மதுரை டூ சிங்கப்பூர் நேரடி விமான சேவை தேவை.. முதல்வர் ஸ்டாலினிடம் சிங்கப்பூர் அமைச்சர் கோரிக்கை
சிங்கப்பூர்: தமிழ்நாட்டில் தொழில் முதலீடுகளை ஈர்த்திட அரசு முறை பயணமாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிங்கப்பூர் சென்றுள்ள நிலையில், மதுரையிலிருந்து சிங்கப்பூருக்கு நேரடி விமான சேவை குறித்து அந்நாட்டின் உள்துறை அமைச்சர், முதலமைச்சர் ஸ்டாலினிடம் கோரிக்கை வைத்திருக்கிறார்.
அடுத்த ஆண்டு ஜனவரியில் தமிழ்நாட்டில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெற இருக்கிறது. இந்நிலையில் சிங்கப்பூர் நிறுவனங்களை இதில் பங்கேற்க அழைப்பு விடுக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிங்கப்பூர் சென்றிருக்கிறார். அங்கு அந்நாட்டு நிறுவனங்களுடன் 6 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன. இந்நிலையில், அந்நாட்டின் உள்துறை அமைச்சர் சண்முகத்துடன் சந்திப்பை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

இந்த சந்திப்பின்போது மதுரையிலிருந்து நேரடியாக சிங்கப்பூருக்கு விமானம் இயக்க வேண்டும் என்று முதலமைச்சரிடம், உள்துறை அமைச்சர் சண்முகம் கோரிக்கை வைத்துள்ளார். இதற்கு பதிலளித்த முதலமைச்சர் ஸ்டாலின் இந்த கோரிக்கை தொடர்பாக மத்திய அரசிடம் வலியுறுத்தப்படும் என்று கூறியிருந்தார்.
ஏற்கெனவே மதுரை விமான நிலையத்தை பன்னாட்டு விமான நிலையமாக மாற்ற வேண்டும் என்கிற கோரிக்கை கடந்த 10 ஆண்டுகளாக வைக்கப்பட்டு வரும் நிலையில், தற்போது சிங்கப்பூர் உள்துறை அமைச்சரின் கோரிக்கை அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. கடந்த 1962ம் ஆண்டு மதுரையில் விமான நிலையம் திறக்கப்பட்டது. தொடக்கத்தில் பயணிகளின் எண்ணிக்கை குறைவாக இருந்தாலும், பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கியது.
இதனையடுத்து கடந்த 2010ம் ஆண்டு புதிய முணைய கட்டடம் திறக்கப்பட்டது. இங்கிருந்து ஓரிரு நாடுகளுக்கு மட்டுமே நேரடி விமான சேவை இருக்கிறது. ஆனால் மதுரையை சுற்றியுள்ள ராமநாதபுரம், சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த பலர் வெளிநாடுகளில் பரவலாக வேலை செய்து வருகின்றனர். எனவே இதனை பன்னாட்டு விமான நிலையமாக தரம் உயர்த்த வேண்டும் என்று கோரிக்கை கடந்த 10 ஆண்டுகளாக வலியுறுத்தப்பட்டு வருகிறது. ஆனால் தற்போது வரை இந்த விமான நிலையம் சுங்க விமான நிலையமாக மட்டுமே செயல்பட்டு வருகிறது.
இவ்வாறு தரம் உயர்த்தப்பட்டால் மதுரையிலிருந்து சிங்கப்பூருக்கு நேரடி விமான சேவை தடையின்றி தொடரும். இந்த பின்னணியில்தான் சிங்கப்பூர் உள்துறை அமைச்சர் சண்முகம் முதலமைச்சர் ஸ்டாலினிடம் கோரிக்கையை வைத்திருக்கிறார். முன்னதாக கடந்த ஏப்ரல் மாதம் முதல் மதுரை விமான நிலையம் 24 மணி நேரமும் செயல்பட தொடங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
-
விஜய் பிரசாரத்தை முடக்கவே சாலையில் பள்ளம் தோண்டப்பட்டதா? என்ன நடந்தது தெரியுமா? மாநகராட்சி விளக்கம் -
காங்கிரஸ் போட்டியிடும் 16 தொகுதிகள் அறிவிப்பு.. சிட்டிங் சீட்களில் 2-ஐ விட்டுக் கொடுத்தது காங்! -
234/234 DMK seat sharing: தொகுதி பங்கீடு ஓவர்! திமுக கூட்டணியில் யாருக்கு எத்தனை தொகுதிகள்! லிஸ்ட்! -
விசிகவுக்கு திருப்போரூர், பெரியகுளம் உள்பட 8 தொகுதிகள்! உத்தேச பட்டியல் வெளியீடு! -
DMK Vs ADMK: தமிழக தேர்தல்களில் அதிக தொகுதிகளை வென்ற கட்சி எது தெரியுமா? சுவாரஸ்யம்! -
"ஆபாசமாக பேசி மிரட்டல் விடுக்கும் விர்ச்சுவல் வாரியர்ஸ்".. விஜய் மீது ரஞ்சனா நாச்சியார் புகார்! -
நம்பர் 1 முதல்வர் யார்? டாப் 5 லிஸ்ட்டில் யார் யார்? 1952 ராஜாஜி முதல் 2021 ஸ்டாலின் வரை! -
அன்று 3 சீட்டை திருப்பி தந்த சரத்.. இன்று மொத்த சீட்டையும் விட்டு தந்த கமல் - டார்ச் லைட் பவர் என்ன? -
காங்கிரஸ் மீது கடும் அப்செட்டில் ஸ்டாலின்.. வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரத்துக்கு கிளம்ப திட்டம்! -
ஸ்டாலின் வீட்டில் 3 மணி நேரம் காத்திருந்து! கண்ணீருடன் வெளியேறினார் துரைமுருகன்! வேல்முருகன் பகீர் -
உடையும் கூட்டணி? திமுக முதுகில் குத்திய காங்கிரஸ்! நேருக்கு நேர் தோழமைகளுடன் மோதும் கதர் தலைகள்? -
ஸ்டாலின் சொல்லியும் சீட் தரல.. மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி தளர்ந்து விட்டது.. கம்யூனிஸ்ட் ஆதங்கம்












Click it and Unblock the Notifications