மீண்டும் உலகத் தமிழ் செம்மொழி மாநாடு நடத்தும் திட்டம்! சிங்கப்பூர் நாளிதழில் மனம் திறந்த ஸ்டாலின்!
சிங்கப்பூர்: கடந்த 2006-2011 திமுக ஆட்சியின் போது நடைபெற்ற உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு போல் இந்த முறையும் மீண்டும் அதை நடத்தும் திட்டம் உள்ளதாக முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சிங்கப்பூரின் முன்னணி நாளிதழ் ஒன்றுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் அளித்துள்ள பேட்டியில் இதனைக் கூறியிருக்கிறார். மேலும், அந்த பேட்டியில் அதிமுக விவகாரம், பாஜகவுடனான கூட்டணி குறித்தெல்லாம் மனம் திறந்துள்ளார். ஸ்டாலின் அளித்த பதில் வருமாறு;

''தமிழ்நாடு வளர்ந்த வளமிக்க மாநிலமாக இருப்பதால் வடமாநிலத் தொழிலாளர்கள் வேலைக்காகத் தமிழகத்திற்கு வருகிறார்கள், அவ்வளவுதான்! இது தமிழ்நாட்டுக்கு நன்மையே தவிர தீமையன்று. அதற்காக மற்றவர்களது வேலைவாய்ப்பை அவர்கள் பறித்துக்கொள்கிறார்கள் என்று சொல்ல முடியாது.
எங்களைப் பொறுத்தவரை, தமிழர் நலனும் தமிழ்நாட்டின் மேன்மையுமே முக்கியம். அதில் நாங்கள் எப்போதும் உறுதியாக இருப்போம். தமிழ் கட்டாயம், வேலைவாய்ப்பில் தமிழர்களுக்கு முன்னுரிமை போன்ற திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறோம்.
அதிமுக இப்போது நான்கு அணிகளாகப் பிரிந்து கிடக்கிறது. அதுபற்றி எங்களுக்கு கவலையில்லை. அவர்களது பலவீனத்தை வைத்து நாங்கள் அரசியல் செய்வதில்லை. எங்களது கொள்கைகளையும் தொண்டர் பலத்தையும் நம்பியே எப்போதும் இருப்போம்.
கலைஞர் காலத்தில் நிகழ்ந்ததைப்போல, பாஜகவடன் திமுக கூட்டு சேர வாய்ப் பில்லை, வாஜ்பாய் தலைமையிலான அன்றைய பாஜகவிற்கும் இன்றைய பாஜக விற்கும் நிறைய வேறுபாடு உள்ளது. அமைச்சராக உதயநிதியின் செயல்பாடு பெருமைப்படத்தக்க வகையில் இருக்கிறது.
முந்தைய திமுக ஆட்சியில் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு நடத்தியது போல, இம்முறையும் அதற்கான திட்டம் உண்டு. அதற்கான சூழல் அமையும்போது உரிய அறிவிப்பு வெளியாகும்.'' இவ்வாறு சிங்கப்பூர் நாளிதழுக்கு அளித்த பேட்டியில் முதல்வர் ஸ்டாலின் மனம் திறந்துள்ளார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications