சிங்கப்பூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

சிங்கப்பூரில் செம கல்லா கட்டும் இந்திய ஹோட்டல்கள்.. கொரோனா காலத்துக்கு ஏற்ப மாறியதால் சாத்தியம்

Google Oneindia Tamil News

சிங்கப்பூர்: சிங்கப்பூரில் லாக்டவுன் அமலாக்கப்பட்டுள்ள தற்போதும் கூட சூழ்நிலைகளை சாதகமாக்கி இந்திய ஹோட்டல்கள் சாதித்து வருவது நம்பிக்கையை ஏற்படுத்துகின்றன.

சிங்கப்பூரில் கொரோனாவின் தாக்கம் மிக அதிகமாக இருந்து வருகிறது. கடந்த 2 நாட்களாக 200க்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வந்தனர்.

Corona lockodwn: Singapore Indian Hotels busy with Social Media

சிங்கப்பூரில் நேற்று ஒரே நாளில் 400க்கும் அதிகமானோர் கொரோனா தொற்று பாதிப்புக்குள்ளாகி இருக்கின்றனர். ஏற்கனவே சிங்கப்பூரில் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் லாக்டவுன் அமல்படுத்தப்பட்டிருக்கிறது.

சிங்கப்பூரைப் பொறுத்தவரையில் உணவகங்கள் திறக்கப்பட்டிருக்கின்றன. வீடுகளில் இருந்து உணவை ஆர்டர் செய்துவிட்டு வந்து பெற்றுக் கொள்ளலாம். இதற்காக இந்திய ஹோட்டல்கள் புதிய புதிய யுக்திகளை கையாண்டு வருகின்றனர்.

சமூக வலைதளங்களில் புதிய உணவுப் பொருட்களை அறிமுகம் செய்துள்ளனர். தற்போது லாக்டவுன் காலம் என்பதால் வீடுகளில் அனைவரும் ஒன்றாக இருப்பார்கள். அதற்கேற்ப family pack முறையையும் அறிவித்து அதனுடன் இலவச அறிவிப்பையும் கொடுத்திருக்கின்றனர்.

மலேசியாவுக்கு ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மருந்தை ஏற்றுமதி செய்யும் இந்தியா மலேசியாவுக்கு ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மருந்தை ஏற்றுமதி செய்யும் இந்தியா

வாடிக்கையாளர்கள் வீட்டில் இருந்து புறப்படுவது முதல் அவர்களது நகர்வுகளை கண்காணித்து உடனுக்குடன் உணவுப் பொருட்களை கொடுத்தும் அனுப்புகின்றனர். இன்னும் பலர் சமூக வலைதளங்களில் லைவ்வாகவே ஹோட்டலை நடத்துகிற முயற்சியிலும் இறங்கியிருக்கின்றனர்.

இதனால் இந்திய ஹோட்டல்களில் கொரோனா காலத்தைவிட தற்போது வர்த்தகம் அதிகரித்துள்ளதாக பெருமிதப்படுகின்றனர். எந்த சூழலையும் எதிர்கொள்ளும் இத்தகைய முயற்சிகள் பெரும் நம்பிக்கைக்குரியவையே.

English summary
During coronavirus lockdown period, Indian Hotels in Singapore now busy with their business through Social Media.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X