சிங்கப்பூரில் மனைவிக்கு தங்க சங்கிலி வாங்கிய தமிழருக்கு ஜாக்பாட்.. 8 கோடி பரிசு விழுந்தது

Subscribe to Oneindia Tamil

சிங்கப்பூர்: சிங்கப்பூரைச் சேர்ந்த தமிழரான பாலசுப்பிரமணியம் சிதம்பரம் என்பவர் சிங்கப்பூரில் உள்ள நகைக்கடைக்கு சென்று தனது மனைவிக்கு தங்கச் சங்கிலி வாங்கியுள்ளார். அந்த கடையில் குலுக்கள் முறையில் வெற்றி பெறும் அதிரஷ்டசாலிகளுக்கு பரிசு தரப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் தங்கச்சங்கிலி வாங்கிய சிங்கப்பூர் தமிழருக்கு அதிர்ஷ்டம் அடித்துள்ளது. குலுக்கலில் அவருக்கு ரூ.8 கோடி மதிப்புள்ள பரிசு கிடைத்திருக்கிறது.

அதிர்ஷ்டம் ஒருவருக்கு எப்படி அடிக்கும் என்பது யாருக்குமே தெரியாது.. அதுவும் லாட்டரி பரிசு, குழுக்கலில் பரிசு போன்ற அதிர்ஷ்டங்கள் ஒருவருக்கு வாழ்வில் கிடைப்பது என்பது அபூர்வமான விஷயம் ஆகும். ஏனெனில் நம்மை போலவே வாங்கிய பலஆயிரம் பேரில் நமக்கு பரிசு விழுகிறது என்றால் அது அதிர்ஷ்டம் தான்.. அந்த அதிர்ஷ்டம் எப்படிப்பட்ட சந்தோஷத்தை கொடுக்கும் என்பது அதனை அனுபவித்தவர்களே வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது.. லாட்டரியில் பரிசு விழுந்த உடன் கவுண்டமணி செந்திலை பார்த்தால், இந்த வீடு என்ன விலை வரும். இந்த ரோடு என்ன விலை வரும் என்று கேட்பார்.. அப்படித்தான் உண்மையில் இருக்கும். சிங்கப்பூரைச் சேர்ந்த தமிழர் ஒருவருக்கு தங்கச்சங்கிலி வாங்க போன போது 8 கோடி ரூபாய் அதிர்ஷ்டம் அடித்துள்ளது.

singapore gold jackpot

தமிழரான பாலசுப்பிரமணியம் சிதம்பரம் என்பவர் சிங்கப்பூரில் வசித்து வருகிறார். இவரது பெற்றோர் தமிழகத்திலிருந்து சிங்கப்பூருக்கு சென்ற நிலையில் அங்கேயே செட்டில் ஆகிவிட்டனர். பாலசுப்பிரமணியம் சிதம்பரம் 21 ஆண்டுகளாக சிங்கப்பூரில் புராஜக்ட் இன்ஜினீயராக வேலை செய்து வருகிறார்.

பாலசுப்பிரமணியம் சிதம்பரம் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று சிங்கப்பூர் லிட்டில் இந்தியா பகுதியிலுள்ள முஸ்தபா ஜுவல்லரிக்குச் சென்றுள்ளார். அங்கு தனது மனைவிக்காக 6 ஆயிரம் சிங்கப்பூர் டாலர் மதிப்பில் தங்கச் சங்கிலி வாங்கியிருக்கிறார். அதாவது இந்திய மதிப்பில் 3,78,887 ரூபாய்க்கு தங்க சங்கலி வாங்கினார். இந்தக் கடையில் குறைந்தது 250 சிங்கப்பூர் டாலருக்கு பொருட்கள் வாங்குபவர்களுக்காக குலுக்கல் பரிசை அந்தக் கடை நடத்தி வந்திருக்கிறது. அந்த குலுக்கல் பரிசுப் போட்டிக்கு கூப்பனை எழுதி போட்டியிருந்தார் பாலசுப்பிரமணியம் சிதம்பரம்.

இந்நிலையில் அந்தக் குலுக்கலில் 10 லட்சம் அமெரிக்க டாலர்கள் பாலசுப்பிரமணியம் சிதம்பரத்திற்கு பரிசு கிடைத்துள்ளது. அதாவது இந்திய மதிப்பில் ரூ.8 கோடிக்கும் அதிகமானது இந்த பரிசுத்தொகையாகும். இந்த பரிசு கிடைத்தது குறித்து பாலசுப்பிரமணியம் சிதம்பரம் கூறுகையில், இன்று (நேற்று) என்னுடைய தந்தையின் 4-வது ஆண்டு நினைவு நாள் ஆகும். இந்தப் பரிசு என் தந்தையின் ஆசீர்வாதமாகவே நான் கருதுகிறேன். இந்த தகவலை எனது தாய்க்குத் தெரிவித்துவிட்டேன். இதில் கிடைக்கும் ஒரு பகுதி பணத்தை நான் சிங்கப்பூரில் தங்கியிருந்த பகுதியின் மேம்பாட்டுக்காக தானமாக தரப் போகிறேன் என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+