சிங்கப்பூர் முருகன் இட்லி கடையில் சூடாக ஒரு காஃபி! செல்ஃபி எடுக்க முதல்வர் ஸ்டாலினை சூழ்ந்த கூட்டம்
சிங்கப்பூர்: அரசு முறை பயணமாக சிங்கப்பூர் சென்றுள்ள முதலமைச்சர் ஸ்டாலின் நேற்று அங்குள்ள லிட்டில் இந்தியா பகுதிக்கு ஒரு விசிட் அடித்தார்.
அப்போது அங்கிருந்த முருகன் இட்லி கடைக்கு சென்ற முதலமைச்சர் ஸ்டாலின், ஸ்ட்ராங்காக , சூடாக ஒரு காஃபி குடித்தார். இந்த காஃபிக்கு காசு வாங்க மறுக்கப்பட்ட போதும் தன் கைப்பட காஃபிக்கு காசு கொடுத்து பில் வாங்கிக் கொண்டார் முதல்வர் ஸ்டாலின்.

முதலமைச்சர் ஸ்டாலினுடன் அவரது மனைவி துர்கா ஸ்டாலினும் முருகன் இட்லி கடைக்கு சென்றார். அங்குள்ள மெனு கார்டை காஃபி குடித்துக் கொண்டே புரட்டிப் பார்த்த முதல்வர் கார் ஏற சென்ற போது செல்ஃபி எடுப்பதற்காக ஏராளமானோர் திரண்டனர்.
கூட்டம் எப்படி கூடியது என்றே தெரியாத அளவுக்கு ஸ்டாலினுடன் செல்ஃபி எடுக்க அங்குள்ள தமிழர்கள் திரண்டனர். இதையடுத்து வேறு வழியின்றி பொறுமையாக நின்று செல்ஃபிக்கு போஸ் கொடுத்துவிட்டு புறப்பட்டார் முதலமைச்சர் ஸ்டாலின்.
முதலமைச்சர் ஸ்டாலினை பொறுத்தவரை திடீர் திடீரென இது போன்ற சர்ப்ரைஸ்களை நிகழ்த்துவார். இப்படித்தான் கடந்த மாதம் கேரள மாநிலம் கொச்சின் சென்றிருந்த முதல்வர் ஸ்டாலின், மீண்டும் விமான நிலையம் திரும்பும் வழியில் சாலையோர ஹோட்டலில் மசால் தோசை சாப்பிட்டார்.

அதேபோல் சென்னையில் நேரம் கிடைக்கும் போது ஈசிஆரில் சைக்கிளிங் செல்லும் போது அங்கிருக்கும் தேநீர் கடைகளுக்கு திடீர் விசிட் அடித்து இன்ப அதிர்ச்சியூட்டுவார்.
அந்த வகையில் சிங்கப்பூரில் உள்ள முருகன் இட்லி கடைக்கு மிகவும் கேசுவலாக சென்று முதல்வர் காஃபி குடித்ததற்கு காரணமே இதன் மூலம் லிட்டில் இந்தியா பகுதியில் பணியாற்றி வரும் தமிழர்களை, குறிப்பாக தமிழக இளைஞர்களை சந்திக்க முடியும் என்பதற்காக தான்.












Click it and Unblock the Notifications