பாடகர் வேல்முருகனுக்கு கிராமிய இசை கலாநிதி பட்டம் - தருமபுரம் ஆதினத்தின் ஆஸ்தான பாடகராக நியமனம்
பாடகர் வேல்முருகனுக்கு தருமபுரம் அதீனம் சார்பில் கிராமிய இசை கலாநிதி பட்டம் வழங்கப்பட்டது, தருமபுரம் ஆதினத்தின் ஆஸ்தான பாடகராகவும் அவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
விருதாச்சலம்: திரைப்பட பின்னணி பாடகரும், நாட்டுப்புற இசை பாடகருமான டாக்டர் வேல்முருகனுக்கு தருமபுரம் ஆதீனம் 27-வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞான சம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள், கிராமிய இசை கலாநிதி என்கிற பட்டத்தை வழங்கினார், மேலும் தருமபுரம் ஆதீனத்தின் ஆஸ்தான பாடகராகவும் அறிவித்தார்.
பாடகர் வேல்முருகன் நாட்டுப்புற பாடல்களைப் பாடி புகழ்பெற்றவர். சுப்ரமணியபுரம் படத்தில் திரைப்பட பின்னணி பாடகராக அறிமுகமானார். தொடர்ந்து நாடோடிகள் , அசுரன் வரை பல படங்களில் ஹிட் பாடல்களை பாடியுள்ளார். பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் பங்கேற்றார். பல கோவில் விழாக்களில் பிரதானமாக பக்திப்பாடல்களைப் பாடி வருகிறார் வேல்முருகன்.

கடலூர் மாவட்டம் விருத்தாச்சலத்தில் விருதகிரீஸ்வரர் கோவில் குடமுழுக்கு விழா கடந்த ஞாயிறுக்கிழமை நடைபெற்றது. 20ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெற்ற கும்பாபிஷேக விழாவில் பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். பக்தர்கள் மீது ஹெலிகாப்டர்கள் மூலம் மலர்களும் புனித நீரும் தூவப்பட்டன.
இந்த விழாவில் தருமபுரம் ஆதினம், திருவாவடுதுறை ஆதீனம், திருப்பனந்தாள் காசி மடத்து எஜமான் சுவாமிகள் மற்றும் மதுரை ஆதீனம், குன்றக்குடி ஆதீனம், திருமுதுகுன்றம் வீரசைவ ஆதீனம், காஞ்சி சங்கர மடம் பீடாதிபதி ஆகியோர் பங்கேற்றனர்.
இந்த விழாவில் திரைப்பட பின்னணி பாடகரும் நாட்டுப்புற இசை பாடகருமான டாக்டர் வேல்முருகன் அவர்களுக்கு "கிராமிய இசை கலாநிதி" என்கிற பட்டத்தை தர்மபுரம் ஆதினம் வழங்கினார். அதோடு தர்மபுரம் அதினத்தின் ஆஸ்தான பாடகராகவும் வேல்முருகன் அறிவிக்கப்பட்டுள்ளார்.
இதற்கு முன் பாடகர் டாக்டர் யேசுதாஸ் இந்த பொறுப்பில் இருந்து வந்தார். அவருக்கு பிறகு முதல் முறையாக கிராமிய நாட்டுப்புற பாடகரை தருமபுரம் ஆதீனம், சிவாலயங்களுக்கு ஆஸ்தான பாடகராக அறிவித்துள்ளது வரவேற்பை பெற்றுள்ளது.
இதில் திருப்பணிக் கமிட்டி குழு தலைவர் அகர்சந்த், தொழிலாளர் துறை அமைச்சர் சி. வெ.கணேசன், இந்து சமய அறநிலைத்துறை ஆணையர் அசோக்குமார் முன்னிலையில் தருமபுரம் ஆதின சுவாமிகள் டாக்டர். வேல்முருகனுக்கு கிராமிய இசை கலாநிதி எனும் பட்டத்தை வழங்கி, தங்கப்பதக்கம் அளித்து அருளாசி வழங்கினார். நாட்டுப்புற இசைக் கலைக்கு கவுரவத்தை அளித்துள்ளதாக பாராட்டை பெற்றுள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications