சிங்கப்பூரில் மேலும் 528 பேருக்கு கொரோனா ; மலேசியா, இலங்கையிலும் பாதிப்பு அதிகரிப்பு
சிங்கப்பூர்: சிங்கப்பூரில் இன்று மேலும் 528 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து சிங்கப்பூரில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 16 ஆயிரத்தை தாண்டியுள்ளது.
ஆசிய நாடுகளில் இந்தியா, சீனாவை தொடர்ந்து சிங்கப்பூரில்தான் கொரோனோவின் தாக்கம் படுமோசமாக அதிகரித்து வருகிறது. நாள்தோறும் 500க்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்படுகின்றனர்.

குறிப்பாக சிங்கப்பூரில் பணிபுரியும் வெளிநாட்டு தொழிலாளர்கள்தான் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இன்றும் ஒரே நாளில் 528 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது.
இதனையடுத்து சிங்கப்பூரில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 16,169 ஆக அதிகரித்துள்ளது. இன்று சிங்கப்பூரைச் சேர்ந்த 6 பேர்தான் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். எஞ்சிய 522 பேருமே வெளிநாட்டு தொழிலாளர்கள்.
வெளிநாட்டு தொழிலாளர்கள் தங்கும் இடங்களில்தான் கொரோனா பாதிப்பு மிக அதிகமாக இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.
மலேசியா
மலேசியாவில் கொரோனாவால் 6,002 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மலேசியாவில் கொரோனாவால் மரணித்தோர் எண்ணிக்கை 102 ஆகவும் உயர்ந்துள்ளது. அதேநேரத்தில் 4,171 பேர் குணமடைந்தும் உள்ளனர். மலேசியாவில் இன்று மட்டும் 57 பேருக்கு கொரோனா உறுதி செய்யபப்ட்டது. 2 பேர் உயிரிழந்துள்ளனர்.
இலங்கை
இலங்கையில் மொத்தம் 649 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். இலங்கையில் கொரோனாவால் 7 பேர் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். மொத்தம் 139 பேர் குணமடைந்துள்ளனர். ஈழத் தமிழர்கள் தாயகப் பகுதிகளிலும் கொரோனாவின் தாக்கம் அதிகமாக இருந்து வருகிறது.












Click it and Unblock the Notifications