சிங்கப்பூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

அடி உதை, பட்டினி.. பணிப்பெண்ணை சித்ரவதை செய்து கொலை..குற்றத்தை ஒப்புக்கொண்ட இந்திய வம்சாவளி மூதாட்டி

Google Oneindia Tamil News

சிங்கப்பூர்: வீட்டு வேலை செய்து வந்த மியான்மர் நாட்டை சேர்ந்த இளம்பெண்ணை இந்திய வம்சாவளியை சேர்ந்த காயத்ரி முருகையா குடும்பத்தினர் கொடூரமாக சித்ரவதை செய்துள்ளனர். இதில் தலையில் பலத்த காயம் அடைந்து மியான்மர் பெண் உயிரிழந்து இருக்கிறார்.

ஆசிய நாடுகளில் ஒன்றான சிங்கப்பூர். குட்டி நாடான சிங்கப்பூரில் மொத்த மக்கள் தொகையே கடந்த 2020 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் படி சுமார் 55 லட்சம் மட்டுமேயாகும்.

இந்த நிலையில், மியான்மர் நாட்டை சேர்ந்த பியாங்க் கை டான் என்ற 24 வயது இளம்பெண், பீஷான் பகுதியில் வசித்து வரும் இந்திய வம்சாவளி குடும்பத்தினரின் வீட்டில் வீட்டு வேலை செய்யும் பணியில் சேர்ந்தார்.

 உயிரிழந்த பணிப்பெண்

உயிரிழந்த பணிப்பெண்

கடந்த 2015-ம் ஆண்டு பணியில் சேர்ந்த இந்தப் பெண் 14 மாதங்களில் தலையில் ஏற்பட்ட பலத்த காயத்தால் உயிரிழந்தார். இது தொடர்பாக சிங்கப்பூர் போலீசார் நடத்திய விசாரணையில், மியான்மரை சேர்ந்த இளம் பெண், இந்திய வம்சாவளி குடும்பத்தினரால் சித்ரவதைக்கு உள்ளாக்கப்பட்டு தெரியவந்தது.

சித்ரவதை செய்த இந்திய வம்சாவளி மூதாட்டி

சித்ரவதை செய்த இந்திய வம்சாவளி மூதாட்டி

எட்டி உதைப்பது, தாக்குவது, பட்டினி போடுவது மிகக் கொடுமையான சித்ரவதையில் இந்திய வம்சாவளியை சேர்ந்த காயத்ரி முருகையா மற்றும் அவரது கணவர் கெவின் செல்வம் ஈடுபட்டு இருக்கின்றனர். வீட்டில் வேலை செய்யும் பெண்ணை மகள் துன்புறுத்துவதை பார்த்த பிறகு காயத்ரி முருகையாவின் தாயார் பிரேமா நாராயணசாமியும் சித்ரவதை செய்துள்ளார்.

24 கிலோவாக குறைந்த பணிப்பெண்

24 கிலோவாக குறைந்த பணிப்பெண்

முகத்தில் தண்ணீர் ஊற்றுவது, எட்டி உதைப்பது, குத்துவது, அடிப்பது, பட்டினி போடுவது, கழுத்தை நெறித்தல், முடியை பிடித்து இழுப்பது என பணிப்பெண்ணை இறக்கும் வரை சித்ரவதை செய்து இருக்கிறார். இந்திய வம்சாவளியை சேர்ந்த காயத்ரி முருகையா குடும்பத்தினர் மோசமாக நடத்தியதில் 39 கிலோவில் இருந்து 24 கிலோ எடையாக அந்தப் பணிப்பெண் குறைந்துள்ளார்.

முருகையன் மீது வழக்கு பதிவு

முருகையன் மீது வழக்கு பதிவு

தலையில் ஏற்பட்ட காயம் காரணமாக பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக சிங்கப்பூர் போலீசார் வழக்குப்பதிவு விசாரணை தொடங்கினர். இதில் வீட்டில் வேலை செய்யும் மியான்மர் பெண்ணை சித்ரவதை செய்தது தெரியவந்தது. இதையடுத்து காயத்ரி முருகையா மற்றும் அவரது கணவர் கெவின், தாயார் பிரேமா மீது குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டது.

30 ஆண்டுகள் சிறை தண்டனை

30 ஆண்டுகள் சிறை தண்டனை

குற்றம் நீருபணம் செய்யப்பட்டதையடுத்து காயத்ரி முருகையாவிற்கு 30 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. வீட்டில் வேலை செய்யும் பெண்ணை துன்புறுத்திய குற்றச்சாட்டு நிருபணம் செய்யப்பட்டதையடுத்து போலீஸ் பணியில் இருந்து கெவின் செல்வம் நீக்கபப்ட்ட்டு இருந்த நிலையில், அவருக்கு எதிரான குற்றச்சாட்டுகள் விசாரணையில் இருக்கின்றன.

 மோசமான வழக்குகளில் ஒன்று

மோசமான வழக்குகளில் ஒன்று

இந்த நிலையில், காயத்ரி முருகையாவின் தாயாரான 64 வயது மூதாட்டி பிரேமா மீதான வழக்கு நடைபெற்று வந்தது. இதில், தன் மீதான 48 குற்றச்சாட்டுக்களையும் மூதாட்டி ஒப்புக்கொண்டார். இந்த வழக்கு குறித்து கருத்து தெரிவித்த சிங்கப்பூர் உயர் நீதிமன்ற நீதிபதி, இது ஒரு மோசமான வழக்குகளில் ஒன்று என தெரிவித்தார்.

English summary
Gayathri Murugaiah's family of Indian origin brutally tortured a young Myanmar girl who was working as a domestic worker. A Myanmar woman died of severe head injuries.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X