அஜித் குமார் வழக்கு: மேல் அதிகாரிகள் சொன்னதைத் தானே செஞ்சாங்க.. கைதான 5 போலீசாரின் குடும்பத்தினர் தர்ணா
சிவகங்கை: சாப்பிடாமல் கொள்ளாமல்.. ஒரு நல்ல நாளைக்கு பிள்ளைங்க கூட ஒன்றாக எங்க கூட இல்லாம.. சான்றிதழை மட்டும் வச்சி என்ன செய்ய.. ஒரு தப்பு தவறு செஞ்சிருந்தால் பரவாயில்லை.. எங்க அப்பா எங்கே என பையங்க கேட்டா என்ன சொல்லுவோம்.. மேல் அதிகாரி சொல்றதை தானே செஞ்சிருக்காங்க.. மேல் அதிகாரிகள் என்ன சொன்னாலும் இவங்க செய்து தான் ஆக வேண்டும் என கைதான 5 போலீஸ்காரர்களின் மனைவி மற்றும் குடும்பத்தினர் திருப்புவனம் காவல் நிலையத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் நகை திருடிய வழக்கு ஒன்றில், மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் காவலாளியாக பணியாற்றி வந்த அஜித் குமார் ( வயது 28) என்பவர் போலீசார் விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட நிலையில், உயிரிழந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

சாப்பிடாமல், தூங்காமல் ட்யூட்டி பார்த்ததற்கு
வழக்கு விசாரணை ஒன்றுக்காக அழைத்து செல்லப்பட்ட நிலையில் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக 5 போலீஸ்காரர்கள் நேற்று இரவு கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கின் விசாரணையும் சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது. காவல்துறை தொடர்புடைய வழக்கை காவல்துறையே விசாரிப்பது சரியாக இருக்காது என்று எதிர்க்கட்சிகள் கூறி வந்த நிலையில் வழக்கின் விசாரணையை சிபிசிஐடிக்கு மாற்றி டிஜிபி உத்தரவிட்டுள்ளார்.
இதற்கிடையே, கைது செய்யப்பட்டுள்ள போலீஸ்காரர்களின் குடும்பத்தினர் திருப்புவனம் காவல் நிலையம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது நாங்களும் பொதுமக்கள் தானே.. சாப்பிடாமல், தூங்காமல் ட்யூட்டி பார்த்ததற்கு இதுதான் எங்க கணவர்களுக்கு தண்டனையா? உயர் அதிகாரிகள் சொன்னதை தானே செய்தார்கள்.. அவர் சொன்னதை செய்தது தவறா? எங்களுக்கும் உயிரிழந்த பையனுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது.. எங்க பிள்ளைங்க அப்பாவ எங்கே என்று கேட்டால் நாங்க என்ன சொல்லுவோம்.. என கதறி அழுதனர்.

அப்பா எங்கேன்னு கேட்டா என்ன சொல்வோம்
சாப்பிடாமல் கொள்ளாமல்.. ஒரு நல்ல நாளைக்கு பிள்ளைங்க கூட ஒன்றாக எங்க கூட இல்லாம.. ராத்திரி பகலுன்னு வேலை பார்த்தவங்களுக்கு இந்த நிலைமை.. ஒரு தப்பு தவறு செஞ்சிருந்தால் பரவாயில்லை. நீங்க எல்லாரும் இப்போ இவங்களை கைது பண்ணியிருக்கீங்களே.. இதனால் எங்களுடைய வாழ்க்கையே மாறிப்போயிருமே.. இதுக்கு என்ன பண்ணுவீங்க.. நாங்களும் பொதுமக்கள் தானே..
சாப்பிடாம கொள்ளாம வேலை பார்த்துருக்காருன்னு ஒரு நற்சான்றிதழை வைத்து நாங்க என்ன செய்யப்போறோம்.. எங்க பையன்களை வளர்த்திட முடியுமா.. நாங்க வளர்த்தாலும் எங்க அப்பா எங்கே என அவங்க கேப்பாங்களே.. எங்களுக்கு ஒரு நீதி வேண்டும்.. எங்க 6 பேர் குடும்பத்துக்கும் நீதி வேண்டும்.. எங்களுக்கும் இப்போ உயிரிழந்திருக்கிற அஜித் குமார் என்ற பையனுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை..
மேல் அதிகாரி சொல்றதை தானே செஞ்சிருக்காங்க..
மேல் அதிகாரிகள் என்ன சொன்னாலும் இவங்க செய்து தான் ஆக வேண்டும். அவங்க சொல்றதை தான் செஞ்சிருக்காங்க.. அவார்டு வாங்கி.. சான்றிதழ் வாங்கி என்ன பிரயோஜனம்.. அரசுக்காக தான் எங்க கணவர்களும் வேலை பார்த்தனர்.. மேல் அதிகாரி சொன்னா செய்துதானே ஆக வேண்டும்.. எங்க கணவர்களை ஏன் கைது பண்ண வேண்டும்.. அப்போ நீங்க எல்லாரும் சேர்ந்து எங்களுக்கு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் தானே.. அவங்க மனைவிமார்கள் 6 பேருக்கும் நீங்க ஒத்துழைப்பு கொடுக்கனும்.. என்று கூறினர்.
முன்னதாக திருப்புவனம் இளைஞர் அஜித்குமார் தாக்கப்பட்டதாக சொல்லப்படும் வீடியோ ஒன்று வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காக்கிச் சட்டை அணியாமல் இருக்கும் தனிப்படை காவலர்கள், இளைஞரை பிளாஸ்டிக் பைப் ஒன்றால் சரமாரியாக தாக்கும் காட்சிகள் இந்த வீடியோவில் இடம் பெற்றுள்ளது. பார்ப்பவர்களின் நெஞ்சை பதற வைக்கும் வகையில் இந்த வீடியோவானது இடம் பெற்றுள்ளது.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications