ஷாக்கிங்கா இருக்கே! 239 பேருடன் சென்ற மலேசிய விமானம் MH370 விபத்து ஆகலயாம்! எக்ஸ்பர்ட் திடுக் தகவல்
சிங்கப்பூர்: மலேசியா விமானம் கடந்த 2014 ஆம் ஆண்டும் மர்மான முறையில் மாயமாகி விபத்தில் சிக்கியது. இந்த விமானம் எப்படி விபத்தில் சிக்கியது..எந்த இடத்தில் சிக்கியது என்பது தற்போது வரை மர்மமாகவே உள்ள நிலையில், விமானம் விபத்துக்கு உள்ளாகவில்லை என்றும் விமானியின் கொலை திட்டமே காரணம் என்று பிரிட்டனை சேர்ந்த எக்ஸ்பர்ட் ஒருவர் கூறியுள்ளார்.
கடந்த 2014 ஆம் ஆண்டு மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து MH 370 என்ற விமானம் 239 பயணிகளுடன் சீனாவுக்கு புறப்பட்டு சென்றது. பெய்ஜிங்கிற்கு நள்ளிரவு புறப்பட்ட இந்த விமானம் நடு வழியில் திடீரென மாயமானது. தென் சீனக்கடல் பகுதியில் சென்று கொண்டிருந்த விமானம் திடீரென தனது பாதையில் இருந்து விலகி சென்றது செயற்கை கோள் தரவுகளில் தெரியவந்தது.

எனினும், அதன் பிறகு விமானத்தின் தொடர்பு துண்டிக்கப்பட்டதால் விமானம் விபத்தில் சிக்கியிருக்கலாம் என தீவிர தேடுதல் வேட்டை நடைபெற்றது. ஆனால், கிட்டத்தட்ட 10 வருடங்கள் ஆகியும், விமானத்திற்கு என்ன ஆனது என்றே கண்டுபிடிக்க முடியவில்லை. விமானம் விபத்தில் சிக்கியிருக்கலாம் என்று நம்பப்பட்டாலும் விமானத்தின் பாகங்கள் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை.
விமானியின் சதி திட்டமே காரணமா?: இந்திய பெருங்கடலில் பல நூறு சதுர கிலோமீட்டர் பரப்பளவுக்கு ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளும் விமானத்தை தேடும் பணியில் ஈடுபட்டன. எனினும், விமானம் விபத்தில் 10 ஆண்டுகள் ஆகிவிட்ட போதிலும், விமானம் எப்படி விபத்தில் சிக்கியது.. எங்கே சிக்கியது என்ற விவரம் தெரியவில்லை. விமானத்தை பற்றிய பல்வேறு தகவல்களும் அவ்வப்போது கிளம்பி வருகின்றன.
இன்னமும் விமானத்தில் சென்ற 239 பயணிகளின் உறவினர்கள் ரனமான நெஞ்சத்துடன் தங்களது நாட்களை நகர்த்தி வருகின்றனர். எனினும், என்றாவது ஒரு நாள் எம்.எச் 370 விமானத்துக்கு என்ன ஆனது? எங்கு விழுந்தது? போன்ற விவரங்கள் தங்களை வந்தடையும் என்ற நம்பிக்கையில் காத்திருக்கிறார்கள். இதனிடையே, விமானம் விபத்தில் சிக்கியதற்கு விமானியின் சதிதிட்டமே காரணமாக இருக்கும் என்று பிரிட்டனை சேர்ந்த விமான நிபுணர் ஒருவர் சைமன் ஹார்டி கூறியுள்ளார்.
239 பேரும் கடலுக்கு அடியில்: இது தொடர்பாக ஹார்டி கூறியதாவது:- எம். ஹெச் விமானத்தின் விமானி ஜஹாரி அஹ்மத் ஷா விமானத்தில் பயணிக்கும் அனைவரையும் கொலை செய்ய வேண்டும் என்று திட்டமிட்டார். விமானத்தை மிக கவனமாக கடலுக்குள் செலுத்தியுள்ளார். இதனால், விமானத்தில் சென்ற 239 பேரும் கடலுக்கு அடியில் சென்று மரணத்தை அடைந்தனர். ஷாவின் தனிப்பட்ட பிரச்சினை அவரது மனநலனை பாதித்து இருக்கலாம்.
அதன் காரணமாகவே இந்த சோகமான நிகழ்வு அரங்கேறியுள்ளது" என்று கூறியுள்ளார். இதற்கிடையே விமானியின் குடும்பத்தினர் இந்த தகவலை முற்றிலும் மறுத்துள்ளனர். மாயமான விமானம் விபத்துக்குள்ளானது எப்படி என்பது குறித்து பல்வேறு வகையான தகவல்கள் வெளியாகி வந்தாலும் இதுவரை விபத்திற்கான காரணமோ.. விமானம் எங்கு விழுந்து விபத்துக்குள்ளானது என்பதோ கண்டறிய முடியவில்லை. இந்த விமான விபத்து தொடர்பான விசாரணை 2017 ஆம் ஆண்டு கைவிடப்பட்டது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications