அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 500கோடி, தேமுதிகவுக்கு 200கோடி... சி.ஆர்.சரஸ்வதி பகீர்
Recommended Video

காரைக்குடி: அதிமுக கூட்டணி செட்டில்மெண்ட் கூட்டணி என்றும், பாமகவுக்கு ரூ.500கோடியும், தேமுதிகவுக்கு ரூ.200 கோடியும் கொடுக்கப்பட்டிருப்பதாக அமுமுகவின் செய்தி தொடர்பாளர் சி.ஆர்.சரஸ்வதி குற்றம்சாட்டியுள்ளார்.
சிவங்கை தொகுதியில் அமமுக சார்பில் தேர்போகி பாண்டி போட்டியிடுகிறார். இவரை ஆதரித்து காரைக்குடியில் அந்த கட்சியின் செய்தி தொடர்பாளர் சி.ஆர்.சரஸ்வதி நேற்று பிரச்சாரம் செய்தார்.
அப்போது அவர் பேசுகையில், "சென்னையில் நடந்த தையல் கலைஞர்கள் தேர்தலில் 18 ஓட்டுக்கள் கூட வாங்காதவர் ஹெச்.ராஜா. அவரை இங்கு எம்பி வேட்பாளராக ஓபிஎஸ்ம் ஈபிஎஸ்ம் நிறுத்தி இருக்கிறார்கள்.

மதக்கலவரம்
மத கலவரத்தை தூண்டும் வகையில் ஹெச்.ராஜா பேசியதை யாரும் மறந்திருக்க முடியாது. நாகரீகம் இல்லாமல் பேசக்கூடியவர். இவரை டெல்லிக்கு அனுப்பினால் என்னவாகும். ஹெச்.ராஜா வாக்கு கேட்டு வந்தால் முதலில் ரூ.15லட்சத்தை போட சொல்லுங்கள். அதன்பிறகு ஓட்டு கேட்டு வரசொல்லுங்கள்.

மனசாட்சி இல்லா கூட்டணி
மனசாட்சிக்கு தூரோகம் செய்துவிட்டு பாமக, தேமுதிக கட்சிகளுடன் அதிமுக கூட்டணி வைத்துள்ளது. மறைந்த முதல்வர் ஜெயலலிதாவை குற்றவாளி என்று ராமதாஸ் சொன்னார். அவரது மகன் அன்புமணி, ஓபிஎஸ், ஈபிஎஸ்ஐ பார்த்து மனம் இருக்கா, வெட்கம் இருக்கா என கேட்டார். ஆனால் அவர்களுடன் இன்றைக்கு அதிமுக கூட்டணி வைத்துள்ளது.

தேமுதிகவுக்கு 200கோடி
அதிமுக கூட்டணி செட்டில்மெண்ட் கூட்டணி, பாமகவுக்கு ரூ.500 கோடியும், தேமுதிகவும் ரூ.200 கோடியும் கொடுத்து மாட்டுச்சந்தையில் துண்டு போட்டு முடிவு செய்வது போல் பேரம் பேசி கூட்டணி வைத்துள்ளார்கள்.

முதல்வர் மீது தாக்கு
எல்லோரும் தேர்தலில் நின்று வெற்றி பெற்றுத்தான் பதவிக்கு வரமுடியும். ஆனால்இந்த உலகத்திலேயே நாலு காலில் முட்டிப்போட்டு சென்று முதல்வர் பதவியை பெற்றவர் எடப்பாடி பழனிச்சாமி" இவ்வாறு கூறினார். சசிகலா காலில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி விழுந்ததை பற்றித்தான் சி.ஆர்.சரஸ்வதி இப்படி கடுமையான விமர்சனத்தை தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications