சிங்கப்பூரில் பெருந்துயரம்- ஒரே நாளில் 1,462 பேருக்கு கொரோனா உறுதி; பாதிப்பு எண்ணிக்கை 8,014
Subscribe to Oneindia Tamil
சிங்கப்பூர்: சிங்கப்பூரில் கொரோனா வைரஸின் தாக்கம் ஒவ்வொரு நாளும் மிக மிக அதிகரித்து வருகிறது. இதுவரை இல்லாத வகையில் இன்று ஒரே நாளில் 1,462 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
சிங்கப்பூரில் வெளிநாட்டு தொழிலாளர்கள் நெருக்கமான இடங்களில் தங்கி உள்ளனர். இதனால் வெளிநாட்டு தொழிலாளர்களை கொரோனா வைரஸ் மிக வேகமாக தாக்கி வருகிறது.

கடந்த சில நாட்களாக நாள்தோறும் பல நூறு பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டு வந்தது. இந்த நிலையில் இன்று ஒரே நாளில் 1462 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதனைத் தொடர்ந்து சிங்கப்பூரில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 8,014 ஆக அதிகரித்திருக்கிறது.












Click it and Unblock the Notifications