கண்ணே நவமணியே உன்னை.. இறந்த மகளுக்கு பூப்புனித நீராட்டு தாலாட்டு பாடி கண்கலங்கிய தாய்..!
சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் இறந்த மகளின் ஆசையை நிறைவேற்ற அன்னையர் தினத்தில் மகளின் கட்அவுட்டிற்கு பூப்புனித நீராட்டு விழா நடத்திய தாயை உறவினர்கள், பொதுமக்கள் நெகிழ்ச்சியுடன் பாராட்டினர்.
உலகில் தாய்ப்பாசத்தை மிஞ்சியது எதுவுமே இல்லை. அதிலும் பெண் குழந்தைகள் என்றாலே தாய்க்கு மிகவும் பிரியமானவராகத்தான் இருப்பார். பெண் குழந்தை பிறந்து திருமணம் முடிந்து சென்றால் கூட தாய்க்கு அவர் குழந்தை தான்..

அப்படி ஒரு நெகிழ்ச்சி தரும் தாய்ப்பாச நிகழ்வை தான் தற்போது பார்த்திருக்கிறது சிவகங்கை. திருப்புவனத்தைச் சேர்ந்த கூலி தொழிலாளி பாலகிருஷ்ணன் & ராக்கு தம்பதியினருக்கு பாண்டிச்செல்வி என்ற ஒரே ஒரு பெண்குழந்தை தான், வேறு குழந்தைகள் இல்லை.
சிவகங்கை சிறுமி: சிறு வயதில் இருந்தே பாண்டிச்செல்விக்கு அலங்காரம் என்றாலே மிகவும் இஷ்டம், பள்ளி சென்று வந்த பின் பெரிய பெண் போன்று சேலை கட்டி பூ வைத்து வலம் வருவது வழக்கம், உறவினர் வீட்டு விசேஷங்களுக்கு அழைத்துச் செல்லும் போது அங்கும் மிகுந்த அலங்காரத்துடன் வலம் வந்துள்ளார். உறவினர்கள், நண்பர்கள் வீட்டு பூப்புனித நீராட்டு விழாவிற்கு செல்லும் போது தாய் ராக்குவிடம் தான் பூப்பெய்தும் போது இது போன்று பிரம்மாண்டமாக விசேஷம் நடத்த வேண்டும் என கேட்டுள்ளார்.
திடீர் மரணம்: ஒரே பெண் என்பதால் அவர் சொல்வதற்கு எல்லாம் ஆமோதித்துள்ளார். பிறந்த நாள் உள்ளிட்ட தினங்களில் விசேஷங்களை பிரம்மாண்டமாக கொண்டாடியுள்ளனர். கடந்த மூன்று வருடங்களுக்கு முன் 8ம் வகுப்பு படிக்கும் போது திடீரென உடல்நலக்குறைவால் பாண்டிச்செல்வி உயிரிழந்துள்ளார்., ஒரே மகள் மரணமடைந்ததை ஜீரணிக்க முடியாமல் இருந்த ராக்கு தனது மகள் தன்னுடனேயே வாழ்ந்து வருவதாக எண்ணி வலம் வருகிறார்.
இறந்த மகளுக்கு நிகழ்ச்சி: தற்போது அவரது மகளுக்கு 14 வயது ஆகும் என்றும் உயிருடன் இருந்தால் பூப்பெய்து இருப்பார் என எண்ணி அவருக்கு பூப்புனித (சடங்கு) நீராட்டு விழா அன்னையர் தினத்தில் நடத்த திட்டமிட்டுள்ளார். உறவினர்கள் அனைவரையும் அழைத்து அன்னையர் தினத்தில் கொண்டாட எண்ணிய போது திருமண மகால் கிடைக்காததால் நேற்று மகளின் பூப்புனித நீராட்டு விழாவை வெகு விமரிசையாக நடத்தினார். உறவினர்கள் அனைவரையும் பத்திரிக்கை வைத்து அழைத்து தனியார் கல்யாண மண்டபத்தில் மகளை போன்றே கட்அவுட் செய்து அதற்கு பட்டுச்சேலை, நகை, மாலை அணிவித்து விழாவை நடத்தினார்.
சீர்வரிசை: மகளின் காலடியில் அவர் பயன்படுத்திய கொலுசு உள்ளிட்டவைகளும் உறவினர்கள் கொண்டு வந்த பட்டுச்சேலை, நகை சீர் வரிசை உள்ளிட்டவைகளும் பரப்பி வைக்கப்பட்டன. விசேசங்களின் போது சம்பந்தப்பட்டவர்களுடன் புகைப்படம் எடுப்பது போன்று மகளின் அலங்கரிக்கப்பட்ட கட்அவுட் உடன் சேர்ந்து உறவினர்கள், ராக்கு, அவரது கணவர் பாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் போட்டோ எடுத்து கொண்டனர்.
உறவினர்கள் நெகிழ்ச்சி: ராக்குவிற்கும் அவரது மகள் பாண்டிச்செல்விக்கும் "என் பொம்முகுட்டி அம்மாவிற்கு" என்ற திரைப்படத்தில் நடிகை சுஹாசினி மகளை பறிகொடுத்த பின் பாடும் "கண்ணே நவமணியே உன்னை காணாது நெஞ்சு" என்ற பாடல் ரொம்ப பிடிக்குமாம், அடிக்கடி தாயும் மகளும் அந்த பாடலை பாடுவது வழக்கம், தினசரி இரவிலும் அந்த பாடலை பாடிய பின்தான் பாண்டிச்செல்வி தூங்குவாராம், துரதிஷ்டவசமாக அந்த பாடல் அவரது வாழ்க்கையில் உண்மையாகி போனதுதான் சோகம், பூப்புனித விழாவில் தாயார் ராக்கு அந்த பாடலை பாடியது உறவினர்களை சோகத்தில் ஆழ்த்தியது.
-
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம்












Click it and Unblock the Notifications