அரசுப்பள்ளியில் மின்சாரம் தாக்கி மாணவர் பலி.. கணவனை தொடர்ந்து மகனை இழந்த தாய்.. காரைக்குடியில் சோகம்
சிவகங்கை: காரைக்குடி அருகே உள்ள பொய்யாவயல் அரசுப் பள்ளியில் மின்சாரம் தாக்கி 9ஆம் வகுப்பு மாணவர் சக்தி சோமையா உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனைத் தொடர்ந்து மாணவரின் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள பொய்யாவயல் கிராமத்தில் ஊராட்சி உயர்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு மாணவர் சக்தி சோமையா 9ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இவருக்கு தந்தை இல்லாத நிலையில், தாய் மட்டுமே தனியாக இருந்து படிக்க வைத்து வந்துள்ளார். இந்த நிலையில் இன்று கணினி வகுப்பு நடைபெற்றுள்ளது.

அப்போது ஆசிரியர் தரப்பில் கணினிக்கான இணைப்பை வழங்கும் போது உதவியாளரிடம் அறிவுறுத்தி உள்ளார். இந்த நிலையில் மாணவர் சக்தி சோமையா கணினியில் இணைப்பு கொடுப்பதற்காக பிளக் வயரை எடுத்து மாட்டிய போது, திடீரென மின்சாரம் தாக்கி விபத்து ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கேயே சக்தி சோமையா தூக்கி வீசப்பட்டுள்ளார்.
இதனைத் தொடர்ந்து உடனடியாக அவர் காரைக்குடி அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளார். அப்போது மாணவன் சக்தி சோமையாவை பரிசோதித்த மருத்துவர்கள், மாணவர் சக்தி சோமையா ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இதன்பின் பெற்றோருக்கு இந்த சம்பவம் குறித்து தகவல் அளிக்கப்பட்டுள்ளது.
பின்னர் தாயுடன் மாணவரின் கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்களும் மருத்துவமனைக்கு வந்துள்ளனர். அப்போது கிராமத்தினர் தரப்பில், மாணவரின் உயிரிழப்பிற்கு அரசுப் பள்ளி நிர்வாகமே காரணம் என்று குற்றம்சாட்டப்பட்டது. இதனால் காரைக்குடி வட்டாட்சியர் ராஜா உடனடியாக சம்பவ இடத்தில் சென்று ஆய்வு செய்துள்ளார்.
பின்னர் மருத்துவமனை வந்த அவர், மாணவனின் உறவினர்களுடன் சமாதானப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளார். ஏற்கனவே கணவனை இழந்த தாய் வளர்மதி, தற்போது மகனையும் பறிகொடுத்துள்ள சம்பவம் அக்கிராம மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக மாவட்ட கல்வி அலுவலர் தரப்பில் எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை.
-
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
ரேஷன் அட்டைதாரர்களுக்கு மெகா ஆஃபர்: ஒரே மாதத்தில் 3 மாத ரேஷன்! மத்திய அரசின் சர்ப்ரைஸ் பின்னணி என்ன -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க!












Click it and Unblock the Notifications