140 கோடி இந்தியர்களின் டேட்டா + சிங்கப்பூர் தொழில்நுட்பம்! சுகாதாரத் துறையில் வெடிக்கும் புரட்சி!

Subscribe to Oneindia Tamil

சிங்கப்பூர்: சிங்கப்பூர் தற்போது AI தொழில்நுட்பத்தில் வேகமாக வளர்ந்து வருகிறது. இந்நிலையில், அங்குள்ள AI மாடல்களைப் பயிற்சி கொடுக்க 140 கோடி இந்தியர்களின் டேட்டாக்களை பயன்படுத்த இந்தியா-சிங்கப்பூர் இடையே ஒப்பந்தம் செய்யப்பட இருக்கிறது.

இந்தியாவின் விரிவான சுகாதாரத் தரவுகளும், சிங்கப்பூரின் மேம்பட்ட செயற்கை AI திறன்களும் இணைந்து, சுகாதாரத் துறையில் புதுமைகளை வேகப்படுத்தவும், தொழில்நுட்பங்களை மேலும் மலிவாக்கவும், உலகளவில் போட்டித்தன்மை கொண்டதாக மாற்றவும் புதிய வாய்ப்புகளை உருவாக்கியுள்ளன. இந்தத் தகவலை, AWS நிறுவனத்தின் ஆசியப் பிரிவின் சுகாதாரப் பிரிவு துணைத் தலைவர் மற்றும் தலைவர் கரேன் பிரியதர்ஷினி கூறியிருக்கிறார்.

India and Singapore AI Synergy

டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ANI-க்கு பேட்டியளித்த பிரியதர்ஷினி, "சிங்கப்பூர் சிறிய நாடாக இருந்தாலும், AI மேம்பாட்டில் அதிக கவனம் செலுத்துகிறது. AI மாடல்களுக்கு பயிற்சி தரவுகள் தேவைப்படுகிறது. இந்தியா இதற்கு உதவ முடியும். இந்தியாவின் பெரும் மக்கள் தொகை தரவுகள் AI வளர்ச்சிக்கு முக்கிய பங்களிப்பு செய்யும்.

AI வளர்ச்சிக்கான வாய்ப்புகள்

இந்தியாவில் 140 கோடி மக்கள் இருப்பதால், பெரும் தரவுத் தளம் உள்ளது. இது மற்ற எந்த நாட்டிலும் இல்லை. இந்தியாவின் தனித்துவமான தரவுச் செல்வம் உலகளாவிய AI மேம்பாட்டுக்கு உதவும்.

அரிய நோய்கள் தொடர்பான ஆராய்ச்சிக் கூட்டணிகளுக்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன. இந்தியாவின் பெருகிவரும் சுகாதாரத் தரவுகளை ஆராய்ச்சியாளர்களுக்கு கொடுக்க முடியும். நம்மிடம் ஏராளமான தரவுகள் இருக்கப்போகின்றன. அவற்றைக் கொண்டு நாம் என்ன செய்யப் போகிறோம்? ஆராய்ச்சியாளர்களை வரவேற்போம்.

AI மற்றும் பாதுகாப்பு

செயற்கை நுண்ணறிவு ஒரு தொழில்நுட்பத்தில் அமெரிக்காவோ, சீனாவோ முன்னிலையில் இருக்கின்றன என்பது கிடையாது. இந்தியாவின் மக்கள் தொகை காரணமாக இங்கு அற்புதமான ஸ்டார்ட்அப்கள் உருவாகியுள்ளன. மலேசியா, இந்தோனேசியா, தைவான், தென் கொரியா போன்ற நாடுகளிலும் சக்திவாய்ந்த AI தொழில்நுட்பங்கள் உருவாகி வருகின்றன. நாம் டேட்டாவை கொடுக்கிறோம். பதிலுக்கு நம்முடைய AI ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு அந்த நாடுகள் உதவ உள்ளன" என்று கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+