அஜித்குமார் மரணம்! கைதான 5 காவலர்களின் குடும்பத்தினர் திருப்புவனம் காவல் நிலையத்தை முற்றுகை
சிவகங்கை: சிவகங்கை மாவட்டம், மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமார் மரண வழக்கில் கைது செய்யப்பட்ட 5 காவலர்களின் குடும்பத்தினரும் திருப்புவனம் காவல் நிலையத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சிவகங்கை மாவட்டம், மடப்புரம் காளி கோயிலுக்குப் பெண் பக்தர் சிவகாமி, அவரது மகள் நிகிதா ஆகியோர் வந்திருந்தனர். சிவகாமிக்கு உடல்நிலை சரியில்லாததால், அவரைக் கண்ட அஜித்குமார், வீல் சேர் கொடுத்து உதவியுள்ளார்.

அப்போது நிகிதா, அஜித்குமாரிடம் காரை ஓரமாக நிறுத்திவிடுமாறு கேட்டார். அதற்கு அஜித்தோ, தனக்குக் கார் ஓட்டத் தெரியாது, வேறு யாரையாவது வைத்துப் பார்க்கிங் செய்யச் சொல்லுங்கள் எனக் கூறினாராம்.
இதையடுத்து, சிவகாமியும், நிகிதாவும் சுவாமி தரிசனம் செய்துவிட்டுக் காரை எடுத்தபோது, கார் சீட்டின் பின்னால் வைத்திருந்த 9 பவுன் நகையைக் காணவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த நிகிதா, நகை மாயம் குறித்துத் திருப்புவனம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
புகாரின் பேரில் அஜித்குமாரை திருப்புவனம் போலீஸார் விசாரணைக்கு அழைத்துச் சென்றனர். அப்போது அஜித்குமார் இறந்துவிட்டதாகத் தெரிகிறது. அவரை போலீஸார் அடித்ததால்தான் இறந்தார் என உறவினர்கள் போராட்டம் நடத்தினர்.

மேலும், அஜித்குமாரின் உடம்பில் 18 இடங்களில் காயம் இருந்ததாகப் பிரேத பரிசோதனை அறிக்கை சொல்வதாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியும் தெரிவித்திருந்தார். இந்த நிலையில், லாக் அப்பில் இளைஞர் மரணத்தை அரசியல் கட்சிகள் கடுமையாக விமர்சித்தன.
இது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்ற மதுரை அமர்வு நீதிமன்றமும், "இறந்த நபர் என்ன தீவிரவாதியா? அவர் கட்டாயப்படுத்தி அழைத்துச் சென்று கொல்லப்பட்டாரா? சாதாரண வழக்கில் விசாரணை என்ற பெயரில் அழைத்துச் செல்லப்பட்ட நபரை கடுமையாகத் தாக்கியது ஏன்?" எனக் கேள்வி எழுப்பியது.
மேலும், இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்றப்பட்டு, டி.ஜி.பி. சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். இந்த வழக்கில் 6 காவலர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ள நிலையில், மேலும் 5 காவலர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த 5 பேரும் வரும் 15ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்தச் சூழலில், காவலர்கள் சங்கரபாண்டியன், ராஜா, பிரபு, கண்ணன், ஆனந்தன் ஆகியோர் கைது செய்யப்பட்டதற்கு அவர்களது குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்துத் திருப்புவனம் காவல் நிலையத்தை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இதனால் பதற்றமான சூழல் நிலவுகிறது.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications