போர்க் குற்றவாளி கோத்தபாய ராஜபக்சேவை கைது செய்ய சிங்கப்பூர் அரசுக்கு மனித உரிமை அமைப்பு நெருக்கடி
சிங்கப்பூர்: இலங்கை போர்க் குற்றவாளியான அந்நாட்டின் முன்னாள் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சேவை கைது செய்ய வேண்டும் என்று சிங்கப்பூர் அரசுக்கு சர்வதேச மனித உரிமைகள் அமைப்பின் வழக்கறிஞர்கள் நெருக்கடி கொடுத்து வருகின்றனர்.
Recommended Video
இலங்கையின் பொருளாதார நிலைமையை சீரமைக்க முடியாமல் பதவியை கைவிட்டு ஓடிப் போனவர் கோத்தபாய ராஜபக்சே. முதலில் மாலத்தீவுக்கு தப்பிப் போன கோத்தபாய ராஜபக்சே பின்னர் சிங்கப்பூரில் தஞ்சமடைந்தார்.

சிங்கப்பூரில் இருந்து அமெரிக்காவின் உதவியுடன் சவுதி செல்ல திட்டமிட்டுக் கொண்டிருக்கிறார் கோத்தபாய ராஜபக்சே. ஆனால் சிங்கப்பூரிலேயே கோத்தபாய ராஜபக்சேவை போர்க்குற்றங்களுக்காக கைது செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. ஏற்கனவே இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் பேசிய எம்.பி.க்கள் இந்த கோரிக்கையை வலியுறுத்தி இருந்தனர். மேலும் பல்வேறு நாடுகளிலும் ஈழத் தமிழர்கள், கோத்தபாய ராஜபக்சேவை கைது செய்ய கோரி போராட்டங்களையும் நடத்துகின்றனர்.
இந்நிலையில் சிங்கப்பூர் அரசாங்கத்திடம் கோத்தபாய ராஜபக்சேவை கைது செய்ய வேண்டும் என்று சர்வதேச மனித உரிமைகளுக்கான வழக்கறிஞர்கள் அமைப்பு வலியுறுத்தி இருப்பதாக ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டுள்ளன. 2009-ம் ஆண்டு தமிழர்களுக்கு எதிரான இறுதி யுத்த காலத்தில் ஒன்றரை லட்சம் அப்பாவி பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டனர். அப்போது இலங்கை பாதுகாப்பு செயலாளராக இருந்தவர் கோத்தபாய ராஜபக்சேதான்.
சர்வதேச நெறிமுறைகளை மீறி தமிழீழத் தமிழர்களை கோத்தபாய ராஜபக்சே இனப்படுகொலை செய்தார்; அவரது கட்டுப்பாட்டில் இருந்த இலங்கை ராணுவம் போர்க்குற்றங்களை மேற்கொண்டது என்பது பொதுவான குற்றச்சாட்டு. இதனடிப்படையில் கோத்தபாய ராஜபக்சேவை கைது செய்ய வேண்டும் என்று சிங்கப்பூர் அரசுக்கு சர்வதேச அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications