பிபி மாத்திரை சாப்பிட சொன்ன மருத்துவரை கடவுளானு கேட்ட முதியவர்! அவர் பாணியிலேயே மடக்கிய பரூக்
சிவகங்கை: உயர் ரத்த அழுத்தத்திற்கு மாத்திரையே எடுக்காமல் வந்த 60 வயது முதியவரிடம் அவரது வழியிலேயே சென்று புரிய வைத்துள்ளார் சிவகங்கை அரசு மருத்துவர் டாக்டர் பரூக் அப்துல்லா.
இதுகுறித்து அவர் தனது பேஸ்புக்கில் அவர் வெளியிட்ட பதிவில் கூறுகையில் கிளினிக்கில் 60 வயது மதிக்கத்தக்க முதியவர் 3 நாட்களாக தலைசுற்றல் வாந்தி என்று என்னை சந்திக்க வந்தார். ரத்த அழுத்தம் பரிசோதிக்கப் பட்டது. 190/ 120 mm Hg இதை மிதமிஞ்சிய ரத்த அழுத்தம் என்று சொல்வோம்.
அவருக்கு ஏற்கனவே ரத்த அழுத்த நோயை நான் ஆறு மாதங்கள் முன்பு கண்டு கூறியுள்ளேன். ஆனால் அவர் சரியாக மாத்திரை எடுக்கவில்லை. அவர் எப்போது வந்தாலும் தர்க்கம் செய்வதில் வல்லவர். இந்த முறை நான் தயாராகவே இருந்தேன். இப்போது நான் கூறினேன்.

பிபி அதிகம்
" அய்யா உங்களுக்கு பிபி ரொம்ப அதிகமா இருக்கு . நீங்க மாத்திரை சாப்படுங்கய்யா . இதயம் , சிறுநீரகம் எல்லாத்துலயும் பாதிப்பு வரும்கய்யா. இனிமேலாச்சும் மாத்திரை சரியா சாப்டுங்க" என்றேன். அவர் சொன்னார் " எனக்கு இப்ப மட்டும் தலை சுத்தாம பண்ணுங்க. நான் மாத்திரை தொடர்ந்துலாம் சாப்ட மாட்டேன் தம்பி. எனக்கு மாத்திரை ஆகாது " என்றார்.

அதிக பிரஷர்
" அய்யா . இந்த அளவு அதிகமான பிரஷர் உங்க இதயத்துல பாதிப்ப ஏற்படுத்தும். பக்கவாதம் வரலாம் . தயவு செஞ்சு நீங்க மாத்திரை எடுங்க அதான் உங்க உடம்புக்கு நல்லது" " நீங்க என்ன படைச்ச கடவுளா சார்? மாத்திரை எடுக்கலனா எனக்கு இதயத்துல ப்ராப்ளம் வரும்னு உங்களுக்கு எப்டி தெரியும். சொல்லுங்க"

ரோட்ல போகும் போது
" அய்யா நீங்க ரோட்ல நடந்து போறீங்க . எதுத்தாப்ல ஒருத்தர் டூ வீலர்ல போறாரு. சைட் ஸ்டாண்ட் போட்ட படியே போறாரு . நீங்க என்னங்கய்யா பண்ணுவீங்க??" " சைட் ஸ்டாண்ட எடுக்க சொல்லுவேன்" " ஏங்கய்யா . அவன் அப்டியே போட்டும்னு விட வேண்டியது தான ??" "அவன் எங்கயாச்சும் ஸ்டாண்ட் தடுக்கி விழுந்துட்டான்னா உசுறு போய்டுமே??" " அவன் கண்டிப்பா கீழ விழுந்துடுவான். அவன் உசுறு போய்டும்னு சொல்ல நீங்க என்ன கடவுளா"

விஷயம் தப்பா இருக்கு
" ஒரு விசயம் தப்பா இருக்குறத பாக்றீங்க . அவனுக்கு ஏதோ தப்பா நடந்துடுமோனு பயப்பட்றீங்க . எச்சரிக்கை பண்றீங்க. நானும் அதத்தான் செஞ்சேன். மாத்திரை போட்றதும் போடாததும் உங்க விருப்பம் அய்யா" இதைத்தான் ஆங்கிலத்தில் Empathy என்பார்கள்
அடுத்தவருடைய இடத்தில் தன்னை வைத்து பார்ப்பது அடுத்தவருக்கு நேர இருக்கும் ஒரு பிரச்சனையில் இருந்து அவரை எச்சரித்து தடுப்பது. இது அடிப்படையான மனித குணம் என டாக்டர் பரூக் அப்துல்லா தனது பேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications