சிவகங்கை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

சீட் பெல்ட்டால் சிறு காயம் கூட ஏற்படாமல் உயிர் தப்பிய டிரைவரும், அவரது மனைவியும்.. வைரல் வீடியோ

Google Oneindia Tamil News

சிவகங்கை: காரைக்குடியில் இருந்து சிவகங்கை செல்லும் சாலையில் கார்-லாரி விபத்துக்குள்ளாகி உள்ளது. இதில் காரில் சென்ற தம்பதி சிறு காயம் கூட இன்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு இருவரும் சீட் பெல்ட் அணிந்து வந்ததே காரணம் என்கிறார்கள்.

போக்குவரத்து விதிகளை மதிக்க வேண்டும் என்று ஒவ்வொரு நாளும் போக்குவரத்து போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள். ஆனால் போக்குவரத்து விதிகளில் பல விதிகளை பொதுமக்கள் முறையாக கடைபிடிப்பதில்லை.

உதாரணத்திற்கு ஹெல்மெட் அணிவது, காரில் செல்லும்போது சீட் பெல்ட் அணிவது போன்றவை மிக அத்தியாவசியமான அவசியமான விதிமுறையாகும். இந்த விதிமுறைகளை கடைபிடித்தால் எதிர்பாராவிதமாக விபத்து நேரிடும்போது உயிரிழப்புகள் கூட ஏற்படும் அபாயம் உள்ளது.

 அறிவுறுத்தல்

அறிவுறுத்தல்

இந்த காரணங்களை வலியுறுத்தி தான் சென்னை உயர் நீதிமன்றம் ஹெல்மெட் விவகாரம் சீட்பெல்ட் விவகாரம் போன்றவற்றில் கடுமையான உத்தரவுகளை அவ்வப்போது பிறப்பித்து வருகிறது. போக்குவரத்து போலீசாரும் விதிமுறைகளை கடைபிடிக்க சொல்லி நாள்தோறும் சோதனைகளை செய்து வருகிறார்கள்.

 கண்டுகொள்வதில்லை

கண்டுகொள்வதில்லை


ஆனால் போக்குவரத்து போலீசார் சோதனை செய்யும் சமயங்களில் மட்டும் ஹெல்மெட் அணிவது சீட் பெல்ட் அணிவது போன்ற நற்காரியங்களை செய்கிறார்கள். மற்ற சமயங்களில் எதையும் கண்டுகொள்வதில்லை. இன்னொரு கொடுமையான விஷயம் என்னவென்றால் மது அருந்திவிட்டு பலரும் வாகனத்தில் செல்வது தான். ஒவ்வொரு மதுக்கடைகள் முன்பும் போக்குவரத்து போலீசார் ஐயோ அல்லது போலீசாரே நிறுத்தினால் ஏராளமான மக்கள் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவதற்கான அபராதத்தை செலுத்த வேண்டியதிருக்கும். அந்த அளவிற்கு நிலைமை மோசமாகத்தான் உள்ளது.

 கனரக வாகனம் மோதியது

கனரக வாகனம் மோதியது

சரி விஷயத்திற்கு வருவோம். சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் இருந்து சிவகங்கைக்கு செல்லும் சாலையில் இன்று ஒரு தம்பதி காரில் சென்று கொண்டிருந்தனர். எதிரே கனரக வாகனம் ஒன்று அதிவேகமாக வந்தது. எதிர்பாராதவிதமாக கார் மீது கனரக வாகனம் மோதியது.

 வாகனமும் சேதம்

வாகனமும் சேதம்

இந்த பயங்கர விபத்தில் காரில் உள்ள முன்பகுதி கடுமையாக சேதம் அடைந்தது. அதேபோல் கனரக வாகனத்தின் பின் பகுதி அவிழ்ந்தது. இவ்வளவு பெரிய விபத்தில் காரை ஓட்டிச் சென்ற டிரைவருக்கோ அல்லது அவருடன் வந்த அவரது மனைவிக்கோ எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.

சீட் பெல்ட் காரணம்

இதற்கு முக்கிய காரணம் சீட் பெல்ட். இப்போது நாம் போக்குவரத்து விதியை கடைபிடிக்க வேண்டும் என போக்குவரத்து போலீசார் சொல்வது படி, அந்த தம்பதி சீட் பெல்ட் அணிந்தது தான் உயிர் தப்ப காரணம். சிறு காயம் கூட இல்லாமல் இருவரும் உயிர் தப்பியுள்ளனர். எனவே சீட்பெல்ட் காரில் செல்லும் போது அணிவது அனைவருக்குமே நல்லது. இதைத்தான் விபத்திலிருந்து தப்பிய டிரைவரும் கூறினார்.

English summary
The driver and his wife who survived without even a minor injury due to the seat belt in sivangangai district at today: see the Viral video and his speech .
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X