சிங்கப்பூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

காங்கோவிலிருந்த வந்த கப்பலில் 8.8 டன் எடை கொண்ட யானை தந்தங்கள் பறிமுதல்.. சிங்கப்பூரில் அதிரடி

Google Oneindia Tamil News

சிங்கப்பூர்: சிங்கப்பூர் துறைமுகம் வந்த கப்பலில் சுங்க இலாகா அதிகாரிகள் நடத்திய சோதனையில் யானை தந்தங்களும் எறும்பு தின்னி விலங்கின் செதில்களும் கைப்பற்றப்பட்டன.

ஆப்ரிக்க நாடுகளில் ஒன்றான காங்கோவிலிருந்து சிங்கப்பூர் வழியாக, வியட்நாம் நாட்டிற்கு சரக்கு கப்பல் ஒன்று சென்று கொண்டிருந்தது.இந்த கப்பலில் கடத்தல் பொருட்கள் இருப்பதாக சிங்கப்பூர் சுங்க இலாகா அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது

Elephant ivory and pangolin scales sezied by singapore Customs and Immigration

இதன்பேரில் சிங்கப்பூர் துறைமுகம் வந்தடைந்த அந்த கப்பலை சுங்க இலாகா அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர் அப்போது கப்பலில் இருந்த 3 கண்டெய்னர்களை திறந்து பார்த்த அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர்

அதில் 8.8 டன் எடை கொண்ட யானை தந்தங்களும் 11.9 டன் எடை கொண்ட அளவிற்கு எறும்பு தின்னி விலங்கின் செதில்களும் இருந்தது தெரிய வந்தது

சோறு குடுக்ககூட ஆள் இல்லை.. சாகபோறேன்.. டவரில் ஏறிய வெங்கடேஷ்.. சமாதானப்படுத்தி இறக்கிய கார்த்திக்! சோறு குடுக்ககூட ஆள் இல்லை.. சாகபோறேன்.. டவரில் ஏறிய வெங்கடேஷ்.. சமாதானப்படுத்தி இறக்கிய கார்த்திக்!

இதனையடுத்து அதிகாரிகள் அவை அனைத்தையும் பறிமுதல் செய்தனர் பறிமுதல் செய்யப்பட்ட யானை தந்தங்களின் மதிப்பு சுமார் 89 கோடி ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது

இதற்காக 300-க்கும் மேற்பட்ட யானைகள் வேட்டையாடப்பட்டிருக்கலாம் என்றும் அதிகாரிகள் கூறியுள்ளனர். அதே போல எறும்பு தின்னி செதில்களின் மதிப்பு 246 கோடி ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது.

இதற்காக இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட எறும்பு தின்னிகள் கொல்லப்பட்டிருக்கலாம் என்றும் அதிகாரிகள் கூறியுள்ளனர். பாரம்பரிய சீன மருத்துவத்தில் எறும்பு தின்னிகளின் செதில்கள் பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றன. மேலும் பரவலான வேட்டையாடப்படுவதன் காரணமாக கிழக்கு மற்றும் மத்திய ஆபிரிக்காவில் உள்ள எறும்பு தின்னிகளின் எண்ணிக்கையை குறைந்து விட்டது

இந்நிலையில் பறிமுதல் செய்யப்பட்டுள்ள எறும்பு தின்னி செதில்கள் மற்றும் யானை தந்தங்கள் அழிக்கப்படும் என அதிகாரிகள் கூறியுள்ளனர். பறிமுதல் செய்யப்பட்டவை மீண்டும் சந்தையில் நுழையாமல் இருக்கவே இந்த அழிப்பு நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.

English summary
Elephant ivory and pangolin scales were seized during a raid conducted by customs officials aboard a port of Singapore.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X