பவன் கல்யாண் மகன் உட்பட 22 பேரை காப்பாற்றிய தமிழக இளைஞர்களுக்கு சிங்கப்பூர் பரிசு

Subscribe to Oneindia Tamil

சிங்கப்பூர்: சிங்கப்பூரில் ஏற்பட்ட தீ விபத்தில் இருந்து ஆந்திரப் பிரதேச துணை முதல்வர் பவன் கல்யாணின் மகன் உட்பட 22 பேரை காப்பாற்றிய தமிழக இளைஞர்கள் 3 பேர் உள்பட இந்தியர்கள் 4 பேரை ஹீரோக்களாக அங்கீகரித்த சிங்கப்பூர் அரசு, சமூக உயிர்காக்கும் விருது வழங்கி கௌரவித்தது. திருச்சி மாவட்டம் லால்குடி அருகே கல்லகம் கிராமத்தை சேர்ந்த சரண் ராஜ் (33), தஞ்சை பட்டுக்கோட்டை எட்டுப்புளிக்காடு பகுதியை சேர்ந்த அன்பரசன், புதுக்கோட்டை அறந்தாங்கியை சேர்ந்த விஜய ராஜ், பஞ்சாப்பை சேர்ந்த இந்தர்சிங் ஆகிய 4 பேருக்கு விருது வழங்கப்பட்டது.

சிங்கப்பூரில் ரிவர் வேலி சாலையில் உள்ள பள்ளி ஒன்றில், கடந்த ஏப்ரல் 8-ம் தேதி தீ விபத்து ஏற்பட்டது. குழந்தைகள் வளப்படுத்தும் மையம், நியூட்டன்ஷோ கேம்ப் மற்றும் பள்ளி உள்பட 3 மாடி கட்டிடத்தில் நடந்த இந்த விபத்தில் பல குழந்தைகள் தீயில் சிக்கி கொண்டனர்.

Singapore government award for Tamil Nadu youth who saved 22 people including Pawan Kalyan s son

அப்போது அதன் அருகில் கட்டுமானப் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த, திருச்சி மாவட்டம் லால்குடி அருகே கல்லகம் கிராமத்தை சேர்ந்த சரண் ராஜ் (33), தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை எட்டுப்புளிக்காடு பகுதியை சேர்ந்த அன்பரசன், புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியை சேர்ந்த விஜய ராஜ், பஞ்சாப்பை சேர்ந்த இந்தர்சிங் ஆகிய 4 பேர் உள்பட 18 பேர் உடனடியாக விரைந்து செயல்பட்டடனர். அவர்கள் தங்களது உயிரை பயணம் வைத்து, தீ விபத்தில் சிக்கிய 16 குழந்தைகள் உட்பட 22 பேரை காப்பாற்றினார்கள்.

இதையடுத்து சிங்கப்பூர் நாட்டின் குடிமைத் தற்காப்புப் படை (SCDF), தீ விபத்தில் 16 குழந்தைகள் மற்றும் ஆறு பெரியவர்களைக் காப்பாற்றியதற்காக தமிழர்கள் 3 பேர் உட்பட 18 நபர்களை அங்கீகரித்து விருது வழங்கி கௌரவித்திருப்பது தெரியவந்துள்ளது.

சம்பவம் நடந்த அன்று தமிழக இளைஞர்கள் பணிபுரிந்த கட்டிடத்திற்கு எதிரே இருந்த பள்ளியில் தீப்பற்றி எரிந்த நிலையில், உடனே சரண் ராஜ் உள்பட அவருடன் பணியாற்றிய மேலும் சிலரும் சேர்ந்து கட்டிட பணிக்கு வைத்திருந்த உயரமான ஏணிகளை பயன்படுத்தி கட்டிடத்தின் மேல் விரைவாக ஏறி, உள்ளே சென்று தீ விபத்தில் சிக்கிய 16 குழந்தைகள் உட்பட 22 பேரை மீட்டிருந்தார்கள். இந்த விபத்தில் ஆந்திரா துணை முதல்வர் பவன் கல்யாண் மகன் மார்க் சங்கரும் தீ விபத்தில் சிக்கியிருந்தார். இதில் மார்க் சங்கரின் கை மற்றும் காலில் தீக்காயம் ஏற்பட்டிருந்தது. அவரையும் தமிழக இளைஞர்கள் பத்திரமாக மீட்டனர்.

இதையடுத்து, அவர்களுக்கு சிங்கப்பூரின் அரசு, துணிச்சலான செயல்களில் ஈடுபடும் புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு வழங்கும் ஏசிஇ நாணயங்களையும், சிங்கப்பூர் மனிதவளத்துறை சார்பில் "Community Lifesaver Award" என்ற விருதையும் வழங்கி கவுரவித்துள்ளது. இதன்படி சிங்கப்பூர் அரசால் துணிச்சலான வீரர்கள் என்று திருச்சி மாவட்டம் லால்குடி அருகே கல்லகம் கிராமத்தை சேர்ந்த சரண் ராஜ் (33), தஞ்சை பட்டுக்கோட்டை எட்டுப்புளிக்காடு பகுதியை சேர்ந்த அன்பரசன், புதுக்கோட்டை அறந்தாங்கியை சேர்ந்த விஜய ராஜ், பஞ்சாப்பை சேர்ந்த இந்தர்சிங் ஆகிய 4 பேர் உள்பட 18 பேருக்கு வழங்கப்பட்டிருக்கிறது..

18 பேரின் விவரம்: சின்னப்பா கண்ணதாசன், ஹசன் இமாமுல், ஷகில் முகமது, தாஸ் தபோஷ், ஹசன் ரஜீப், ரவிக்குமார், வருவேல் கிறிஸ்டோபர், கோவிந்தராஜ் இளங்கேஸ்வரன், முத்துக்குமார் முகேஷ், இந்தர்ஜித் சிங், சிவசாமி விஜயராஜ், நாகராஜன் அன்பரசன், சுப்ரமணியன் சரண்ராஜ், இஸ்லாம் ஷஃபிகுல், சுப்பிரமணியன் ரமேஷ்குமார், பென்சன் லோ, ஷேக் அமிருதின் பின் கமாலுடின் மற்றும் டாக்டர் லாரா பிஃபின்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+