சிங்கப்பூர் அதிபர் தேர்தல்:ஈழத் தமிழர் அமைச்சர் தர்மன் சண்முகரத்தினம் போட்டி-யார் இவர்- முழு விவரம்!
சிங்கப்பூர்: சிங்கப்பூர் நாட்டின் அதிபர் தேர்தலில் மூத்த அமைச்சரும் ஈழத் தமிழரான தர்மன் சண்முகரத்தினம் போட்டியிட உள்ளார்.
சிங்கப்பூர் அதிபரான ஹலிமா யாவின் பதவி காலம் செப்டம்பர் மாதம் நிறைவடைகிறது. இதனைத் தொடர்ந்து நடைபெற உள்ள அதிபர் தேர்தலில் தாம் போட்டியிடப் போவது இல்லை என ஹலிமா அறிவித்திருந்தார்.

இந்நிலையில் சிங்கப்பூர் மூத்த அமைச்சரான ஈழத் தமிழரான தர்மன் சண்முகரத்தினம் தாம் அதிபர் பதவியில் போட்டியிட இருப்பதாக அறிவித்துள்ளார். இது தொடர்பாக பிரதமர் லீ சியென் லுங்கிடம் கடிதம் மூலம் தெரிவித்துள்ளார் தர்மன் சண்முகரத்தினம்.
இதற்காக தமது பதவியை ராஜினாமா செய்ய முடிவு செய்திருக்கிறார். மேலும் மக்கள் செயல் கட்சியில் இருந்தும் தர்மன் சண்முகரத்தினம் விலக உள்ளார். சிங்கப்பூர் அதிபர் தேர்தல் செப்டம்பர் 13-ந் தேதிக்குள் நடைபெற வேண்டும்.
யார் இந்த தர்மன் சண்முகரத்தினம்?:
- இலங்கை வடக்கு மாகாணத்தில் யாழ்ப்பாணத்தின் ஊரெழு, உரும்பிராய்ப் பகுதிகள்தான் பெற்றோரின் பிறப்பிடம்
- லண்டன் ஸ்கூல் ஆப் எக்கனாமிக்ஸ் பல்கலைக் கழகத்தில் பொருளியல் பட்டப்படிப்பை மேற்கொண்டார்.
- கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தில் பொருளியல் முதுநிலைப்பட்டம் பெற்றார்.
- ஹார்வார்ட் பல்கலைக்கழகத்தில் பொது நிர்வாக முதுநிலைப் பட்டம் பெற்றார்
- ஜப்பான் நாட்டவரான ஜேன் யுமிக்கோ இட்டோகியை திருமணம் செய்தார்.
- தர்மன் சண்முகரத்தினத்துக்கு 3 மகள்கள், 1 மகன் உள்ளனர்.
- 2001-ல் மக்கள் செயல் கட்சி மூலம் ஜூரோங் குழுத்தொகுதியில் இருந்து சிங்கப்பூர் எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டார்
- 2003-ல் கல்வி அமைச்சரானார்
- 2007-ல் சிங்கப்பூர் நிதி அமைச்சரானார்
- 2011-ல் சிங்கப்பூர் துணை பிரதமரானார்
- சிங்கப்பூர் அமைச்சரவையில் 4 ஆண்டுகளாக- மூத்த அமைச்சராகப் பணிபுரிகிறார்
- சிங்கப்பூர் அரசின் சமுதாய கொள்கைகளுக்கான ஒருங்கிணைப்பு அமைச்சர் பதவி வகிக்கிறார்
- சிங்கப்பூர் நாணய வாரியத்தின் தலைவர்
- சிங்கப்பூர் பிரதமரின் பொருளாதார ஆலோசகர்
- சிங்கப்பூரின் அரசு முதலீட்டு நிறுவனமான GICயின் துணைத் தலைவர்
- துணை பிரதமர், நிதி அமைச்சர் பொறுப்புகள் வகித்தவர்
- 2001-ம் ஆண்டு முதல் 4 முறை எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டவர்
- சிங்கப்பூர் இந்தியர் மேம்பாட்டு சங்கத்தின் அறங்காவல் குழு தலைவர்

அதிபர் தேர்தலில் போட்டியிடும் தர்மன் சண்முகரத்தினத்துக்கு பாராட்டு தெரிவித்துள்ள அந்நாட்டு பிரதமர் லீ சியென் லூங், சிங்கப்பூர் வளர்ச்சியில் 20 ஆண்டுகாலம் முக்கிய பொறுப்புகள் வகித்தவர் நீங்கள். அடுத்த தலைமுறை அமைச்சர்களை உருவாக்க உதவியாக இருக்கிறீர்கள் என தெரிவித்துள்ளார்.
சிங்கப்பூரின் 6-வது அதிபராக தமிழரான நாதன் பதவி வகித்தார். 1999-ம் ஆண்டு முதல் 2011-ம் ஆண்டு வரை சிங்கப்பூர் அதிபராக நாதன் பதவி வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications