மீண்டும் அடிக்க தொடங்கிய கொரோனா.. மெல்ல அதிகரிக்கும் உயிரிழப்பு.. அலறும் இரு முக்கிய ஆசிய நகரங்கள்
சிங்கப்பூர்: கொரோனா பாதிப்பு முடிந்து, நாம் மெல்ல இயல்பு நிலைக்குத் திரும்பி இப்போது சில காலம் மட்டுமே ஆகிறது. இதற்கிடையே ஆசியாவின் இரு முக்கிய நகரங்களான ஹாங்காங் மற்றும் சிங்கப்பூரில் இப்போது திடீரென கொரோனா பரவல் அதிகரித்துள்ளது. இதனால் சில உயிரிழப்புகளும் ஏற்பட்டுள்ள நிலையில், அங்குள்ள சுகாதார அதிகாரிகள் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர்.
கடந்த 2019ல் பரவிய கொரோனா உலகெங்கும் மிகப் பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது. அந்த பாதிப்பு சீராகவே பல ஆண்டுகள் ஆனது. அலை அலையாகத் தாக்கிய கொரோனா, ஒவ்வொரு சமயத்திலும் மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தியது. கொரோனா வேக்சின் தொடங்கி பல்வேறு நடவடிக்கைகளுக்கு பிறகே கொரோனா பாதிப்பைக் கட்டுப்படுத்தினார்கள்.

கொரோனா பரவல்
இதற்கிடையே ஆசியாவில் பல்வேறு பகுதிகளிலும் மீண்டும் கொரோனா பரவல் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக மக்கள் தொகை அதிகம் இருக்கும் ஹாங்காங் மற்றும் சிங்கப்பூரில் கொரோனா வேகமாகப் பரவி வரும் சூழலில், அங்கு வாழும் சுகாதாரத் துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
குறிப்பாக ஹாங்காங்கில் கொரோனாவின் செயல்பாடு இப்போது மிக அதிகமாக உள்ளதாக நகரின் சுகாதார மைய தொற்று நோய் பிரிவின் தலைவர் ஆல்பர்ட் ஆவ் தெரிவித்தார். ஹாங்காங்கில் கொரோனா பாசிட்டிவ் விகிதம் கடந்த ஓராண்டில் இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ள நிலையில், அங்குத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.
மீண்டும் கொரோனா உயிரிழப்புகள்
பலருக்கும் கடுமையான கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும், சில உயிரிழப்புகளும் கொரோனாவால் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இவை கடந்த காலங்களில் ஏற்பட்ட அளவுக்கு அதிக பாதிப்பை ஏற்படுத்தவில்லை என்ற போதிலும் சமீப காலங்களில் இதுவே உச்சமாகும். இதனால் அங்குள்ள மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
அதேபோல சிங்கப்பூரிலும் கொரோனா அதிகரித்து வருகிறது. மே மாதம் முதல் வாரம் வைரஸ் பாதிப்பு சுமார் 28% அதிகரித்து 14,200ஆக உயர்ந்துள்ளது. மேலும் மருத்துவமனையில் சேர்க்கப்படுவதும் 30% அதிகரித்துள்ளது. தினசரி வைரஸ் பாதிப்பு திடீரென அதிகரித்துள்ளதால் சிங்கப்பூர் நிர்வாகம் தினசரி பாதிப்பு குறித்த தகவல்களைப் பகிர்ந்து வருகிறது.
என்ன காரணம்
பொதுமக்களிடையே நோய் எதிர்ப்புச் சக்தி குறைவது உள்ளிட்ட காரணங்களால் கொரோனா பாதிப்பு அதிகரித்திருக்கலாம்.. அதேநேரம் கொரோனா உச்சத்தில் இருந்த போது பரவிய வேரியம்டுகளை போல அதிக பாதிப்பு ஏற்படுத்தும் வேரியண்ட்கள் பரவுவது போல எதுவும் தெரியவில்லை என சிங்கப்பூர் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ஆசியாவின் இரண்டு பெரிய நகரங்களில் கடந்த சில காலமாக கொரோனா அதிகரித்து வருவதால் மீண்டும் ஒரு அலையை அது ஏற்படுத்துமோ.. மீண்டும் ஊரடங்கு உள்ளிட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்படுமோ என்ற அச்சம் எழுந்துள்ளது. மேலும் பொதுமக்கள், குறிப்பாக இணை நோய் உள்ளிட்ட ஆபத்துகள் இருப்போர் பூஸ்டர் டோஸ் வேக்சினை எடுத்துக் கொள்ளுமாறும் அறிவுறுத்தல்கள் வருகிறது.
கோடையில் பரவும் கொரோனா
பொதுவாக எந்தவொரு சுவாச தொற்றாக இருந்தாலும் அது குளிர் காலங்களிலேயே பரவும். ஆனால், கொரோனா சம்மரில் தான் அதிகம் பரவுகிறது. இப்போது சிங்கப்பூர், ஹாங்காங்கில் பரவும் நிலையில், கடந்தாண்டு கூட கோடைக் காலத்தில் சீனாவில் வைரஸ் தொற்று ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.
அதேநேரம் இப்போது பரவும் கொரோனா அலைகள் வலிமையானதாக இருக்காது. மேலும், பெரும்பாலும் தீவிர பாதிப்பை ஏற்படுத்தாது. இவை சில வாரங்களில் அப்படியே மறைந்துவிடும். இருப்பினும், இணை நோய் உள்ளவர்கள் மட்டுமே இதுபோன்ற சூழலில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
-
2020ல் ஒரு கோடிக்கு 'இதை' வாங்கியிருந்தால் இன்று 75 கோடி லாபம்.. எஸ்பிஐயில் 6 கோடி.. தங்கம் 4 கோடி -
எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தி! திமுகவில் இணைந்த முன்னாள் எம்எல்ஏ இளையக்கண்ணு! -
தமிழ்நாட்டின் ஹிட்லர்.. மனைவி, மகளை விரட்டிவிட்டு மகளிர் தின விழாவா! விஜய்யை சாடிய இயக்குநர் அமீர் -
ஸ்டாலின் காதுக்கு எட்டிய பெயர்.. உளவுத்துறைக்கு உடனே உத்தரவு.. சென்னை சுவரில் தோன்றிய நாடார் சங்கம் -
NDA கூட்டணியில் தவெக? துணை முதல்வராகிறாரா விஜய்? சாணக்கியத்தனத்தை சொல்லி கொடுத்த பிரபல நடிகர் -
வீட்டுப் பெண்களை நினைக்காமல் அவதூறு பரப்பி.. தவெக நிகழ்ச்சியில் பேசிய பெண்! ஒரு நொடி முகம் மாறிய விஜய் -
இந்தியாவுக்கு ஆப்பு வைக்கும் ரஷ்யா.. கச்சா எண்ணெய் விலையில் இனி சலுகை இல்லை? நேரம் பார்த்து அடிக்கும் புதின் -
Sani Peyarchi: விருச்சிக ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. இனி பொற்காலம் ஆரம்பம் -
விஜய்க்கு தான் பிரச்சனை! அடுத்த அடி, அதிரடி காட்டும் மகன் ஜேசன் சஞ்சீவ்! இதுதான் கெத்து.. குவியும் பாராட்டு -
“OPS சிரிப்பே அவருக்கு பிரச்சனை”.. ஸ்டாலின் பேச பேச.. மேடையிலேயே குலுங்கி குலுங்கி சிரித்த ஓபிஎஸ்! -
போரில் ‘என்ட்ரி'யான ரஷ்யா.. அரபு நாடுகளை ஈரான் தாக்கியது எப்படி? டிரம்பை கதறவிடும் புதின்! -
தங்கப் பத்திரம் சேமிப்பு திட்டத்தில் ரிசர்வ் வங்கி ஜாக்பாட்.. ₹1 லட்சம் போட்டால் ₹3.48 லட்சம் லாபமா?












Click it and Unblock the Notifications