முயல் வேட்டைக்காக சென்ற அப்பா, இரு மகன்கள்.. பன்றிக்கான மின்வேலியில் சிக்கி பலி.. சிவகங்கையில் சோகம்
சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் திருப்பாச்சேத்தி அருகே முயல் வேட்டைக்காக சென்ற அப்பா மற்றும் இரு மகன்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் மாவட்டம் திருச்சுழி ஒன்றியத்துக்குள்பட்ட முகவூர் கிராமத்தைச் சேர்ந்தவர் அய்யங்காளை. இவருக்கு அஜித், சுதந்திரபாண்டி என்ற இரண்டு மகன்கள் உள்ளனர்.
சுதந்திரபாண்டி அண்மையில் நடந்த காவலர் தேர்வு எழுதி வெற்றி பெற்றுள்ளார். மேலும் ராணுவ வீரரான அஜித்திற்கு கடந்த ஆண்டு திருமணமான நிலையில் கர்ப்பிணியாக இருந்த அவரது மனைவிக்கு கடந்த இரு வாரங்களுக்கு முன்பு குழந்தை பிறந்தது.

குழந்தையை பார்ப்பதற்காக அஜித் விடுப்பு எடுத்துக் கொண்டு நேற்று இரவு சொந்த ஊருக்கு வந்தார். இந்த நிலையில் இன்று காலை அய்யங்காளை தனது இரு மகன்களுடன் அருகில் உள்ள திருப்பாச்சேத்தி மாரநாடு காட்டுப் பகுதியில் உள்ள ஒரு தோட்டத்திற்கு முயல் வேட்டைக்கு சென்றதாக கூறப்படுகிறது.
அப்போது அங்கு பன்றி பிடிக்க போடப்பட்டிருந்த மின்வேலியில் எதிர்பாராதவிதமாக மூவரும் சிக்கினர். இதில் அய்யங்காளை, அஜித், சுதந்திரபாண்டி ஆகிய மூவரும் மின்சாரம் தாக்கி இறந்து கிடப்பது குறித்து காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த திருப்பாச்சேத்தி காவல் துறையினர் மூவரின் உடல்களை பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த காவல் துறையினர் சம்பவம் விசாரித்து வருகின்றனர்.
-
கோயம்பேடு மதுபான பார் மோதலில்.. கார் ஏற்றி கொல்லப்பட்ட இலங்கை இளம்பெண்.. சென்னை வந்தது எப்படி? -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
குளிர்பானத்தில் மயக்க மருந்து.. ஏர்வாடி விடுதியில் கொடூரம்! கூட்டு பலாத்காரம்.. தவெக நிர்வாகி கைது -
சிறுமிகளுக்கு மது சப்ளை.. சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வந்த கோயம்பேடு பார்.. 'திடுக்' தகவல்! -
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு












Click it and Unblock the Notifications