டெல்லிக்கு டூர் கிளம்பிய காங்கிரஸ் நிர்வாகிகள்! A to Z எல்லா செலவுகளும் கார்த்தி சிதம்பரம் பொறுப்பு!

Subscribe to Oneindia Tamil

சிவகங்கை: சிவகங்கை மக்களவைத் தொகுதிக்குட்பட்ட காங்கிரஸ் நிர்வாகிகளை ஒரு வாரப்பயணமாக டெல்லிக்கு சுற்றுலா அழைத்துச் செல்கிறார் கார்த்தி சிதம்பரம் எம்.பி.

டெல்லியில் நாடாளுமன்றம், தாஜ்மஹால், செங்கோட்டை என பல்வேறு இடங்களுக்கு காங்கிரஸ் நிர்வாகிகளை அழைத்துச் சென்று சுற்றிக்காட்டும் கார்த்தி சிதம்பரம் அவர்களுக்கான பயணச் செலவு, தங்குமிடம், சாப்பாடு உள்ளிட்ட சுற்றுலா செலவை முழுமையாக ஏற்றுக்கொண்டிருக்கிறார்.

Congress executives left for Delhi tour! Karthi Chidambaram responsible for A to Z all expenses!

இதன் மூலம் கார்த்தி சிதம்பரம் வரும் 2024 நாடாளுமன்றத் தேர்தலில் மீண்டும் சிவகங்கை தொகுதியில் போட்டியிடுவார் என்பது தெரிய வருகிறது. இதனால் தான் தனது தொகுதியை சேர்ந்த காங்கிரஸ் நிர்வாகிகளை அவர் குஷிபடுத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த 4 ஆண்டுகளாக விட்டுவிட்டு பதவிக்காலம் முடியவுள்ள கடைசி ஆண்டில் காங்கிரஸ் நிர்வாகிகளை டெல்லிக்கு சுற்றுலா அழைத்துச் சென்றிருப்பதன் மூலம் அதிருப்திகளை சரி செய்ய முடியும் என நம்புகிறார் கார்த்தி சிதம்பரம். தேர்தல் பணிகளில் நிர்வாகிகள் சுணக்கம் காட்டக்காட்டக் கூடாது என்பதால் தான் இந்த சிறப்பு கவனிப்பாம்.

Congress executives left for Delhi tour! Karthi Chidambaram responsible for A to Z all expenses!

எல்லாம் சரி, வரும் 2024 நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் சிவகங்கை தொகுதி காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஏனெனில் கடந்த காலங்களில் திமுகவை விமர்சிக்கும் வகையில் கார்த்தி சிதம்பரம் பல்வேறு கருத்துக்களை கூறியிருக்கிறார். அதுமட்டுமல்ல ராகுல்காந்தியுடனும் கார்த்தி சிதம்பரத்துக்கு டேர்ம் சரியில்லை எனத் தெரிகிறது.

இதனிடையே சிவகங்கை தொகுதியில் மீண்டும் சீட் வாங்கிவிட வேண்டும் என்பதில் உறுதியாக கார்த்தி சிதம்பரம், கார்கே மூலம் அதற்கு காய் நகர்த்தி வருவது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+