கள் அனைத்தையும் முன்பதிவு செய்யும்போதே சரியாக வைத்துக்கொள்ள வேண்டும். சிங்கப்பூருக்குச் சென்றுவிட்டு, அங்கே போய் ஏர்போர்ட்டில் நம்மைச் சரிபார்த்துக் கொள்ளலாம் என்று அடுத்த ஆண்டு ஜனவரி 30 முதல் அலட்சியமாக இருக்க முடியாது.

ஏன் இந்த மாற்றம்?

சிங்கப்பூர் அரசை பொறுத்தவரை பாதுகாப்புதான் முக்கியக் காரணம் என்று இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. அச்சுறுத்தலான பயணிகள் மற்றும் சிங்கப்பூர் அரசு வகுத்துள்ள விதிகளுக்கு உட்படாத பயணிகளை தங்கள் நாட்டிற்குள் வர விடுவதற்கு முன்பே, புறப்படும் இடத்திலேயே தடுத்து நிறுத்த சிங்கப்பூர் முடிவு செய்திருக்கிறது.

எனவே, 2026 ஜனவரி 30க்கு பிறகு உங்களுடைய பயண ஆவணங்கள் எல்லாவற்றையும், குறிப்பாகப் பாஸ்போர்ட்டின் ஆறு மாதச் செல்லுபடி காலத்தை மிகவும் கவனமாகச் சரிபார்த்துக் கொள்ளுங்கள் . இதில் சிறிய தவறு இருந்தால் கூட, உங்கள் டிக்கெட் உறுதி செய்யப்பட்டிருந்தாலும், விமானத்தில் ஏற அனுமதிக்க மாட்டார்கள்.. விமானத்தில் டிக்கெட் கன்பார்ம் என்று நினைத்து அசால்ட்டாக இருந்துவிடாதீர்கள்.. அது பின்னாளில் சிக்கலை ஏற்படுத்திவிடும்.

ஜனவரி 30க்கு பிறகு

2026 ஜனவரி 30 க்கு பிறகு உங்களுடைய பயண ஆவணங்கள் எல்லாவற்றையும், குறிப்பாக பாஸ்போர்ட்டின் ஆறு மாதச் செல்லுபடி காலத்தை மிகவும் கவனமாகச் சரிபார்த்துக் கொள்ளுங்கள் . இதில் சிறிய தவறு இருந்தால் கூட, உங்கள் டிக்கெட் உறுதி செய்யப்பட்டிருந்தாலும், சிங்கப்பூர் விமானத்தில் ஏற அனுமதிக்க மாட்டார்கள்.. விமானத்தில் டிக்கெட் கன்பார்ம் என்று நினைத்து அசால்ட்டாக இருந்துவிடாதீர்கள்.. அது பின்னாளில் சிக்கலை ஏற்படுத்திவிடும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+