Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

காவி உடையில் திருவள்ளுவர், ஔவையார்! சிங்கப்பூர் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸில்.. இடம் பிடித்த "ஷாக்" கோலம்

தமிழ்நாட்டில் காவி திருவள்ளுவர் சர்சை நீடித்து வரும் நிலையில் இந்த கோலம் சிங்கப்பூரில் அங்கிகாரத்தை பெற்றிருக்கிறது.

Subscribe to Oneindia Tamil

சிங்கப்பூர்: சிங்கப்பூரில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பொங்கல் விழாவில் தமிழர்கள் இருவர் சேர்ந்து ரங்கோலி கோலமிட்டு அசத்தியுள்ளனர். அவர்கள் திருவள்ளுவர், ஔவையார் போன்ற தமிழறிஞர்களின் உருவப்படத்தை ரங்கோலியாக கோலமிட்டுள்ளனர். ஆனால் இதில் திருவள்ளுவர் காவி உடையில் பட்டையிட்டவாறு சித்தரிக்கப்பட்டுள்ளார். இந்த கோலம் சிங்கப்பூர் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸில் இடம்பிடித்துள்ளது.

உலகம் முழுவதும் தமிழர்கள் வாழும் நாடுகளில் பொங்கல் பண்டிக வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்நிலையில், சிங்கப்பூரில் கடந்த வாரம் லிட்டில் இந்தியா வளாகத்தில் இந்த பொங்கல் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டது. கலை நிகழ்ச்சிகள், பட்டிமன்றம் என இந்த நிகழ்ச்சி வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்த கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக தமிழறிஞர்களை சிறப்பிக்கும் வகையில் ரங்கோலி கோலமிடப்பட்டது.

வழக்கமாக இந்த கோலத்தை சுதா ரவி எனும் பெண்மணி சிறப்பாக வரைந்து கொடுப்பார். கடந்த 2016ம் ஆண்டு 3,200 சதுர அடியில் இவர் போட்ட ரங்கோலி கோலம் அனைவராலும் பரவலாக பாராட்டப்பட்டது. இக்கோலம் சிங்கப்பூர் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸில் இடம்பிடித்தது. இதனையடுத்து இந்த ஆண்டு வித்தியசமாக கோலம் போட யோசித்த சுதா ரவி ஐஸகிரீம் குச்சிகளை கொண்டு இந்த கோலத்தை வடிவமைக்க தொடங்கினார்.

தமிழறிஞர்கள்

தமிழறிஞர்கள்

இதற்கு முன்னர் அரிசி மாவு, சுண்ணாம்பு மற்றும் சாப்ஸ்டிக்ஸைப் பயன்படுத்தி கோலத்தை போட்டிருந்தார். இந்நிலையில் ஐஸ்கிரீம் குச்சியை பயன்படுத்துவதால் சுமார் ஒரு மாதத்திற்கு முன்னரே இந்த கோலத்தை போட தொடங்கிவிட்டார் சுதா ரவி. இவருக்கு கலாமஞ்சரி அமைப்பினர் உதவியாக இருந்துள்ளனர். இது குறித்து கலைமஞ்சரியின் நிறுவனர் சௌந்தர நாயகி வைரவன் கூறுகையில், நாங்கள் இசை மற்றும் நடனம் மூலம் தமிழ் இலக்கியப் படைப்புகளை தொடர்ந்து மக்கள் மத்தியில் உயிர்ப்புடன் வைத்து வருகிறோம். தற்போது இந்த முயற்சியின் ஒரு பகுதியாக கோலம் மூலம் தமிழறிஞர்களை வரைய சுதா ரவி வரைய தொடங்கினார்.

வரவேற்பு

வரவேற்பு


இது மிகவும் வரவேற்க வேண்டிய விஷயம். எனவே நாங்கள் இதனை வரவேற்று அவருக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்து கொடுத்தோம். அதோல இந்த முறை சுதா மட்டும் தனியாக களமிறங்கவில்லை. அவளது மகள் ரக்ஷிதாவும் அவருடன் இணைந்துள்ளார். இவர்கள் இருவரும் சிங்கப்பூரில் தமிழ் கலாச்சாரத்தை தொடர்ந்து ஊக்குவித்து வருகின்றனர்" என்று கூறியுள்ளார். ஒருவழியாக திட்டமிட்டவாறு கோலம் போட்டு முடித்துள்ளனர். திருவள்ளுவரும், ஔவையாரும் காவி உடையில் நெற்றியில் பட்டையுடன் இருப்பதை போன்று சித்தரித்துள்ளனர்.

காவி திருவள்ளுவர்

காவி திருவள்ளுவர்

திருவள்ளுவருக்கு காவி உடை அணிவதாக சர்ச்சை நீடித்து வரும் நிலையில் இந்த காவி உடையுடன் கூடிய ரங்கோலி ஓவியம் சிங்கப்பூரின் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸில் இடம்பிடித்துள்ளது. தமிழ்நாட்டை பொறுத்த அளவில், திருவள்ளுவர் ஒரு சமண முனிவராக இருக்கலாம் என்று ஆய்வாளர்கள் கூறி வருகின்றனர். ஏனெனில் இவர் இயற்றிய திருக்குறளில் கடவுளை பற்றி எந்த இடத்திலும் குறிப்பிடவில்லை. எனவே ஆய்வாளர்கள் இவரை சமண முனிவர் என்று கருதுகின்றனர். ஆனால் பாஜக இதனை ஏற்கவில்லை. திருவள்ளுவர் இந்து மதத்தை சேர்ந்தவர் என்று உறுதியாக கூறுகின்றனர்.

 விளக்கம்

விளக்கம்

திருக்குறளின் முதல் குறளான அகர முகல எனும் குறளில் குறிப்பிட்டுள்ள 'ஆதி பகவன்' எனும் வார்த்தை கடவுளை குறிப்பதாக பாஜக ஆதரவாளர்கள் கூற, இது பவகன் இல்லை 'பகலன்' என்றும் இதற்கு அர்த்தம் சூரியன் என்றும் இரு வேறு கருத்துக்கள் நிலவி வருகின்றன. இந்த சர்ச்சை அடிக்கடி தமிழ்நாட்டில் பெரும் விவாதங்களை கிளப்பி வரும் நிலையில் சிங்கப்பூர் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸில் இந்த காவியுடையுடன் கூடிய ரங்கோலி ஓவியம் இடம் பிடித்திருப்பது தற்போது பேசுபொருளாகியுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+